திங்கள், 19 ஜூலை, 2010

புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டியெழுப்பக்கூடிய உறுப்பினர்கள் இன்னமும் உள்ளனர்

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பற்றாக்குறை இருந்திருக்கலாம், ஆனால் நன்கு திட்டமிடப்பட்டு சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் கட்டியெழுப்பப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அவர்கள் விரைவில் இராணுவத்திற்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தக்கூடும் எனவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சில முக்கிய நபர்கள் தப்பிச் சென்றதாகவும், அவர்களே புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்ப முனைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் தமது உறுப்பினர் தொடர்பான ஆவணங்களை முள்ளிவாய்க்காலில் வைத்து எரித்திருப்பதாகக் கூறப்படுவதும், இலங்கை இராணுவம் இதுவரை புலிகளின் உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய கோவையை கைப்பற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

புலிகள் இறுதிவரை சில ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவை மே16 இல் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட முன்னர், சுமார் 1 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் அவர்கள் முடங்கியபோது, பல நேர்த்தியான திட்டங்கள் தலைமையினால் போடப்பட்டதாகவும் தெரிவிக்கிறது சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம்.

இதன் காரணமாகவே இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதாகவும், புலிகளில் யார்யார் இறந்துள்ளனர், யார் தமது கட்டுப்பாட்டில் உள்ளனர் மற்றும் தடுப்புமுகாமில் இருக்கும் விடுதலை புலிகள் யார் என்பது குறித்து தகவல் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இலங்கை அரசாங்கம் தடுப்புமுகாமில் உள்ள மக்களை வெளியே அனுமதிக்காமல் இருக்க, இப்படியான தகவல்களை வெளியிட்டு ஒரு பரப்புரையை மேற்கொள்ளலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போர் முடிவுற்றுப் பல நாட்கள் ஆகியுள்ள நிலையில் சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம் இவ்வாறு ஒரு அறிவித்தலை விடுவது சந்தேகமாக உள்ளதென, ஆராய்வாளர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தனர்

இறுதிப் போரை நேரில் கண்ட சிவரூபன்
கொடூரத்தை விவரிக்கிறார்


இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி௧7 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே௧7 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே௧8 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஈம்மிக்ரடிஒன்) மற்றும் சுங்கம் (Cஉச்டொம்ச்)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (ஓபெரடிஒன் Cகெcக்மடெ) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)



"மாவீரர்களே உங்களைப் புதைத்த மண் உறங்காது உரிமை பெறும்வரை கலங்காது எங்களின் தாயகம் விடிவு பெறும் புலி ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும்."

மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

மேதகு வே பிரபாகரன் அவர்கள்

;IF YOU WOULD LIKE TO SEND MAVERAR HISTORY PLEAS

23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர்
[புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]



தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.


அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்:

விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர்.

மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் உலகின் மிகப் பயங்கரமான கெரில்லா கடற்படையாக இருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு அவர்கள் பலரை இணைத்து வருகின்றனர்.

இஸ்ரேலியத் தயாரிப்பான டோராப் படகைக் கொண்டு பெண் கடற்புலியொருவர் அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தார்.

பூகோள ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பானது கடலுடன் தொடர்புபட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எண்ணுகிறார்.

தங்களின் கடற்படை பலம் வாய்ந்ததாக இருந்தாலே தங்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் தரைப் பகுதியினைப் பாதுகாக்க முடியும் என்றும் எதிரியை விரட்டியடிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

விடுதலைப் புலிகளின் கடற்படையானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருவதற்கு இதுவே காரணம்.

user posted image
நன்றி ஈழவிசன்

பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்கள் பலருக்கும் கடலுடன் வரலாற்று ரீதியான பிணைப்பும் உள்ளது.

விமான ஓடுபாதையை விட பிரபாகரனின் மனதை நெருங்கியது கடலாகும்.

