வியாழன், 11 மார்ச், 2010

மற்றுமொரு அதிர்ச்சி தகவல்
11
06
2009
மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

ஈழதேசம்.கொம் நிருபர்

இந்திய ராணுவம் இலங்கை காடுகளில் விடுதலைப் புலிகளை தேடும் பணியில் உள்ளனர். இலங்கை ராணுவத்தின் வழிகாட்டலில் இந்திய ராணுவம் காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி வருகின்றனர். கைது செய்து….சட்டத்தின் முன் போர்க் கைதியாக நிறுத்த அல்ல …..கொன்று ஒழிப்பதற்காக …..

கடைசி 72 மணி நேர யுத்தம் பற்றிய பல செய்திகள் உலக பத்திரிக்கைகள் மற்றும் இந்திய ஊடகவியலாளர்களும் ஒரு மர்ம நாவல் எழுதுவதை போல் பல உண்மைகளையும் அங்கு நடைபெற்ற கொடூர யுத்த மீறல்களை மறைத்து விட்டு ராஜபக்க்ஷே, சோனியா மனம் குளிரும் படி செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டனர்.

உண்மையில் நடைபெற்றது என்ன ?

முள்ளிவாய்க்கால் முழுவதும் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது மூன்று அடுக்கு ராணுவ வியூகம் இந்திய ராணுவத்தால் திட்டமிடப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்… 50 ஆயிரம் மக்களை கொன்று ..யுத்த விதிமீறல்களை செய்து, …. போரில் தோற்கும் நிலையில் இருக்கும் பொழுது சரணடைவது என்பது பொதுவான யுத்த விதிகள்.. சங்க காலம் தொட்டு இன்று வரை..

முதல் ராணுவ வளையத்தில் சிங்கள ராணுவம் புலிகளுடன் யுத்தம் நடத்தினர். …
இரண்டாவது இந்திய ராணுவ வளையத்தில்….. கடற் புலிகள் மற்றும் காயம் அடைந்த புலிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறும் பொழுது அவர்களை கொன்று அழிப்பது….
மூன்றாவது இந்திய ராணுவ வளையத்தில் …. யுத்தம் நடைபெறும் பொழுது அங்கிருந்து வெளியேறும் ( மற்ற நாடுகளில் தஞ்சம் அடையும் ) மக்களை தடுத்து கொல்வது, இதுதான் கடைசி மாதங்களில் நடந்த துயரம் …. இதற்க்கு சான்றாக இன்று வரை இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் அகதிகள் வெளியேறாமல் போன துயர சம்பவம் நடந்தது….இவை எந்த யுத்த நாடுகளிலும் நடைபெறாத மிகப்பெரிய போர்க் குற்றம் …..

இவ்வளவும் இந்திய ஆளும் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு செய்த மகாபாதக செயல்… யுத்தம் முடிந்தவுடன் …சிங்கள ராணுவம் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தற்பொழுது இந்திய ராணுவம் முழு அளவில் அங்கிருக்கும்….அங்கிருந்து வெளியேறிய மக்களை …..வவுனியாவிற்கு மற்றும் வெவ்வேறான முகாம்களுக்கு வலுக்கட்டையமாக கொண்டு அடைக்கும் பணியில் ….இந்திய ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன…

.இந்த மாபாதக செயல்கள் போதாதுஎன்று ….தற்பொழுது இலங்கை காட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கொன்று அழிப்பதற்கு முழு மூச்சுடன் இந்திய பார்ப்பன ஆளும் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது….

இவையெல்லாம் ஆளும் போலி….. தமிழின தலைவராக தானே பட்டம் சூட்டிக் கொண்ட MNC கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்…. தற்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கிறார்கள் ஈழத் தமிழனுக்கு விரைவில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று…..இவர்கள் விவாதித்து முடிந்தவுடன் ராஜபக்க்ஷே சமஉரிமை கொடுத்து விடுவார் என்று மக்களிடம் சொல்வார்கள்… தனது ஊடகங்கள் வழியாக….
இவற்றையும் உலக சமூகமும்….ஐ.நாவும் ஒப்புக் கொண்டு விடுவார்கள்…


ஈழதேசம்


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இந்திய உளவுதுறை ‘ரா’ அதிர்ச்சி… கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல…
11
06
2009
இந்திய உளவுதுறை ‘ரா’ அதிர்ச்சி… கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல… கை ரேகை ஒப்பீடு நிரூபணம்!