விடுதலைப் புலிகளிடம் தொடக்கத்தில் சில மீன்பிடி இழுவைப் படகுகளும் கண்ணாடியிழைப் படகுகளுமே இருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே மக்களையும் பொருட்களையும் வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு கொண்டு சென்று கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆயுதக்கப்பல்கள் மட்டுமல்லாது சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர். கடந்த சில வருடங்களில் அவர்கள் துரித வளர்ச்சியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக விடுதலைப் புலிகளின் கே.பி என்பவர் உள்ளார். கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்டுவரப்படுமாயின் அதன் செயற்பாடுகளை சூசை கவனிக்கிறார்.

கே.பி. மற்றும் சூசை ஆகியோரின் செயற்பாட்டினால் இன்று விடுதலைப் புலிகளின் கடற்படையானது போராளிகள், மாலுமிகள், கப்பற் பொறியியலாளர்கள் மற்றும் கப்டன்கள் என வளர்ச்சி கண்டுள்ளது.

கடற்புலிகளின் பொறுப்பாளராக 1991 ஆம் ஆண்டு சூசை நியமிக்கப்பட்டார். இவரின் செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பக்கபலமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக யுத்தத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயத்திற்காக சூசைக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கவும் விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் பலமானது 10 முதல் 15 வரையாக உள்ளது என்று டொக்டர் விஜய் சக்குஜா கடந் ஆண்டு மதிப்பீடு செய்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் செயற்பாடுகள் சிங்கப்பூரிலிருந்து சோழன் கப்பல் வாங்கப்பட்டதையடுத்தும் கேரளாவில் கடல்புறா கப்பல் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும் 1984 ஆம் ஆண்டு தொடங்கின.

அவர்களிடம் தற்போது நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய 11 கப்பல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக தென்னாப்பிரிக்காவிடமிருந்த�
� கொள்வனவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலுடன் அவர்களின் கப்பல்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது என்று புலனாய்வுப்பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கப்பல்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தன. சீன ஆயுதங்களை எடுத்து வருகையில் பல்லவன் கப்பல் சென்னையில் வைத்துக் கைப்பற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு சன்பேர்ட் கப்பல் மலேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டது. ஹொரிசன் கப்பல் 1996 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

அண்மையில் கப்பலைச் சோதனையிட அனுமதியளிக்காமையினால் சோரின் மற்றும் கொய்மார் ஆகிய கப்பல்கள் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானது.

மரம், அரிசி, உரம் போன்றவற்றைக் கொண்டு செல்வதில் இவர்களின் கப்பல்கள் ஈடுபடுகின்றன. சில கப்பல்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுகிறது.

உக்ரெயினிலிருந்து ரி.என்.ரி, ஆர்.டி.எக்சும் கம்போடியாவிலிருந்து சாம்- 7 உம் கப்பல்களில் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

பல படகுகள் ஒன்றாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று திடீரென கடற்படையின் ராடர் இயந்திரத்தில் தெரியத்தக்க வகையில் வந்து உடனடியாக தாக்குதலை நடத்திய பின்னர் ஒவ்வொன்றும் திசைக்கொன்றாக செல்வதால் எந்த படகிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை அடையாளம் காண்பது கடற்படையினருக்கு சிரமமாக உள்ளது.

இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறைகளில் ஒன்றாக உள்ளது. அவர்களின் டோராப் படகுகளும் ஏனைய படகுகளும் தொழில்நுட்ப ரீதியில் அதிகம் முன்னேறியவையாக உள்ளன.

15 வினாடிகளுக்குள் புலிகளின் வெடிபொருள் நிரப்பிய படகுகள் வந்து தாக்குதலை நடத்துகின்றன. விடுதலைப் புலிகள் தங்கள் படகுகளில் குறைந்தபட்சம் இரண்டு 80 குதிரைவேக என்ஜின்களைப் பொருத்தியுள்ளனர்.

user posted image
நன்றி ஈழவிசன்


1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பல்வேறு தாக்குதல்களினால் கடற்படையின் ரோந்துச் சேவைகள் வலுவிழந்திருந்தன.