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் “கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது. தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்துவந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, “பிரபாகரன் போர்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…” என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது! ·

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் ‘நெற்றிக்கண்’ புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு: ·

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவதத்hல் படுகொலை செய்யப்பட்டார். ஆப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை ‘முரசொலி’யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்! ·

புpரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! ‘மாவீரன்’ பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து… ·

‘மாவீரன்’ பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது! · · கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன் – சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு (ஊஊP) மாற்றப்படுகின்றது! · பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிஸ்னர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு யுனுஐ- சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க- அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை யுனுஐ சண்முகம் பதிவு செய்தார்! · இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது! ·

1986ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசண்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்! ·

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிஸ்னர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலிஸ் கமிஸ்னர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிஸார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்! ·

1982ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்…. · 1986ல் சென்னை போலிஸ் கமிஸ்னர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்… தமிழக ‘க்யூ’ பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது ‘க்யூ’ பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்! ·

சுpங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஐpனல் பிரபாகரன்தானா என்பதை உறதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது! · சுரூயுறு அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். \

இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை – இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ3 லட்சம். · சுரூயுறு இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே18ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்;ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்! ·

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுனர்களுன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே19ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுனர்களின் துனையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை! ·

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு அமைப்பின் தென் இந்திய அணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்தள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது, இந்தியா திரும்பினார்! ·

இது தொடர்பான விரிவான அறிக்ரகையை ‘ரா’ டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்! · இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது! · கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் அகியுள்ளது!


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும், மனிதாபிமானக் குரல்கள் உரத்து ஒலிக்கட்டும் – விடுதலைப் புலிகள்
9
06
2009
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது.


இச்சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு அறிக்கை:தமிழீழ மக்களாகிய நாம் இலங்கைத் தீவில் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கில் எமது பாரம்பரியத் தாயகத்தின் இறைமை பொருந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது அரசியல் இலக்கை நோக்கி ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடன் போராடி வருகின்ற மக்கள் நாம்.

எமது உரிமைப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமைதிமுறையில், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டதில் நாம் கண்ட பட்டறிவு சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை வென்றெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் இலகுவில் முன்வரப்போவதில்லை என்பதே. இந்தப் பட்டறிவின் விளைவே தந்தை செல்வா அவர்களை இறைமையுள்ள தமிழீழமே எமது அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என்று தீர்மானிக்கவைத்தது. இதற்கான ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆணையை நிலைநாட்டியவரும் அவரே.

இதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவந்துள்ள தேசிய விடுதலைக்கான ஆயுதப் போரில் இந்த மக்கள் ஆணையை எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தேசியத்தலைவருமான மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முழுமூச்சாக முன்னெடுத்து தமிழீழ அரசை எமது கண்முன்னே நிறுவி, அதன் விடுதலைக்கான போராட்டத்தை ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கூடாக வலுப்படுத்தி, தமிழீழ மக்களின் ஆணையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார்.

தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும்.

எமது தாயக மண் எதிரியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் தமிழீழத் தேசியத்தைப் பிரதிபலித்து அதன் இறைமைக்கும் சுதந்திரத்துக்குமான அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாகப் பெரும்பங்காற்றவேண்டிய நிலையில் உலகத் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது வரலாற்றுக் கடமையின் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் செயலாற்றவேண்டும்.

தாயகத்தில் சொல்லொணாத் துயருறும் எமது உடன்பிறப்புக்களின் துயர்துடைக்கும் மனிதாபிமானக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கும், உலக மனிதாபிமானத்தின் கண்களை எமது மக்களின் இன்னல்களை நோக்கித் திருப்புவதற்கும் முழுமூச்சாக காலதாமதமின்றி உழைக்கவேண்டிய உடனடிக்கடமை எம்முன்னால் உள்ளது.

மனிதாபிமானக் கட்டமைப்புக்களையும், பரப்புரை வேலைகளையும் உரிய முறையில் நெறிப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்படவேண்டிய காலம் இது.

இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பினூடான ஜனநாயகக் கட்டமைப்புக்களைப் பரிணமிக்கச்செய்யும் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் கிளைகள் இயங்கும் நாடுகளில் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் தயாராகிவருகின்றது.

போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது என்ற சிந்தனைக்கமைய, தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் புலம்பெயர் மக்களின் அரசியற் பங்களிப்பினூடாகக் கூர்ப்படைந்துசெல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்ந்தவர்களாக, இதயசுத்தியுடன் ஒருமித்த மக்கள் பங்களிப்போடு சங்கமித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்த ஓர் அனைத்துலகச் சக்தியாய் முன்னெழுவோம்.

இதற்கு முன்னோடியாக, அந்தந்த நாட்டிற்கேயுரிய அரசியற் சிறப்பியல்புகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பங்களிப்பை உறுதிசெய்கின்ற நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பைப் பரிணமிக்கச் செய்யும் பணியை மேற்கொள்ளுவதற்கும் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்குமான வேலைத்திட்டங்களை அந்தந்த நாட்டுக்கிளைகள் முன்னெடுக்கும்.

இந்த ஒழுங்குகளுக்கு தேசியப்பற்றுக்கொண்ட அனைவரையும் பாகுபாடின்றி இதய சுத்தியோடு பங்குகொண்டு ஊக்குவிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இத் தருணத்தில் வேண்டிநிற்கிறது.

இந்த வேலைத் திட்டங்களுக்கான கருத்துப் பரிமாறல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் கிளைப் பொறுப்பாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
பொ.செம்மலை
தாயக ஒருங்கிணைப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
பெங்களூரில் சீமானின் வீரம் செறிந்த உரை
8
06
2009
விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3




மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா? – சீமான் ஆவேசம்
8
06
2009
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” நேற்று ஞாயிறு காலை நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர் பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.
மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.

ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த தமிழக ஓவியர் நடராசா மரணம்
8
06
2009


தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த தமிழக ஓவியர் நடராசா மரணம்

புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா “தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்’ என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார்.


இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத்துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே இலட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்” என்று முனகியபடியே இருக்கிறார். இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்” என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம்.
அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், “”இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்ல, புன்முறுவலோடு மெது வாகத் தலையசைத்தார் பெரியவர். உடனே அந்த நண்பர் “”இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு” என்று வருத்தப்பட்டார்.

அய்யா…’ என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், “”தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச் சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்” என்று அடிக்குரலில் பேசினார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார். பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன்.

என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, “எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள இராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும். எங்கட மக்களுக்குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா… சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக் கோம்’னாரு.

போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு. நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு.

இந்திய தேசியப் படையின் பிரிவு களுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு. என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும். இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல.

தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில… சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துடணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி “உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்’னு அவரே அறுத்தாரு. எதிரிக்கு சிம்ம சொப்ப னமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்.

ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, “அண்ணா… குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படி யிருந்தா நல்லதுன்னு சொல்வாங்கள்ல…’ என்று உற்சாகமாகச் சொல்ல… நானோ, “இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக’ என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன். தம்பியோ “அடப் போங்கண்ணா… என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா… சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு’ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.

கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்” என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், “”சற்று ஓய்வு எடுத்துக்கங்க…” என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும்.

ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு” என்று கண்கலங்கினார். மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள… “அய்யா அழைக்கிறாரா?’ என்றோம். எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ… “”அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா…” என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள்.

தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந்திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க… வாசகர்களின் சார்பில் அம் மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்
6
06
2009
இலங்கையின் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பு காரியாலயம் தெரிவித்துள்ளது


அதேநேரம், இளைஞர்களும் யுவதிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிலையத்தின் தகவல்படி, வன்னியில் இருந்து 276 ஆயிரத்து 785 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் இந்தக் கணக்கெடுப்பு தகவல் வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் ஐ.நா. மன்றம் வெளியிட்ட கணக்கெடுப்பு விபரத்தின்படி 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல! பிரபாகரனின் மகன்களில் 2 சார்ள்ஸ் அன்ரனிக்கள்?
6
06
2009
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.



சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருக்கிறார்களாம்!

நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”.

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியும், அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்ற செய்திதான் அது.

சார்ள்ஸ் அன்ரனி பிணமாக காட்சியளிக்கும் வீடியோ படங்கள், டி.வி. சனல்களில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? என்று புருவங்களை உயர்த்து முன் அடுத்த கட்டமாக பிரபாகரனே கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

பிரபாகரன் ஒரு அசாதாரணமான மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர். கடந்த 33 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் நீண்ட, நெடிய போராட்டத்தில் யார் கண்ணிலும் அகப்படாதவர்.

திட்டங்களை தீட்டி, கன கச்சிதமாக முடிக்கும் இந்த அமைப்பு பற்றி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது.

தற்போது சார்ள்ஸ் அன்ரனி மரணமடைந்ததாக சொல்லப்படுவதற்கும், பிரபாகரனின் “பிளாஷ் பேக்” கதைக்கும் பின்னணியில் சில “பகீர்” தகவல்கள் ஒழிந்து கிடக்கின்றன.

1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரன்- மதிவதனி தம்பதியினர் குடியிருந்தனர். இந்த தம்பதியருக்கு முதலில் பிறந்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.

இதே சமயத்தில் பிரபாகரனின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதில் விசேஷம் என்ன தெரியுமா? அந்த குழந்தைக்கும் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயர் சூட்டப்பட்டது தான்!

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்களும் ஒன்றாகவே பிரபாகரன் வீட்டில் வளர்ந்தார்கள். இது பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருப்பதை எப்போதும், யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இரு குடும்பத்தினருக்கும் கட்டளையிட்டிருந்தார் பிரபாகரன்.

இருவருமே வளர்ந்து, வாட்ட சாட்டமான வாலிபர்களானார்கள். இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு விசேஷமான தாக்குதல் பயிற்சிகளை கற்றனர்.

இதன் பின்னர் லண்டனில் உள்ள மிகப் பிரபலமான கல்லூரி ஒன்றில் விமானம் பற்றிய ஏரோ நாட்டிகல் என்ஜினீயரிங் படப்படிப்பு படித்துள்ளனர்.

இதையடுத்து தனது உறவினர் மகனான சார்ள்ஸ் அன்ரனியை பிரபாகரன் தன்னுடன் இலங்கையில் வைத்துக்கொண்டார். தனது சொந்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்கச் செய்தார்.

இந்த நிலையில் தான் தன்னுடன் இருந்த சார்ள்ஸ் அன்ரனியை வான்படை தளபதியாக்கி போர்க்களத்தில் குதிக்கச் செய்தார்.

பலவிதமான போர் பயிற்சிகளை பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி 2 முறை விமானத்தில் பறந்து சென்று கொழும்பு நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவத்தை மிரட்டியவர்.

அந்த சார்ள்ஸ் அன்ரனியைத்தான் இலங்கை இராணுவம் கடந்த மாதம் சுட்டுக்கொன்றது.

அப்படியானால் நிஜமான சார்ள்ஸ் அன்ரனி? அவரது புகைப்படத்தை கூட இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் பத்திரமாக இருக்கிறார் என்கிறது புதிய தகவல்கள்.

அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் பிரபாகரனும், சார்ள்ஸ் அன்ரனியும் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி விடுதலைப்புலிகளின் வீர வணக்க நாள் அன்று அவர்கள் இருவரும் உலக டி.வி.க்களில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட இன்னும் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் ஆவேசத்துடன் போருக்கு காத்திருக்கிறார்கள். அவர்களின் புதிய தலைவராக தனது வாரிசு சார்ள்ஸ் அன்ரனியை அன்றைய தினம் பிரபாகரன் அறிவிப்பார் என்கின்றனர்.

தனக்கு வயதாகி விட்டதால் சில முக்கிய பணிகளை மட்டும் தான் மேற்கொள்ளப்போவதாக அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய தலைவர் ஒருவர் அவர்களுக்கு தக்க பாதுகாப்புகளை வழங்கி வருவதாக கூறுகின்றனர்.

ஒரு நீண்ட, நெடிய விடுதலைப்போரில் என்ன வெல்லாம் நடக்கும்? எத்தகைய நெருக்கடி சூழ்நிலைகள் ஏற்படும் என்பது போன்ற விஷயங்களை பிரபாகரன் நன்றாக அறிந்தவர்.எதையும் தீர்க்கமாக அறிந்து செயல்படுபவர்.

எனவே, அவர் விஷயத்தில் “சுட்டுக்கொலை” என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கிற விஷயமல்ல! அவர் இலங்கையில் இல்லாததை தெரிந்து கொண்ட சிங்கள அரசு நடத்திய நாடகம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உலகமே மிக ஆவலாக காத்திருக்க தொடங்கியிருக்கிறது, வருகிற 27-11-2009 அன்று தொலைக்காட்சிகளை காண!

ஒரு வேளை, அது மீண்டும் தமிழ் ஈழப்போர் ஏற்படும் நாளாகவும் இருக்கலாம்!