இஸ்ரேலிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு விடுதலைப் புலிகள் டோரா மற்றும் சுப்பர் டோராப் படகுகள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

1990 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது கடற்படையின் எடிதார கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது.

ஓராண்டிற்குப் பின்னர் இதேபோன்றதொரு தாக்குதலுக்கு கடற்படையின் அபித கப்பல் இலக்கானது.

யுத்த நிறுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையை அமைத்துள்ளமை பற்றிக் கவனம் செலுத்துபவர்கள் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை.

எனினும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையை ஓரிரு நிமிடங்களில் குண்டுவீசித் தகர்த்துவிடலாம் என்றும் அவர்களின் விமான ஓடுபாதை குறித்த விவாதத்திற்கு பதிலளிக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்த நிறுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கடற்பலமானது தற்போது அதிகரித்து வருகின்றது. கண்காணிப்புக்குழுவின் தலைவராக இருந்த ரிக்வே டெலெப்சன் விடுதலைப் புலிகளுக்கு சார்ப்பானவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

விடுதலைப் புலிகளின் கடற்பலத்தை கண்கூடாக அறிந்திருந்த அவரால் தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறும் போது கூட அதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது போனது. சாலை மற்றும் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கடற்படை தங்களின் செயற்பாடுகளை பலம் மிக்கதாகக் கொண்டு நடத்துகிறது.

இது தனது எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துச் செல்லவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் பார்வையிலிருந்து கப்பல்களையும் அப்புறப்படுத்துகிறது. ஒரு கப்பலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வது இலகுவான முறையாக இருந்தாலும் இதற்கென அதிக நேரம் வேலை செய்தாக வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் அனேகமாக கடும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு பூ யுவான் யா - 225 எனும் பெயரைக் கொண்ட சீன மீன்பிடி இழுவைப் படகின் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பயணம் செய்த 26 பேரில் 9 பேரே காப்பாற்றப்பட்டனர். பூ யுவான் யா - 225 வை கடற்படையினரே பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று விடுதலைப்புலிகள் நம்பினர்.

கடற்படையினரைப் போன்று விடுதலைப் புலிகள் தங்களின் உறுப்பினர்களை கடற்கரையோரம் நிறுத்தி வைப்பதில்லை. அதேபோன்று அவர்களை அதிக இடைவெளியிலும் நிறுத்துவதில்லை. அப்படிச் செய்தால் அவர்களால் விரைவில் தாக்குதல்களுக்கு ஒன்று சேர்வது இயலாமல் போகும்.

கடற்புலிகளிடம் அவர்களின் புலனாய்வுத்துறையும் உள்ளது. அவர்களின் சுழியோடிகளினால் கடற்படை முகாம்கள் பற்றியத் தகவல்களை அறியமுடியுமாக உள்ளதுடன் மூழ்கும் கடற்படைக் கப்பலிலிருந்து தேவையானவற்றைப் பெற முடியுமாகவும் உள்ளது. அவர்களின் நீர்மூழ்கி ஸ்கூட்டர்கள் பலவகையிலும் அவர்களுக்கு உதவுகிறது. கடற்புலிகளின் கப்பல்கள் ராடார் வசதிகள் இரவு நேரங்களில் பயணிப்பதற்கான வசதிகளுடன் தரையுடன் சம்பந்தப்பட்டதான ராடார் வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆட்களை ஏற்றியிறக்கும் நடவடிக்கைகளிலும் கடற்புலிகள் பெரும் பணியாற்றுகின்றனர். சிறிலங்கா படையினரால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாக்கப்படுகையில் அவர்கள் கரையோரத்திற்கு வரும்போது கடற்புலி உறுப்பினர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

2000 ஆம் ஆண்டு கடற்புலிகள் திருமலை கடற்படை முகாமிற்குள் ஊடுருவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். கடந்த இரு தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் பெருமளவு உயிரிழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவரின் சிந்தனைகள்

இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சமாதானத்தை நான் ஆத்ம பூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக சுதந்திரமாக கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன்;. இலைமறைகாயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள்கொடுத்தவரும; எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
குட்டக்குட்டக் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலை நிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையேசாரும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும். வரலாற்று புறநிலை தோன்றியிருக்கின்றது.

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"


தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!

ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…

“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.

ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.

இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

தமிழில் ராணுவக் கல்வி!

தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.

Image

இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.

இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…

Image

இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.

Image

புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.

Image

வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:

[img width="200" height="200"]http://www.eelamhomeland.com/forum/postsimage/MM/44d.jpg[/img]

தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.

இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.

அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.

தமிழீழ வான்புலிகள் நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் (கேணல் சங்கர்) பொறுப்பில் ஆரம்பமான வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முக்கிய இடங்களில் இந்தியாவின் இந்திரா நவீன ரக ராடர்களைப் பொருத்தியுள்ள போதிலும், அவற்றின் திரைகளுக்கு வான்புலிகளின் விமானம் தெரியாமல் மர்மமாகப் பறந்து சென்று இலக்குத் தவறாமல் குண்டு வீசுவது தான் விந்தை.


"காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்" எனும் சுலோகத்தைத் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்.

1. 26 மார்ச் 2007 – கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல்
2. 24 ஏப்ரல் 2007 – பலாலி இராணுவத்தளம் மீதான குண்டுவீச்சு
3. 29 ஏப்ரல் 2007 – கொலன்னாவ எண்ணெய் சேகரிப்பு நிலையம் மீதான தாக்குதல்
4. 22 ஒக்டோபர் 2007 – அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதல்
5. 27 ஏப்ரல் 2008 – வெலிஓயா படைமுன்னரங்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்
6. 26 ஓகஸ்ட் 2008 – திருக்கோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்
7. 9 செப்டம்பர் 2008 – வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல்
8. 28 ஒக்டோபர் 2008 – மன்னார் தள்ளாடி இராணுவத்தலைமையகம் மீதான தாக்குதல்
9. 29 ஒக்டோபர் 2008 – கொழும்பு கனனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தாக்குதல்

பிரபாகரன் படை - அதிரடித் தளபதிகள் அறிமுகம்
ஆனந்த விகடன் அசத்தல் ரிப்போர்ட்

prabaharan0001.jpg

லங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில், அப்பாவித் தமிழர்கள் அல்லறுகிறார்கள் என்கிற துன்பச் செய்தி நம் இதயத்தை பிளக்கும நேரத்தில், இலங்கை ராணுவத்தை எதிர்த்து வரும் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது கடந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ‘பிரபாகரன் படை’ என்கிற அலசல் கட்டுரை! நீங்களும் படித்து அறியுங்கள்…

1975, ஜூலை 27.

பிரபாகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டைத் துப்பிய நாள். யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவைக் சுட்டுக் கொன்றது அது!

16 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவரின் வாழக்கை, இப்போது காடுகளுக்குள், பதுங்கு குழிகளுக்குள், பிரபாகரனையும் அவரது உளவுப் படைத் தளபதி பொட்டு அம்மனையும் கைது செய்யும் நாளில்தான் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த வாரத்தில் கர்ஜனை செய்துள்ளார் மகிந்தா ராஜபக்ஷே. அவரது ராணுவத்துக்குத் கடந்த 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் படை. முன்று நாட்களில் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கிவிடுவோம்., 30 நாட்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்று ராணுவம் சொன்னாலும் புலிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் மிரட்டுகின்றன!

தன்னிடம் ராணுவப் பயிற்சி பெற்ற மாத்தையா, கிட்டு, விக்டர், பிலேந்திரன், குமரப்பா ஆகிய 5 பேரைத் தன் தளபதிகளாக பிரபாகரன் அறிவித்ததுதான் இந்த இயக்கத்தின் முதல் அத்தியாயம். அரசியல் பிரிவும் ஆரம்பிக்கப்பட்து. போராளிகள் திரள ஆரம்பித்தார்க்ள. ஆனால், பணமும் ஆயுதமும் இல்லை. கப்பல் கம்பெனி ஆரம்பித்து கடல் வர்த்தகத்தில் இறங்கினார் பிரபாகரன். அடுத்த சில ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல் கம்பெனிகள் உருவாகின. வர்த்தம் செய்தது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்து வரவும் இந்தக் கப்பல்கள் பயன்பட்டன.

இவர்களுக்கான ஆயுத பரிவர்த்தனைகள் அனைத்தையும் இன்று வரை செய்து கொடுப்பதாகச் சொல்லப்படுபவர் கே.பி. என்ற குமரன் பத்மநாபன். ஹாங்காங்கில் கைது, தாய்லாந்தில் கைது என்று செய்திகள் வருமே தவிர, இன்று வரை, இண்டர்போல் உட்பட யார் கையிலும் சிக்காதவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் படித்தவர், தெற்காசியாவில் இருக்கிறார் என்று மையமாகச் சொல்வார்கள். ஆயுத சப்ளையில் புலிகள் இயக்கம் தவிர்த்து, இந்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதல் பலத்தைக் கொடுத்தன. வட கிழக்கு மாகாணங்கள் என்று சொல்லப்படும் தமிழர் பகுதிக்குள் மொத்தமாக சிங்கள ராணுவத்தைத் தடுக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்களாக வலம் வந்தார்க்ள.

இன்றைய நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகள் புலிகள் வசம் உள்ளன. இங்கு அரசாங்கமே இவர்கள் கையில். கல்வி, மருத்துவம், காவல், நிதி ஆகிய முக்கியமான துறைகளின் மூலமாக இப்பகுதியில் நிர்வாகம்செய்கிறார்கள். மூன்று அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. சட்டக்கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வரதட்சினை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டனை. சாதிவிட்டுச் சாதி கல்யாணம் செய்வதை தடுத்தால் தண்டனை. பள்ளிகளில் புதிய பாடத் திட்டங்கள். அனைத்துமே தமிழ் வழியில்தான் படிப்பு. ஆங்கிலமும் ஒரு மொழியாகக் கற்றுத் தரப்படுகிறது. மருத்துவம் உள்பட அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டுவந்துவிட்டார்கள். வேளாண்மைப் பண்ணைகளின் மூலம் விவசாயம் நடக்கிறது. தமிழீழ வைப்பகம் என்ற வங்கி கிளிநொச்சியில் இருக்கிறது. இதற்குப் பல்வேறு இடங்களில் 12 கிளைகள் உள்ளன. ஆதரவற்ற பிள்ளைகள் வாழ செஞ்சோலை என்பது வரை தங்கள் பகுதியில் தனி அரசாங்கத்தை அமைத்து அவற்றை தளபதிகளின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த நிர்வாகத்துக்கும் புலிகளின் ராணுவ அமைப்புக்கும் பெரிய தொடர்புகள் எதுவும் இருக்காது. தலைவர், துணைத் தலைவர், பிரிகேடியர், சிறப்பு தளபதி, தளபதி, கர்னல், லெஃப்டினென்ட், இரண்டாம் லெஃப்டினென்ட், போராளி எனப் பதவி அடுக்குகள் கொண்டது புலிகள் அமைப்பு.

தலைவர் பிரபாகரன். துணைத் தலைவராக மாத்தையா இருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பதவியில் யாரும் அமர்த்தப்படவில்லை.

பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இன்று இருப்பவர் அரசியல் துறையைத் கவனிக்கும் நடேசன். இலங்கை அரசில் போலீஸ்காரராக இருந்தவர். அப்படியே இடம் மாறி, தமிழீழ காவல் துறையை உருவாக்கியவர். இவர் மனைவி சிங்களப் பெண்ணாம். தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பிறகு அரசியல் விவகாரங்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்த முக்கியத்துவம் பொட்டு அம்மனுக்கு. புலிகளின் புலானய்வுப் படை இவர் கையில். ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனுடன் தேடப்படும் நபர் சண்முகநாதன். சிவசங்கரன் என்பது இவர் பெயர்.

கடற்புலிகளின் தளபதி சூசை, காட்டுக்குள் பிரபாகரன் நினைப்பதைச் கடலுக்குள் சாதிக்கும் சாமார்த்தியச்சாலி. கல்விக் கழகத்தைக் கவனிப்பவர் இளங்குமரன். இவரை பேபி சுப்பிரமணியம் என்றால் தமிழ்நாட்டுக்குத் தெரியும். தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர். சமய நூலாக்கப் பிரிவு என்ற அணி, இதுவரை உலக நாடுகளில் உள்ள போர்த் தந்திரங்கள் ஆயுத வரவுகளைப் படித்து புலிகளுக்குப் பாடம் நடத்துகிறது. இது யோகி என்பவரின் பொறுப்பு. நிதித்துறை, தமிழேந்தி என்பவர் வசம்.

பெண் புலிகளின் ராணுவப் பிரிவை விதாஷா, அரசியல் பிரிவை தமிழினி ஆகியோர் நடத்துகின்றனர். இவர்களை அடுத்துதான் மற்ற தளபதிகள் அணி வகுக்கிறார்கள்.

அடுத்த முக்கியத்துவம் பிரசார அணிக்கு. அரசியல் ஆய்வுகளை பாலகுமார் (பழைய ஈராஸ் தலைவர்), ம.திருநாவுக்கரசு ஆகியோர் கவனிக்கிறார்கள். புலிகளுக்கு ஆதரவாக வரும் பத்திரிகைகள், இணையதளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் பட்டியல் கணக்கில்லாதது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1983ல் இருநது இன்று வரை வரும் ஏடு விடுதலைப் புலிகள். இதன் ஆசிரியராக இப்போது ரவி என்பவர் இருக்கிறார். ஈழ நாதம் நாளிதழ் கிளிநொச்சியில் இருந்து வருகிறது. எரிமலை கலை இலக்கிய மாத இதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் சிங்களத்திலும் ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியை தமிழன்பன் என்பவர் கவனிக்கிறார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் ஒலிபரப்பாகிறது. சிறு சம்பவம் நடந்தாலும் அதை மறு நிமிடமே இவாகள் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு பரப்புரைப் பிரிவு என்று பெயர்.

புலிகள் சொல்லும் கணக்குப்படி, காடுகளுக்குள் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதிகபட்சம் ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்கிறது சிங்கள உளவுத்துறை.

சீருடை அணிக்கு போராளிகள் நீங்கலாக மக்கள் படை அமைப்பு சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தினமும் காலையில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டை, கம்பு வைத்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கையில் விவசாயக் கருவியும், இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்துத்தான் வியட்நாம் புரட்சி நடந்தது என்ற ஐடியா. இது தங்களைத் தாங்களே பாதுகாக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது புலிகள் கட்டளை.

தென் இலங்கையையும் தமிழீழப் பகுதியையும் பிரிக்கும் நெடுஞ்சாலையில் அந்தப்பக்கம் சிங்கள ராணுவத்தின் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட படையும் இந்த பக்கம் புலிகள் தரப்பும் நிற்கின்றன. கடைநிலைப் போராளிகள்தான் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களைத் தாண்டி 20க்கும் மேற்பட்ட சிறப்புப் படையணிகள் காத்திருக்கின்றன. போரில் இங்கு சார்லஸ் ஆண்டனி, இம்ரான் பாண்டியன், மாருதி விக்டர், கிட்டு ஆகியோர் பெயரில் இந்தப் படை அணிகளை பிரபாகரன் உருவாக்கியுள்ளார். பெண் புலிகளின் படைகள் மாலதி, அன்பரசி ஆகிய பெயர்களில் உள்ளன. இவை தவிர விமான எதிர்ப்புப் பீரங்கி, மோட்டார், கவச வாகனம் ஆகிய தனிப்பிரிவுகளும் உள்ளன.

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க போர்க் கருவி தொழிற்சாலையும், வெடிபொருள், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், ராணுவ விஞ்ஞானக் கல்லூரியும் இருக்கின்றன.

ஆரம்பத்தில் சிங்கள ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது கடற்புலிகள். கடந்த இரண்டாண்டுகளாக வான்புலிகள் வெலவெலக்கவைத்து வருகிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வான வேடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்து இன்று வரை 8 இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் அனுராதபுரம், வன்னியில் நடத்திய தாக்குதல்களில்தான் உயிரிழப்புகள் அதிகம். சமீபத்தில் சிங்கள ராணுவ தளம், அனல் மின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்திய பிறகுதான் இரண்டு விமானங்கள் அவர்களிடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாம். புலிகளுக்கு பிரபாகரன் விருதுகள் வழங்கிய நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இது போன்ற சில நிகழ்ச்சிகளில்தான் பிரபாகரனை முக்கியத் தளபதிகளால் கூடப் பார்க்க முடியும்.

தமிழ்ச்செல்வன் மரணத்துக்குப் பின்னால், பிரபாகரனின் இடத்தைக் கண்டுபிடிக்க பகீரத முயற்சிகள் நிகழ்ந்தன. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி என்ற இடத்தில் திடீர் தாக்குதலை சிங்கள் ராணுவம் நடத்தியது. இங்குதான் பிரபாரகன் வசிக்கிறார். 40 அடி கொண்ட பதுங்கு குழியில் அவர் வீடு இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போவதாக இருந்தால், இந்த வீட்டில் இருந்து செல்லும் சுரங்கப் பாதை வழியாகத்தான் செல்கிறார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் சொல்லி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுப் பகுதிக்குள் வந்து பிரபாகரன் பார்த்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன. மேலும், அவர் கலந்துகொள்ளும் விழாக்கள் அனைத்தும் இரவில்தான் நடக்கிறதாம். அவரைப் பாதுகாப்பதுதான் புலனாய்வுத்துறையின் முக்கியமான வேலை. அவர் ஒரு முகாமுக்கு வருகிறார் என்றால் அங்கு பிரபாகரனிடம் மட்டும்தான் துப்பாக்கி இருக்கும். அவரது பாதுகாப்பு வீரர்கள்கூட வெளியில்தான் நிறுத்திவைக்கப்படுவார்கள்.

பிரபாகரனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் சார்லஸ் ஆன்டனிக்கு 22 வயது. அவரும் புலிப்படையில் இருக்கிறார். மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகத் தகவல். அடுத்த மகன் பாலச்சந்திரன் அவருடனே இருக்கிறான். பல நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து கடைசியில் கணவருடனே வந்து காட்டில் வாழ்கிறார் மனைவி மதிவதனி.

வரும் 26ம் தேதி பிரபாகரனின் 54வது பிறந்த நாள். அதற்கு மறுநாள் புலிகள் ஆண்டுதோறும் கொண்டாடும் மாவீரர் நாள். அன்று அவர் தமிழீழ மக்களுக்காக வானொலியில் பேசுவார். புலிகளின் அடுத்தகட்டம் என்ன என்று இந்தப் பேச்சில் சொல்லப்படும்.

ரணமாகிப் போன தமிழர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேவும் பிரபாகரன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கிறார்.