இத்தகவலை மாலைமலர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
கடைசி நாட்களில் 3000 முதல் 5000 வரையான மக்களே பலியாகினர்; இலங்கை அரசு: ஆசிய மனித உரிமை கண்காணிப்பு அதிகாரி பிரட் அடம்ஸ் மறுப்பு
6
06
2009
அரசு அறிவித்த போரற்ற பகுதியில், போரின் கடைசி நாட்களில் மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. என்று கூறியுள்ளார் இலங்கை பேரிடர் நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் ரஜீவ விஜேசிங்க.
அவர் கூறுகையில், மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் கடைசி நாட்களில் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. அதேபோல ஏப்ரல் மாத கடைசியில் 7000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுவதிலும் உண்மை இல்லை. என்று இலங்கை அரசு பொயப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.கடைசி நாட்களில் 5000 பேர் கொல்லப்பட்டதற்கும் கூட இராணுவம் காரணம் அல்ல. அவர்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதே இந்த மரணத்திற்குக் காரணம்.
ஐ.நா. அறிக்கை கூறுவதை நம்ப முடியாது. காரணம், அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் இல்லை.

இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று ஜனாதிபதியே அறிவித்திருந்தார். நானும் இராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது.

81 எம்எம் மோர்ட்டர்களை மட்டுமே இராணுவம் பயன்படுத்தியது. ஆனால் விடுதலைப் புலிகளோ டாங்குகளை பயன்படுத்தி தப்பி ஓட முயன்ற தமிழர்களைக் கொன்றனர் என்றார் விஜேசிங்க.

ஆனால் விஜேசிங்கவின் இக்கூற்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய மனித உரிமை கண்காணிப்பு என்ற அமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் மறுத்துள்ளார்.

ஆயுதங்களில் கனரக ஆயுதம் என்பதை நிர்ணயிக்க எந்தவித அளவுகோலும் இல்லை. போரின் முடிவின்போது, மிகக் குறுகிய பரப்பளவுக்குள் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் முடக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் அது பேரழிவுக்கே வழி வகுக்கும்.

புலிகள் வசம் இருந்த பகுதியிலிருந்து போரற்ற பகுதிக்கு போகுமாறு அரசு மக்களை வற்புறுத்தியது. அதை நம்பி மக்கள் அங்கு பெரும் திரளாக சென்றனர். ஆனால் அங்கு வந்தவர்களையும் இராணுவம் கொடூரமாக தாக்கியது.

81 எம்எம் மோர்ட்டர் தவிர வேறு பல கனரக ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தியது மறுக்க முடியாத உண்மையாகும். இதை அவர்கள் திரும்பத் திரும்ப மறுத்து வருகிறார்கள். இலங்கைப் படையினர் கடுமையான போர்க் குற்றத்தை செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்கிறார் பிரட் அடம்ஸ்.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
கப்டன் அலி கப்பல் கடற்படையினரால் தடுத்து வைப்பு
6
06
2009
கப்டன் அலி கப்பல் கடற்படையினரால் தடுத்து வைப்பு;அரசின் அனுமதியுடன் பொருட்களை வழங்கவுள்ளவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு

வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த இக்கப்பலை பாணந்துறை கடற்பரப்புக்கு மேற்கே 150 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து நேற்றுக் காலை 4 மணியளவில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மேர்சி மிஷன் டூ வன்னி(வணங்கா மண்) எனும் பதாகையைத் தாங்கி சிரிய நாட்டுத் தேசியக் கொடியுடன் வந்த இக்கப்பலில் பயணம் செய்த 15 வெளிநாட்டு மாலுமிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வரும் இக்கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்பட்டன. இக்கப்பலில் பயணித்தவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை இலங்கை அரசின் உரிய அனுமதி பெற்று தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடக மேற்கொண்டுள்ளதாக வணங்கா மண் ஏற்பாட்டு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை

புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி புறப்பட்ட வணங்கா மண் கப்பல் நேற்று (04-06-2009) அதிகாலை இலங்கைக்கருகில் சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உணவும், மருந்துகளும் மட்டுமே இருப்பதனை உறுதி செய்த பின்னர் சிறிலங்கா கடற்படையினரால் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கடற்படையின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களை சிறிலங்கா அரசின் உரிய அனுமதி பெற்று, தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்கொண்டுள்ளோம் என்பதனை அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக