செவ்வாய், 26 ஜனவரி, 2010

வரலாறு படைத்த பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத்.

வரலாறு படைத்த பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத்.

மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சி நாட்கள் ஆரம்பம்! இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சி நாட்கள் ஆரம்பம்!




இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் .

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரஜீவ் காந்தியின் தலைமையிலான பாரதப் பேரரசு நிறைவேற்றத் தவறிய நிலையில், ஐந்தம்சக் கோரிக்கைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் நாளன்று யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பட்டினிப்போர் தொடுத்த ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள், பன்னிரண்டு நாட்கள் நீராகாரமின்றி உண்ணாநோன்பிருந்து, இந்தியப் பேரரசால் வஞ்சிக்கப்பட்டுக் கோரிக்கைகள் எவையும் நிறைவேறாத நிலையில், 26ஆம் நாளன்று ஈகைச்சாவைத் தழுவிக் கொண்டார்.

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பட்டினிப்போர் தொடுத்ததன் இருபத்திரண்டாவது ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த பொழுது, இதே நாளில் தமிழீழ தாயக நேரம் காலை 9:55 மணிக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்கள் தோறும் பொதுச்சுடரேற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி, மலர்தூவி, அகவணக்கம் செலுத்தி நினைவு வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து நாள்தோறும் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் தூய்மைப்படுத்தல் (சிரமதானம்) பணிகளும், இலவச மருத்துவப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, நினைவெழுச்சி நாட்களின் இறுதி மூன்று நாட்களாகிய 24ஆம், 25ஆம், 26ஆம் நாட்களில் ஆலயங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பந்தல்கள் போன்றவற்றில் காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை அடையாள உண்ணாநோன்புகள் நிகழ்த்தப்பட்டன.

இறுதி நினைவெழுச்சி நாளாகிய 26ஆம் நாளன்று, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் ஈகைச்சாவைத் தழுவிய நேரமாகிய காலை 10:48 மணிக்கு ஆலயங்கள், தேவாலயங்கள் தோறும் மணியொலி எழுப்பி மக்கள் வீரவணக்கம் செலுத்தினர். இதன் பின்னர் மாலை 4:30 மணி வரை கோட்ட - பிரதேச வாரியாக பொதுக்கூட்டங்களும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதே பன்னிரண்டு நாட்களில் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, தமிழீழ தாயகத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சிறைகளிலும், தலைமறைவாகவும், தமது அகங்களில் சுடரேற்றியும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களை ஈழத்தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.

தமிழீழ தாயகம் முழுவதும் தற்பொழுது சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு முட்கம்பி வேலி வதைமுகாம்களில் மூன்று இலட்சம் வன்னி மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் "மக்கள் புரட்சி" என்ற கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொறுப்பு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களில் தோள்களில் தற்பொழுது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழப் புரட்சியும் தமிழின மீட்சியும் மன்னர் ஆட்சி, பார்ப்பன மேலாதிக்கம், அறியாமை இருள், சாதிய, பெண்ணிய ஒடுக்குமுறை, நிலவுடைமை முதலாளியச்சுரண்டல், வெள்ளை ஏகாதிபத்திய அடக்குமுறை, இந்தி வடநாட்டானின் ஆதிக்கச் சூழ்ச்சிவலை, சிங்கள இனவெ

தமிழீழப் புரட்சியும்
தமிழின மீட்சியும்

மன்னர் ஆட்சி, பார்ப்பன மேலாதிக்கம், அறியாமை இருள், சாதிய, பெண்ணிய ஒடுக்குமுறை, நிலவுடைமை முதலாளியச்சுரண்டல், வெள்ளை ஏகாதிபத்திய அடக்குமுறை, இந்தி வடநாட்டானின் ஆதிக்கச் சூழ்ச்சிவலை, சிங்கள இனவெறித்தாக்குதல் என மனிதத்துவத்தை மறுக்கும் பல்வேறு காலச்சூழல் காரணிகளால் தொடர்ந்து பிழியப்பட்டு வருவதே தமிழர்களின் இன்று வரையிலான அவல வரலாறாகும்.
இத்தகு மோசமான நொறுக்குதல்களுக்கு ஆட்பட்டுவரும் நம் இன வரலாற்றில் இப்போது நடந்து கொண்டிருப்பதுதான், இந்நாள்வரை நம் இனம் கண்டிராத மிக முக்கிய காலக்கட்டமெனக் கருத வேண்டியுள்ளது. இதற்குக் கருவென வித்திட்டது தமிழீழ விடுதலைப் போராட்ட மறவர்களின் உயிர்த் தியாகமும் அதையொட்டிய உலகளாவிய எழுச்சியுமேயாகும்.
அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூற்றுக் காலந்தொட்டே தமிழ் மரபினர் வீரஞ்செறிந்த பல போர்களைக் கண்டு வென்றவர்களே என்னும் போதிலும், அதில் எதுவுமே மக்களின் விடுதலைப் போராட்டமாக பரிணமித்ததில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மனித குலம் இன்று – அறிவியல், மருத்துவ, தொழில்நுட்ப வேகவளர்ச்சி, பொதுவுடைமை தத்துவ தரிசனம் என நாகரிகத்தின் உச்சத்தைக் கண்டு கொண்டுவிட்டிருக்கும் இவ்வரியதொரு காலச்சூழலில் தமிழின விடியலுக்கானப் போராட்டமானது தமிழீழத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு முன்னேற்றமடைந்து வருகின்றது என்பதான செய்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழர் அனைவருக்கும் பெருமகிழ்வையும் நம்பிக்கையையும் தருவதாய் உள்ளது. அதோடு இதில் தமிழர்களின் புறநிலை அடிமை விலங்குகளான சாதியும் பெண்ணடிமைத் தனமும்கூட ஒரு முன்னுதாரணமாய் இப்போராட்ட வரலாற்றினூடே பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டு வருவதானச் செய்தி, இதில் நம் இனம் ஒரு முழு விடுதலையை நோக்கியே பயணம் செய்கிறது என்பதை உறுதி செய்யும் அடையாளமேயாகும். மேலொரு சிறப்பாக அது தாய்மொழி மீட்புப் போராகவும் உருப்பெற்றிருப்பது நம்மினம் முழுமைக்கும் மிகப்பெரும் பலமாகும். இதில் அப்பயணத்தின் வெற்றி இலக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலையின் வரலாற்றுத் தேவையையும், அப்போராட்டத்தின் நியாயங்களையும் இன்று உலகினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது தமிழர் நம் அனைவரின் இன்றியமையாக் கடமையாகிறது. எனவே ஈழத்தமிழரின் விடுதலை வரலாற்றை அறிந்து கொள்வதும், பரப்புவதுமான அத்தலையாயப் பணியை காலந்தாழாது செயலாற்ற அணிதிரள்வோம் வாரீர் தமிழர்களே!

ஈழம் - தமிழர் பூர்வீகத்தாய் மண்
உலகின் முதல் மாந்தன் தோன்றியது குமரிக்கண்டமே என்றும், முதல்மொழி தமிழே என்பதுமே இதுநாள்வரையான உலகாய்வுகள் கூறும் முடிவு. தமிழகமும் இலங்கையும் சேர்ந்திருந்த நிலப்பகுதிக்கே “குமரிக்கண்டம்” என்ற பெயர் வழங்கிற்று. குமரிக்கண்டத்தைக் கடல் கொண்ட போதோ அல்லது கண்டங்கள் பிரிந்து பிளவுண்ட போதோ, இலங்கை தனித்தீவாகத் துண்டிக்கப்பட்டது.
“இலங்கை” என்ற பெயர் தமிழ்ப் பொருள் சுட்டும் படியாய், தமிழன் சூட்டிய பெயரேயாகும். அந்நாளில் நீண்ட நெடுந்தூர அயலகக் கடற்பயணம் பன்முறை மேற்கொண்ட தமிழ்நாட்டுத்தமிழர்கள், தாங்கள் நாடு திரும்புகையில் தம் நிலத்துக்கு அருகிலுள்ள இப்பெருந்தீவே ஓர் அடையாளக் குறியாய் விளங்கியதால்..“இல்” என்பது ‘ஒளி’இ ‘குறி’ என்றவாறான பொருளடிப்படையில் இல் + அங்கு ஸ்ரீ இலங்கு என்ற பொருள்பட பெயர் வழங்கினர்.“ஈழம்” என்ற மற்றொரு பெயரும் தமிழ்ப் பொருள்படும் படியானதே. இத்தீவில் தங்கம் அதிகமாகக் கிடைத்ததனாலேயே “ஈழம்” எனப் பெயர்பெற்றது. ஈழம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு “பொன்” என்றே பொருள். அதையொட்டி ஈழத்தில் வாழ்ந்தவர்கள் ஈழர் என அழைக்கப்பட்டனர். ஈழர்கள் எனப்படும் தமிழரே அத்தீவின் தொல்குடி மரபினர் என்பதற்குச் சிலப்பதிகாரம் மற்றும் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன.


சிங்களர் நுழைவு
ஈழத்தமிழர்கள் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்துவந்த தாய்மண்ணில்தான் சிங்களவர்கள் புதியதாய் திடுமென நுழைந்தனர். இதை சிங்களவர்களின் வரலாற்று நூலான “மகாவம்ச”மே குறிப்பிடுகிறது. கி.மு.5ஆம் நூற்றாண்டில் இன்றைய இந்தியாவின் ஒரிசா பகுதியில் அன்று “துட்டகாரா” என்றழைக்கப்பட்ட நிலத்தை ஆண்டுவந்தவன் ஆரியவழி மன்னனான “சிங்கபாகு” – அவனின் மகனான விஜயன், தன் சொந்த நாட்;டு மக்களுக்கே இன்னல் விளைத்துக்கொண்டு பெருங்கேடாளனாய் வளர்ந்து வந்தான். அத்தொல்லை தாங்க முடியா மக்கள் மன்னனிடம் முறையிடவே, விஜயனும் அவனொத்த கூட்டத்தினர் 700 பேரும் மூன்று மரக்கலங்களில் ஏற்றி நாடு கடத்தப்பட்டனர். அக்கப்பல்கள் கடைசியாய் இலங்கைத் தீவில் கரையொதுங்கவே, அக்கூட்டத்தினர் அங்கேயே அடைக்கலமாயினர். பின் அப்பகுதிவாழ் பழங்குடி பெண்களை மணம்முடித்து புதிய இனக்குழுவாயினர்.
இவ்வரலாற்றை உறுதிசெய்யும் வகையில் 1983-ல் சிங்கள அரசே, விஜயனின் இலங்கை வருகைக் கொண்டாட்ட 2500ஆம் ஆண்டு நிறைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டு, சிங்களர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தேறிகளே என்பதைப்பதிவு செய்துள்ளது.



சிங்களச் சூழ்ச்சியும் தமிழ்ப் பேரரசு வீழ்ச்சியும்

சிங்களவர்கள் இலங்கை மண்ணுக்கு புதிதாய் வருகை தந்தவர்களே என்றபோதும்கூட, நம் தமிழ் மக்களும், மன்னர்களும் அவர்களை அரவணைப்புடனேயே நடத்தினர். தொடக்கக் காலங்களில் அமைதி காத்துவந்த சிங்களர்கள் காலப்போக்கில் தங்கள் மக்கட்தொகைப் பெருக்கத்தின் அடிப்படைத் துணிவில் நம் தமிழ்ச் சிற்றரசர்களுடன் ஆங்காங்கே சில மோதல்களைத் தொடங்கினர். ஆனாலும், அவர்களால், இலங்கைக்கு வந்த முதல் 350 ஆண்டுவரை எந்த ஒரு பரந்த நிலப்பரப்பையும் கைக்கொள்ள முடிந்ததில்லை.

இக்காலக்கட்டத்தில்தான் அனுராதபுரம் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு எல்லாளன் (அ) ஏலேலசிங்கன் என்றழைக்கப்பட்ட தமிழ்ப்பேரரசன் 32 தலைமை வாய்ந்த கோட்டைகளை நாடெங்கும் கட்டி மக்கள் மகிழும்படி 45 ஆண்டுகாலம் தொடர்ந்த பொற்கால ஆட்சி (கி.மு.205-161) புரிந்து வந்தான். இதே காலக்கட்டத்தில் சிங்கள மன்னன் “காகவனதீசன்” மகனான “துட்டகாமினி” என்பவன் சிறுவயதுமுதலே தமிழர்கள் மீது பெருவெறுப்புக் கொண்டு வளர்ந்து வந்தான். இவன் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தமிழர்கள்மேல் போரிடத் துணிந்தான்.
தமிழ்ச்சிற்றரசர்கள் பலரையும் ஒவ்வொருவராக வீழ்த்தி பெரும்படை திரட்டி வந்த காமினி கடைசியில் நம்தமிழ்ப்பேரரசன் ஏலேலசிங்கனையும் வீழ்த்தும் முயற்சியில் இறங்கினான். ஆனால் காமினி, மகாபலிகங்கை ஆற்றைக் கடந்து உள் நுழைய முடியாவண்ணம் ஏலேலனின் படைவீரர்கள் அரணமைத்திருந்தனர். 4 மாதமாகியும் ஆற்றைக் கடக்க முடியாதிருந்த காமினி, தன் சொந்தத் தாயார் விகாரதேவியுடன் பெண்களை அனுப்பி எதிரணியின் தளபதிகள் சிலரை மயக்கி சூழ்ச்சியால் ஆற்றைக் கடப்பதில் வெற்றி பெற்றான்.

மேலும் காமினி இதில், “ஏலேலனை எதிர்த்து நடக்கும் போர் வெறும் அரசியல் போர் மட்டுமன்று, இது இலங்கை நாட்டில் புத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் தெய்வப்போர், புனிதப்போர்” எனக்கூறி ஒட்டுமொத்தச் சிங்களவர்களையும் ஓரணியாக்கி முன்னேறினான். ஆனாலும் ஏலேலனின் கோட்டைகளையும் அகழிகளையும் நெருங்கமுடியாது மேலும் நான்கு மாதம் முற்றுகை நீடித்தபோது, காமினி குறுக்கு வழியில் கையூட்டுகளைத் தந்து தமிழ்ப்படைத் தளபதிகள் பலரை தம் படையில் இணைத்தபின்பே அனுராதபுரத்தை காமினியின் படைகள் நெருங்க முடிந்தது. அப்போதும் ஏலேலனின் தளபதி “திகஜந்து” கடுமையாக எதிர்த்துப் போரிட்டே மாண்டான். இந்நிலை பற்றி தமிழ்நாட்டிலிருந்த திகஜந்துவின் மருமகன் “பல்லூக்காவிற்கு” ஒற்றர்வழி செய்தி அனுப்பப்பட்டது.
இறுதியில் ஏலேலனின் கோட்டையை நெருங்கிவிட்ட காமினியின் படையை எதிர்த்து ஏலேலன் தானே களத்தில் நின்று போரிட்டு கடைசிப் படையை நடத்தினான்.
முடிவில் ஏலேலனை காமினி ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுமாறு அறைகூவினான். 45 ஆண்டுகள் ஆண்டு முதுமையடைந்திருந்த ஏலேலன் இளைஞன் காமினியோடு யானை மீது அமர்ந்து கடும் போர் புரிந்தான். பல மணிநேர வீரஞ்செறிந்த போருக்குப்பின் தமிழ் மன்னன் ஏலேலன் காமினியால் கொல்லப்பட்டான். இதனிடையே தமிழகத்திலிருந்து பல்லூக்கா தலைமையில் உதவிக்கு வந்த 60 ஆயிரம் தமிழ் வீரர்களைக் கொண்ட படை, ஏலேலன் இறந்து 7 நாள் தாமதமாகவே வந்து சேர முடிந்தது. தமிழர்களின் பேரன்பைப் பெற்றிருந்த அப்போர் மறவனான ஏலேலனை காக்க முடியாதுபோன ஆற்றாமையைச் சொல்லும் பாடலாகவே “ஏலேல, ஐலசா” என்னும் மீனவ நாட்டுப்புற கதைப்பாடல் உருப்பெற்றதோடு, நாம் நேர் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையை சேர்த்தே இன்றும் அது குறித்து நிற்கிறது.

வெள்ளையர்கள் ஆதிக்கம்

தமிழர் சிங்களர் பகைமையும், தமிழ்சிங்கள அரசுகளுடனானப் போராட்டமும் இலங்கை வரலாற்றோடு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், வெள்ளையன் வருகைவரை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும், வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் தமிழர் ஆட்சியே இருந்துவந்தது. மேலும் கண்டி மண்ணில் தமிழரசே இருந்தது. மேற்குப் பகுதிகளில் மட்டுமே சிங்கள அரசு இருந்து வந்தது.

இந்நிலையில் கி.பி.1505-ல் போர்ச்சுக்கீசியர்கள் முதல் முதலாக இலங்கையில் நுழைந்தனர், தொடக்கத்தில் மேற்கிலிருந்த சிங்கள அரசோடு சில வியாபார உடன்படிக்கைகள் மட்டுமே செய்துகொள்ளும் விதமாய் காலூன்றிய அவர்கள் பின்னர் அங்கு நிலவிய உள்நாட்டு அரசியல் நிலையற்றத் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் நவீன இராணுவப் போர்க்கருவிகளின் துணையோடு சிறுகச் சிறுக இலங்கையைக் கைப்பற்றத் தொடங்கினர். அப்போது ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனான சங்கிலியன் இறுதிவரை அவர்களுக்கு அடிபணிய மறுத்துப் போராடிவந்தான். கடைசியில் சங்கிலியனைச் சிறைபிடித்த போர்ச்சுக்கீசியர்கள், அவனை கோவாவிற்கு கொண்டுபோய் சிறையடைப்பதாகச் சொல்லி தூக்கில் போட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து மொத்தம் 177 ஆண்டுகாலம் அவர்களின் அதிகாரம் பரவி இருந்தது.

போர்ச்சுக்கீசியர்களை அடுத்து வந்த டச்சுக்காரர்கள் அன்றைய கண்டியரசுனுடன் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை விரட்டத் துணை புரிவதாகவும், பின் அதற்கெனத் தங்களுக்குச் சில வியாபார உடன்படிக்கை ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கோரினர்.
அதன் படி கி.பி.1659இல் போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு துரத்தப்பட்டனர். ஆனால் இறுதியில், வென்ற பகுதிகளைக் கண்டியரசனை ஏமாற்றி டச்சுக்காரர்களே தங்கள் வசமாக்கிக்கொண்டு 112 ஆண்டுகளும் பின் கடைசியாய் வந்த பிரிட்டிஷ்காரர்கள் 112 ஆண்டுமாக ஈழத்தின் செல்வங்கள் அனைத்தையும் சுரண்டினர்.

வெள்ளையர்களின் ஒவ்வொருமுறை ஆக்கிரமிப்புப் போரின் போதும் அவர்களைக் கடைசிவரை வீரத்துடன் எதிர்த்துப் போராடியது தமிழ் நில மன்னர்களே ஆவர். பிரிட்டிஷாரிடம் பெரும் எதிர்ப்பின்றி சிங்களப் பகுதிகள் எல்லாம் சரணடைந்த பின்பும்கூட, பண்டார வன்னியன் என்னும் தமிழ் மாவீரன் மட்டுமே வரலாற்றில் ஆங்கிலேயனை எதிர்த்து வெற்றி கொண்டவனாகவிளங்குகிறான். 25.08.1803ல் முல்லைத்தீவில் அமைந்திருந்த ஆங்கிலேயக் கோட்டையை வெற்றி கொண்டு 30 ஆண்டுகள் வரை ஆங்கிலேயனை எதிர்த்துத் தனி அரசு நடத்தியும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்து வந்தான். ஆனால் காக்கை வன்னியன் என்னும் தமிழனாலேயே கடைசியில் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒரு நாள் தனிமையில் செல்லும்போது பண்டார வன்னியன் கொலை செய்யப்பட்டான்.அதன்பிறகு இலங்கையைத் தன் முழு ஆளுகைக்குக்கொண்டுவந்த பிரிட்டிஷார் அவர்களின் நிர்வாக வசதிக்கெனவே தனித்தனியாய் இயங்கிவந்த தமிழர் சிங்களர் பகுதிகள் அனைத்தையும் கி.பி.1833ல் முதன்முதலாக ஒன்றிணைத்து மையப்படுத்தப்பட்ட, ஒற்றைஆட்சி முறையை அமுல்படுத்தினர்.


இலங்கையைச் செழிப்பாக்கிய தமிழ்நாட்டுத்தமிழர் குருதி
இலங்கை முழுவதையும் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிரிட்டிஷார், அந்நாட்டின் மலையகச் செல்வவளம் முழுவதையும் அறுவடை செய்ய முடிவு செய்தனர். பண்படுத்தப்படாதிருந்த அம் மலைகளைச் சீர்செய்ய, பயிரிட பெரும் உழைப்புத் தொழிலாளர்கள் தேவையாயிருந்தனர். அன்றைய ஈழத்தின் பூர்வகுடிகளாக இருந்த தமிழர்களோ,பெரும் பகுதியினர் படித்தவர்களாகவும், தமிழையும், சைவத்தையும் போற்றும் சாதித் தமிழர்களாகவும், நிலவுடைமையாளர்களாகவும் இருந்ததால் அவர்களை அம் மலையக வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழியின்றிப் போனது. சிங்களர்களோ, படிப்பில் நாட்டமற்றவர்களாகவும், உழைப்பிற்கு அஞ்சுகிற சோம்பேறிகளாகவும், மேலும் கட்டாயப்படுத்தினால் புத்தத் துறவிகளாக மாறி, தப்பி சுக வாழ்வு வாழவும் பழகிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தங்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தே தொழிலாளர்களைத் தருவிக்க வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையன், அன்றைய நம் தென்தமிழ்நாட்டில் செயற்கை பஞ்சங்களையும், சாதிக் கலவரங்களையும் ஏற்படுத்தி, இங்கிருந்த நம் தமிழர்களிடம் நல்ல கூலி தருவதாகக்கூறி, கி.பி.1800 லிருந்து படிப்படியாக 10 இலட்சம் பேர்வரை இட்டுச்சென்று அங்கே நிரந்தரக் குடியமர்த்தினான்.
மலையகத்தமிழர்கள் என்றழைக்கப்படும் அவர்களில் பெரும் பகுதியினர் தமிழ்நாட்டுச் சூத்திர உழைப்பாளர் வகுப்பினர்களான பள்ளர், பறையர், மூக்குவர், மீனவர், முக்குலத்தோர், நாடார், சாணார், வன்னியர், மருத்துவர் வேளாளர், கவுண்டர் சாதிப்பிரிவினர்களேயாவர். மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகப் பகுதியிலிருந்தும் தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டபோதும், இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்;களில் 95 சதவீதம் பேர் இன்றும் தமிழர் தொகையினரே.
இத்தமிழர்களின் உழைப்பைக் கொண்டே மொத்த இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிக்குமான தரைவழிச்சாலை, இரயில்வே தண்டவாளம், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், தொடர்வண்டி நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் கட்டியெழுப்பப்பட்டது.

இவர்களின் ஓய்வற்ற வியர்வையால் முதல் 70 ஆண்டுகளுக்குள் அங்கே 2,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் காப்பியும் இரப்பரும் செழிக்கத் தொடங்கியது. உலகில் மிகப்பெரும் வியாபார மதிப்பைப் பெற்றிருந்த பச்சைத்தங்கம் என்றழைக்கப்பட்ட இலங்கைத்தேயிலையை, 38 கோடி கிலோ அளவுக்கு சாகுபடி செய்திட நம் தமிழகத் தமிழர்களின் குருதியே எருவானது. ஒவ்வோர் அறுவடைக்கால உழைப்பிற்கும் தமிழ்நாட்டிலிருந்து 10 இலட்சம் தமிழர்கள் தொடர்ந்து போவதும் வருவதுமாயிருந்தனர். இத்தகு பயணக்காலப் பொழுதுகளில் 3 இலட்சம் தமிழர்கள் செத்தொழிந்திருக்கின்றனர்.

இவ்வாறாக இன்றைய இலங்கையின் நிரந்தர பெருவருவாய்க்கு 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் குருதியையும் வியர்வையையும் சிந்திவரும், இன்று 15 இலட்சம் மக்களாக இருக்கும் அம்மலையகத் தமிழர்களைத்தான், இலங்கை அரசு நாடற்றவர்கள் என்று இழிவுபடுத்துவதோடு அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கே திரும்பிட வேண்டுமென்றும் நிர்பந்தித்து வருகிறது.


சுதந்திரமும் - தந்திரமும்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான அரசியல் சூழல் மாற்றத்தில் பிரிட்டிஷார் தங்களின் காலனியாதிக்க நாடுகளுக்கு, சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாயிருந்தனர். ஆனாலும் அதற்கு முன்பே இந்தியாவைப் போல் இலங்கையிலும் சுதந்திரப் போராட்டக்களம் தீவிரமடைந்திருந்தது. அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதில் சிங்களவரைக் காட்டிலும் தமிழர்களின் பங்கே அளப்பரியதாகும்.
இலங்கை விடுதலை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த “டெனாமூர்” ஆணைக்குழுவிடம் (1927-1931) தமிழர்கள் முன் வைத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ உரிமை முழக்கம் வெற்றிபெற முடியாது போனது. கடைசியில் 04.02.1948-இல் ஒன்றுபட்ட இலங்கையின் சுதந்திரம் நியாயமற்ற முறையில் சிங்களவரின் அதிகாரத்திற்கு அளிக்கப்பட்டுவிட்டது. சிங்களர் ஆட்சிக்கு வந்த 8ஆம் மாதமே, இலங்கையைச் செல்வ வளமாக்கிய 10 இலட்சம் மலையகத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து 15.11.1948இல் அவர்கள் அனைவரையும் நாடற்றவர்கள் என அறிவித்தனர். பின்பு படிப்படியாக 05.06.1956ல் அரசியலமைப்பில் சிங்களமே ஒரே ஆட்சிமொழி எனவும், 1970இல் கல்வியைத் தரப்படுத்தல் எனக்கூறி தமிழ் மாணவர்களின் மேற்படிப்பிற்குத் தடைகளையும் ஏற்படுத்தினர். 22.05.1972இல் பௌத்தமே முகாமை பெற்ற அரசமதம் என்று ஆணை நிறைவேற்றி முடித்தனர். இப்படியே தொடர்ந்து தமிழர்களின் அனைத்து உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி சிங்களவனோடு சேர்ந்துவாழ முடியாது என்ற நிலைக்குத் தமிழர்கள் வந்தபோது: தனி நாடு கோருவது அரசியலமைப்புக்கே எதிரானது என மேலும் ஒரு சட்டத்தை 1979இல் கொண்டுவந்து தமிழின எதிர்காலத்திற்கான அனைத்துக் கதவுகளையும் அடைத்தனர்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 150 இலட்சத்தில் 50சதவீதம் சிங்களவர்களாக 75 இலட்சம் பேரும், 50சதவீதம் தமிழர்களில் 45 இலட்சம் ஈழத்தமிழர்களாகவும், 15 இலட்சம் இலங்கை மலையகத்தமிழர்களாகவும், 15 இலட்சம் இசுலாமியத் தமிழர்களாகவும்; உள்ளனர். இச்சரிபாதியாய் உள்ள தமிழர் தொகையை சிதைக்கும் நோக்கோடே முதலில் மலையகத்தமிழர்களின் உரிமையைப் பறித்தனர். அதோடு இசுலாமியத் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்திவிட்டு அப்பழியை அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது திசை திருப்பிக் குழப்பத்தையும் உட்பகையையும் ஏற்படுத்தினர். 45 இலட்சமான ஈழத்தமிழர்களின் மீது இராணுவ, காவல்துறை சிங்களக் காடையர்கள் என மும்முனைத்தாக்குதலை ஏவி அதில் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களை அகதிகளாய் துரத்தியடித்து வெளியேற்றினர். இவ்வழியே இறுதியில் இன்று தமிழர் தொகை பெருமளவிற்குத் தாழ்த்தப்பட்டது.
இதன்மூலம் இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழர்களின் எண்ணிக்கை பலம் என்பது திட்டமிட்டபடி சுருக்கப்பட்டதால், தமிழர் துணையின்றியே இலங்கையில் சிங்களர் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு தமிழ்ப்பிரதித்துவத்தின் குரல் முற்றுமாய் ஒடுக்கப்பட்டுவிட்டது.

புதைகுழிக்குப்போன புத்தமும் தமிழினப் படுகொலையும்.
அடிப்படையில் தங்களுக்கென ஒரு பண்பாட்டு வரலாறோ, சீர்மை பெற்ற மொழியோ, இலக்கியமோ, வாழ்வியல் நெறியோ ஏதுமற்றிருந்த சிங்களர்கள், அன்றைக்குப் புதிதாய் பரவிவந்த புத்த மதத்தின் வழியே தங்களுக்கென ஒரு முகவரியை, ஏற்படுத்திக் கொள்ளளாயினர். புத்தர் மறைந்து 200 ஆண்டு காலத்திற்குப் பிறகு கலிங்கத்து அசோக மன்னனின் முயற்சியில், கி.மு.3ஆம் நூற்றாண்டில் அதுவும் தமிழ்த் துறவிகளான புத்தமித்ரர், கணதாசர், மகாதேரர், தர்மபாலர் போன்றோர் வழியே புத்தமதம் இலங்கைத் தீவிற்குப் பரவியது என்பதே வரலாறு.
ஆனால் இதை மறைக்கும் விதமாய் பிற்கால சிங்கள வரலாற்று இலக்கியங்களில், புத்தரே நேரடியாக இலங்கைக்கு 3 முறை வருகை புரிந்தார் என்றும், அங்கே 16 இடங்களில் தங்கிய அவர்,5ஆயிரம் ஆண்டுகளுக்குப் பௌத்த நாடாகவே இலங்கையைக் கட்டிக்காத்திட வேண்டுமெனச் சிங்களர்களுக்கு கட்டளை இட்டுச் சென்றார் என்றும் அவரின் நினைவாய் அவர்தம் புனிதப் பல்லும், பிச்சைத் திருவோடும் இன்றுவரை இலங்கையில் பாதுகாக்கப் படுவதாகவும் மேலும் அசோகனின் பிள்ளைகளான மகேந்திரனும், சங்கமித்திரையும் வான் வழியே இலங்கைக்கு போதி மரக்கிளையைக் கொண்டு வந்ததாகவும் அம்மரம் இன்றும் உயிரோடு சக்தி பெற்றிருப்பதாகவும்,மூடப்புனை கதைகளைச் சொல்லி சிங்களவர்களுக்கு பௌத்த வெறியேற்றி தமிழர்களை மத அடிப்படையில் முற்றும் அழித்தொழிக்க வேண்டியது தங்கள் அனைவரின் மதப்புனிதக் கடமை என்றுகூறி உண்மை புத்தநெறியையே கேள்விக்கு உள்ளாக்கினர்.
1958இல் தொடங்கப்பட்ட தமிழர்கள் மீதான முதல் படுகொலைத்தாக்குதல்,இன்றுதொடர்ந்து 50 ஆண்டைத் தாண்டி மிகக்கோர வடிவெடுத்துள்ளது. தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடக்கம் முதல் அற வழியிலேயே போராடினர்.1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்பதான தமிழ் உரிமை மறுப்புச் சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டம் நடத்துவதற்குக் கூடிய நம் தமிழர் கூட்டத்தினுள் ஆயுதம் தாங்கிய பௌத்த மத வெறி அமைப்பினர் உட்புகுந்து தாக்கி அங்கேயே 150 தமிழர்களையும் கொன்று போட்டனர்.


தமிழினத்திற்கு எதிராக நாளும் பெருகிக் கொண்டு வந்த இத்தாக்குதல் போக்கை எதிர்த்து, தமிழர்கள் அனைவரும் ஈழத்து காந்தி என்றழைக்கப்பட்ட தந்தை செல்வாவின் தலைமையில் ஓரணியாயினர். தமிழர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக சிங்களவர்;கள் ஒப்புக்கு நிறைவேற்றிய 26.07.1957 பண்டார நாயகா-செல்வா ஒப்பந்தமும், 24.03.1965 டட்லி சேனநாயகா-செல்வா ஒப்பந்தமும் பின் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. அப்போதும் தந்தை செல்வா அறவழியில் தமிழர்களுக்காகத் தனி அஞ்சல் துறை நடத்திக்காட்டுவதன் வாயிலாகவே எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் சிங்களவர்களோ அமைதியாகப் போராடும் தமிழர்கள் மீது ஆயுதத்தாக்குதல் வெறியையே கையாண்டு வந்தனர்.
இந்நிலையில் 1974இல் சனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் கூடிய நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில், ஆயுதம் தாங்கிய சிங்கள காவல்படை உட்புகுந்து 9 தமிழறிஞர்களைச் சுட்டு வீழ்த்தியது. இதில் மேலும் 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிங்களவனின் இவ்வட்டூழியங்கள் நாளுக்குநாள் எல்லை மீறிப்போகவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாய்க் கூடிய பண்ணாகம் வட்டுக்கோட்டை மாநாடு (14.05.1976) ‘தனித்தமிழ் ஈழமே’ நிரந்தரத் தீர்வாகும் என ஒருமனதாகத் தீர்மானித்து அறிவித்தது. அம்முழக்கத்தையே முன்வைத்து அடுத்து வந்த 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் 80 சதவீதம் வாக்குபெற்று 19 இடத்தில் 18ஐ கைப்பற்றி தனித்தமிழீழக் கோரிக்கையே மக்கள் தீர்ப்பு என்பதாக உலகுக்கு அறிவித்தனர்.

நாளும் பெருகிவந்த தமிழீழக் கோரிக்கை ஆதரவு எழுச்சியைச் சகிக்கமுடியாத சிங்களவர்கள், ஜீலை 1983ல் மொத்தத் தமிழர்களின் மீதும் வரலாற காணாத வன்முறையை ஏவினர். தமிழ் கர்பிணிப்பெண்களின் வயிற்றைக்கீறி, கொதிக்கும் தாரில் குழந்தைகளைப் போட்டு, தமிழ் மக்களை அவர்களின் வீட்டிலே அடைத்துப்பூட்டிக் கொளுத்தினர். உயிரோடிருந்த குட்டிமணியின் கண்ணைப்பிடுங்கி பூட்ஸ் காலில் போட்டு மிதித்த இராணுவம் அவருடனான 56 போராளிகளையும் சுட்டுக்கொன்றது. “கருப்பு ஜீலை” என்றே பதிவாகிவிட்ட அந்நாளில் தொடர்ந்து நடைபெற்ற படுகொலையில் ஒருவாரத்திற்குள்ளாகவே கொழும்பு நகரில் மட்டும் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழர்களின் 116 ஆலைகள் தீக்கிரையாக்கப்பட்டு, இறுதியில் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிங்களம் இந்தியாவின் பகை நாடே
தமிழீழமே நட்புசக்தி

இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் ஆபத்துகளின்போதும், நெருக்கடி நேரங்களிலும் சிங்கள அரசு வெளிப்படையாகவே இந்தியாவின் எதிரணியில் போய்ச்சேர்வதையே வாடிக்கையாய்க் கொண்டுள்ளது.
கி.பி.1961இல் இந்தியா மீதான சீன ஆக்கிரமிப்புப் போரின் போது பௌத்த மதப்போர்வையில் இலங்கை, சீனாவின் பக்கம் நின்று நேரடியாக இந்தியாவை எதிர்த்தது. கி.பி.1965, 1971இல் இந்திய பாகிஸ்தான் போர் மூண்ட போதும், சிங்களம் தன் முழு ஆதரவை பாகிஸ்தானுக்கே அளித்து நின்றதே வரலாறு. அதைத் தொடர்ந்து அமெரிக்க வல்லாதிக்க இராணுவத்திற்கு தென் ஆசியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மையமாகக் கருதப்படும், நம் திரிகோணமலையில் தளம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது, அதன் வழியே ஆசியாவின் மிகப்பெரும் இராணுவ பலம் பொருந்திய இந்தியாவிற்கு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்திடச் சூழ்ச்சியும் செய்தது. ஆனால் நம் தமிழீழப் போராளிகளின் எதிர் தாக்குதலால் இன்றுவரை அமெரிக்கப் படை அங்கே உள்நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நம் மண்ணான கச்சத்தீவைத் தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1974இல் சிறிமாவோ பண்டிரநாயகா சூழ்ச்சியாக கேட்டுப்பெற்றுக் கொண்டதோடல்லாமல் அவ்வழியே செல்லும் தமிழர்களின் ஒப்பந்த உரிமையைக்கூட மதியாதவர்களாய் நம் மீனவர்கள் மீதே சிங்களவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்தவும் துணிந்துவிட்டனர். இதில் இலங்கை அரசு, நமது அப்பாவி இந்தியத் தமிழக மீனவர்களைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்வதில் இதுவரை 3000க்கும் மேலான தமிழர்களின் உயிர்பறிப்பு, மீனவர்களின் வாழ்வாதார தொழில் அழிப்பு என்பதுமாய்த் தொடர்கிறது. இவ்வத்துமீறலான தாக்குதலெல்லாம் இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகவே பொருள்படும்.
தொடரும் வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றிலுமே இலங்கை இந்தியாவை தந்திரமாகவே ஏமாற்றி வருவதையே அடுக்கடுக்காய் காண முடிகிறது. கி.பி.1964இல் இலங்கையில்,இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்களின் உரிமைப் பறிப்பைச் சீர்செய்வதற்கெனப் போடப்பட்ட சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தை சிங்களவர்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்தவே இல்லை. கி.பி.1974இல் செய்யப்பட்ட கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமை தொடர்பான இந்திரா-பண்டாரநாயக்கா ஒப்பந்தமும் இன்றுவரை முற்று முழுக்காக மீறப்பட்டே வருகிறது. கி.பி.1987இல் போடப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பாக வடக்கு, கிழக்கை அங்கீகரிப்பதாகக் கூறிய இராசீவ்-செயவர்த்தனே ஒப்பந்தமும் கிடப்பிலேயே கிடக்கிறது. ஓவ்வொரு கட்டத்திலும் தமிழர் போராட்டத்தின் எழுச்சியைத் தனிப்பதற்கே: இந்தியாவின் வழி மத்தியஸ்த்தம் செய்வதாக கூறி ஏமாற்றவே இலங்கை அரசு ஒப்பந்த நாடகத்தை அரங்கேற்றி, இந்தியாவையும் தமிழீழ மக்களையும் ஒருசேர ஏமாற்றி வருகிறது.
எப்போதும் இந்தியாவின் நேரடியான பகைமை சூழ்ச்சி நாடாகவே தொடர்ந்து இருந்துவரும் சிங்கள அரசை இந்தியாவின் இன்றைய அரசியல்வாதிகளும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ளோரும் சரியாக அடையாளம் காண இப்போதும் தவறுவார்களேயானால், எதிர்காலத்தில் சிங்கள அரசு உலக வல்லரசுகளின் கைப்பாவையாய் மாறி இந்தியாவை நிரந்தர பீதியில் தள்ளப்போவதைத் தடுக்கவே முடியாது. இவ்வரலாற்றுப் பிழையை நேர் செய்து தென் ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலைப்பெறச் செய்ய வேண்டுமானால், இந்தியா, தமிழீழத்தை ஆதரிக்க வேண்டிய ஒன்றே சரியான தீர்வாகும்.



தாயகத் தமிழர் கடமை

உலக அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்குப் பின்னான இன்றைய காலநிலையில், நாடுகளுக்குள்ளான உறவுகள் என்பது நியாயத்தின் அடிப்படையிலன்றி, வல்லாதிக்கத்தின் அடியொற்றியே அமைக்கப்படுகிறது. இன்றைய உலக வல்லரசுகள் எல்லாம், பிறநாட்டு மக்களின் உரிமையை மதிப்பதைவிட, அவர்களிடமிருக்கும் பொருளாதாரத்தைச் சுரண்டவே பெரிதும் விரும்புகின்றனர். இவ்வடிப்படையில்தான் அமெரிக்கா, இசுரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற வல்லரசுகள் இலங்கையில் பெருமுதலீடு செய்யவும், தங்களின் வியாபாரச் சந்தையைப் பெருக்கிக் கொள்ளவுமாய் முனைப்போடு உள்ளனர். இவர்களின் தடையற்ற பொருளாதாரச் சுரண்டலுக்குச் சிங்களவனின் கீழ் உள்ள ஒன்றுபட்ட இலங்கையே உவப்பானதாகும்.

மேலும் இடைப்பட்ட இப்போர் நடப்பிலுங்கூட இவ்வல்லரசுகள் தங்களின் இராணுவத் தளவாட வியாபாரத்தை வேகமாக நடத்தி போட்டி போட்டுக் கொண்டு பணம் பறித்தவாறு உள்ளனர். இவர்களின் இவ் அவசர வியாபாரத் தேவைக்கு முன் நசுக்கப்படும் நம் தமிழர்களின் உரிமை என்பது புறந்தள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமிழ்ந்து விடுகிறது. மேலும் அதன் காரணமாகவே தமிழீழப் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டை இக்கூட்டத்தினர் கண்மூடித்தனமாக ஒடுக்க முற்படுகின்றனர். உலகின் பெருமளவிலான நாடுகள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிர்நிலை எடுத்திருப்பதும் இத்தகு காரணத்தையொட்டியே என்பதை உணர வேண்டும்.
30 ஆண்டுகளாகத் தொடரும் இவ்வகை நெருக்கடியால், உலகினரின் இப்பாராமுக சூழ்ச்சிப் பின்னலால் முற்றும் முழுக்காக நாசமடைவது நம் தமிழின இரத்த உறவுகளே. உலகில் ஓர் இனம் தாக்குறும் போது அவ்வின மொழியினர்

எந்த நாட்டிலிருந்தாலும் அதைக் கண்டிப்பதும் குரல் கொடுக்கக் கொதித்தெழுவதுமே அவ்வின மக்கள் அனைவரின் கடமையும் உரிமையுமாகும் என்பதை இங்கே நாம் நினைவு கொள்;ள வேண்டும்.
இலங்கையில் சிங்களவர்களால் இது நாள் வரையில் ஓர் இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பொருளாதாரம் சீர் குலைக்கப்பட்டு, 10 இலட்சம் தமிழர்கள் அயல்நாடுகளுக்கு அகதிகளாகத் துரத்தப்பட்டு 20 ஆயிரம் போராளிகளின் உயிரைப்பறித்து, உள் நாட்டிலேயே இலட்சக்கணக்கானத் தமிழர்களை அவர்களின் இருப்பிடம் விட்டு அங்கும் இங்குமாய் அல்லலுறச் செய்துகொண்டு, தமிழ்ப் பொது மக்களுக்கான உணவு, மருந்து, குடிநீர், மின்சாரம், சுகாதார அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தடுத்து, இது நாள் வரை தமிழர்கள் மீது ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நீடித்தபடி மொத்தத்தில் தமிழர்கள் ஒரு திறந்தவெளிச் சிறைவாசிகளாகவே ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு குரலற்றவர்களாக நசுக்குறும் நம் ஈழத்தமிழர்களைக் காக்கவல்லது தாய்த்தமிழர்களான நம் ஆதரவுக்குரலாக மட்டுமே இருக்க முடியும். அங்கே அழிவின் விளிம்பிற்கே கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் நம் இனத்தை, போராடிக் காக்கும் கடமையேற்று களத்தில் உலகே வியக்கும்படித் திறனுறச் செயல்பட்டு வரும் ஒரே விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது இந்தியா விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டுமென்றும், தனித்தமிழ் ஈழமே தமிழின விடியலுக்கான நிலைத்த பயன் தரும் வெற்றி முழக்கமாகும் என்பதையும் முன்னெடுத்து முன்னேறுவோம் வெற்றி கொள்வோம்.



தனித் தமிழ் ஈழம்
“ஓர் இனத்தின் நிலையான வாழ்வுக்கு வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்பு தேவை என்பதே” நாடு இனம் பற்றிய உலகியல் முன்மொழிவு. அவ்வழியேதான் அவ்வினம் தன் பண்பாட்டை, மொழியை, வாழ்வியல் வளங்களை நிலை நிறுத்திக் கொள்ள இயலும். எனவே, நாடு என்பது ஓர் இனத்திற்கு உயிர் போன்றது. இதைத்தான் அய்.நா மன்றம் “எந்த ஒரு தேசிய இனத்திற்கும் தங்களுக்கான இறைமையுடைய ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொள்ள உரிமை உண்டு” என்று வரையறுத்து 1970 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் பிரகடனமாகக் கூறுகிறது.

மொழி என்பதே ஓர் இனத்தின் நிலைத்த அடையாளமாகும். மேலும் அவ்வினம் தன் அடையாளத்தைத் தற்காத்துக் கொள்;ள வேண்டுமெனில், அதற்கென உரிய சொந்த நாடு என்ற ஒன்று தவிர்க்கவியலாத் தேவையாகும். அண்மையில் இசுரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப் -பட்டதாலேயே ஆயிரமாண்டுகளுக்கு முன் இறந்து போன “ஹீப்ரு” மொழி மீண்டும் உயிர் பெற்று நிலைத்து நிற்கிறது. 4 இலட்சம் மக்கள் தொகையே கொண்டபோதும் தனக்கென ஒரு நாடிருப்பதால் மால்டா தன் “மால்டீஷ்” மொழியைக் காக்க முடிகிறது. 3,50,000 மக்கள் தொகையே கொண்ட சின்னஞ்சிறு தீவு நாடான மாலத்தீவு அதன் பாரம்பரிய “திவேஷி” மொழியை வளர்த்து நிற்கிறது. 3 இலட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஐஸ்லாண்ட் மக்கள் அவர்களின் மொழியான “ஐஸ்லாண்டிக்”கை அரணாகக் காத்து நிற்கிறார்கள். ஆனால் 8 கோடி மக்கள்;தொகை கொண்டிருக்கும் தமிழ் மொழியோ அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் இருப்பதாக மொழியறிஞர்கள் கூறும் நிலையில் உள்ளது. ஏனெனில் தமிழ் மொழிக்கென சொந்தமாய் ஒரு நாடில்லை என்பதே நேரடி ஒற்றைக் காரணம்.
இதன் வழி நோக்குகையில் தனித்தமிழீழப் போராட்டமானது உலகெங்கிலுமுள்ள தமிழ்ப் பேசும் 8 கோடி மக்களின் உரிமைப்போரே என்பது எளிதில் விளங்கும்.
இதில் மேலும் நிலத்தியல் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும்கூட உலகில் உள்ள 180 க்கும் அதிகமான நாடுகளில் 80 நாடுகள் தமிழீழத்தைவிட நிலப்பரப்பில் சிறியனவே.
உலக வல்லரசாக எழுந்து நிற்கும் ஜப்பான் பெரும் நிலவளமற்றது பூகம்பம் நிறைந்தது, வெறும் மனித உழைப்பையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே நம்பி நிற்கிறது. இசுரேலை எடுத்துக் கொண்டால் வெறும் பாலைவனம் மட்டுமே எஞ்சும். அதுவும் நவீன தொழில் நுட்பத்தை மட்டுமே சார்ந்துள்ளது. இன்னும் இது போன்றே உலகின் பல்வேறு நாடுகளின் நீர்நிலவளத்தைத் தமிழீழத்தோடு ஒப்பீட்டுப் பார்த்தோமானால், நம் தமிழீழம் மிக வளம் பொருந்திய நாடே.
இலங்கையின் மொத்த உற்பத்தியில் தமிழீழப் பகுதியில் இருந்து மட்டுமே நெல் 31சதவீதம் மிளகாய் 18சதவீதம் வெங்காயம் 38சதவீதம் உப்பு 90சதவீதம் மீன் வளப்பரப்பு 73.4சதவீதம் மீன் உற்பத்தி 52 பதனிடப்பட்ட மீன்கள் 90சதவீதம் கடலட்டைகள் ஏற்றுமதி முழுக்க தமிழீழப்பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் உலகின் மிகச் சிறந்த பருத்தி விளைவிடமாக யாழ்ப்பாண பூநகரியே உள்ளது. இவ்வகையே உலக அரங்கில் தனித்தியங்கவல்ல அனைத்துச் செழிப்பையும் தமிழீழம் தன்னடக்கி உள்ளது என்பது வெளிப்படை.
இத்தகு பின்புலங்களையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட, உலகில் புதிய நாடுகள் தோன்றுவதற்கானப் போராட்டங்கள் அம்மக்களின் உரிமை மறுப்பிலிருந்தே பிறந்தெழுகிறது..முன்னேறுகிறது…வெற்றியையும் பெற்றுத் தருகிறது…

நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்....




யாழ்ப்பாண நூலக எரிப்பு....
தமிழின வரலாற்றின் மீது வீசப்பட்ட அணுகுண்டு...
வரலாற்றுக் காலந்தொட்டே தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையின் மீதும், அறிவுச் செல்வங்களின் மீதும் பொறாமையிலும், வெறுப்பிலும் முகிழ்த்திருந்த சிங்களவர்கள் அதன் காரணமாகவே தங்களின் கட்டற்ற இனவெறித்தாக்குதல் போக்கில் எந்த வரையறையும் வைத்துக்கொள்ளாது, அறிவிரக்கமற்ற முறையில் வெறியாட்டமிட்டனர். அதன் உச்சமாய் அதுநாள்வரையான உலக வரலாறு கண்டிராத வகையில் யாரொருவரும் செய்யத்துணியாத மிகப்படுபாதகச் செயல் ஒன்றையும் திட்டமிட்டு செய்யத்துணிவு கொண்டனர்.

தென் ஆசியாவின் மிகப்பெரியதும், மிக அரிய நூல்களைக்கொண்டதுமான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பான நூலகத்தை 31.05.1981 நடு இரவில் இலங்கை இராணுவமும், காவல்துறையுமாகச் சேர்ந்து தீ வைத்து எரித்தனர்.1933இல் யாழ்ப்பாணத்தில் கே.எம்.செல்லப்பா என்னும் ஓர் நூல் ஆர்வலரின் முயற்சியால் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 844 நூல்களுடன் தொடங்கி பின் இந்திய அமெரிக்க உதவியுடன் பண்டையத்தமிழர்களின் கட்டடக் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து, 1959இல் யாழ்ப்பாணப் பொது நூலகமாக விரிவடைந்து சிறுகச்சிறுகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97 ஆயிரம் நூல்களும் மொத்தமாய் எரிந்து அன்று ஒரே இரவில் சாம்பலாகிப்போனதைக் கண்டு யாழ் நகரமே கண்ணீர் வடித்தது. அதற்கடுத்த நாள் காலை அதை நேரில் காண நேர்ந்த பன்மொழி அறிஞர் தாவீது அடிகள் அவர்கள் அப்போதே நெஞ்சு வெடித்து இறந்து போனார்.
இதில் தமிழர்களின் திரும்பப்பெறவியலா, அறிவுச்செல்வங்களாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மூலநூல்கள் பலவற்றையும் நாம் இழக்க நேரிட்டது, வரலாற்றில் எந்த ஒரு இனத்துக்குமே நடந்திராத கொடுந்துயராய் தொங்கி நிற்கிறது. எரிக்கப்பட்ட அந்நூலகக் கட்டடத்தை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாத்திட வேண்டும் என்ற நியாயமானக் கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்த சிங்கள அரசு அதையும் பின்னாளில் இடித்து தரைமட்டமாக்கியது.

ஈழம் ! - அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்


ஈழம் ! - அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், (09/12/2008)கடந்த செவ்வாய்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது:

இங்கிலாந்து அரசு விட்டுச் சென்ற வரலாற்றுப் பிழையினாலேயே தமிழர்கள் இத்தனை துன்ப, துயரங்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. எனவே இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்சினையில் தலையிடவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து தெரிவித்துள்ளார்.

ஈழம் அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 09/12/2008 செவ்வாய்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தோழர்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழம் அறியவேண்டிய உண்மைகள் என்ற நூலை புதுவை மாநில முன்னாள் அமைச்சரும்,ம.தி.மு.க மாநில அமைப்பாளருமான நா.மணிமாறன் வெளியீட, விடுதலை சிறுத்தைகள் அமைப்புச் செயளாளர் சு.பாவாணன் பெற்றுக் கொண்டார்.

மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து கருத்தரங்க சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், ஈழப்பிரச்னை, ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு, இது தமிழ்நாட்டு பிரச்னையாக இருப்பதால், இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. ஈழப்பிரச்னையை தமிழகத்தை கடந்து இந்தியப் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும்,கடமையும் தமிழர்களாகிய நமக்கு உள்ளது.

1948- பெப்ரவரி 4 ந்தேதி, இங்கிலாந்து அரசு, இலங்கையின் அரசுரிமையை சிங்களவர்களின் கையில் கொடுத்துச் சென்றது மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. அப்பிழையினாலே தமிழர்கள் இத்தனை துன்ப,துயரங்களுக்கு ஆளாக நேரிட்டது. தான் செய்த பிழையை திருத்திக் கொள்ளும் விதமாக, இங்கிலாந்து அரசு ஈழப்பிரச்னையில் தலையிடவேண்டும். இங்கிலாந்து பாராளுமன்றம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

கருத்து பரப்பல் என்ற நோக்கில் "ஈழம் அறியவேண்டிய உண்மைகள்" நூல் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது. போரை நிறுத்து ! என்ற வாசகத்துடன் கூடிய டி-சர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது: பழ.நெடுமாறன்

நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது: பழ.நெடுமாறன்Image and video hosting by TinyPic

நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில எந்தவித சலனங்களுக்கோ சபலங்களுக்கோ ஆளாகாமல், எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இரையாகாமல், நாம் நிமிர்ந்து நின்று, நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என கனடாவில் நடைபெற இருக்கும் கருத்துக்கணிப்புக் குறித்து பழ. நெடுமாறன் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான மனதிடம் நம்மிடம் இருக்க வேண்டும்.

30 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு உடன்பாடுகளைச் செய்து, எதுவும் பலன் அளிக்காத நிலையிற்றான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்கள் மறைந்த தலைவர் தந்தை செல்வா தலைமையில் ஒன்றுகூடித் தமிழீழத் தனிநாடு ஒன்றதான் எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு வேறு வழி இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்.

1976 ம் ஆண்டில் இருந்து வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றுதான் ஈழத்தமிழருக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆதற்கு அடுத்த ஆண்டு 1977 இல்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்துதான் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்கள். ஈழத்தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு முழுமையாக ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்குக் காட்டினார்கள். அதற்குப் பிறகு நடைடிபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆனால் இன்றைக்குச் சில பேர் தனிநாடு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை, சிங்கள அரசு கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு வாழ்வோம் என உபதேசம் செய்வதற்குக் கிளம்பியிருக்கின்றார்கள். இத்தகையவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் எதற்காக இதைச்சொல்கின்றார்கள் என்பதைப் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அருமைத் தமிழர்களே என்றைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானந்தான் என்றைக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். அதற்கு மாறாக நாம் ஒருபோதும் செயற்படக் கூடாது. எனவே எமது தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற இலட்சியத்தின் மீது உறுதியாக நிற்கவேண்டும் அதைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.

நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில எந்தவித சலனங்களுக்கோ சபலங்களுக்கோ ஆளாகாமல், எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இரையாகாமல், நாம் நிமிர்ந்து நின்று, நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு நாளை கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது.

கனடாத் தமிழர்கள் அனைவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று அதற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:45.01 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தவரை தெற்கில் இருந்து சிங்களவர்கள் யாரும் தமிழர் நில

சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன்
விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தவரை தெற்கில் இருந்து சிங்களவர்கள் யாரும் தமிழர் நிலப்பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. சிங்களவர்கள் பயமின்றி ஈழத்துக்குள் வரத்தொடங்கி உள்ளனர்.
அதற்கு வசதியாக வடக்கு தமிழர் பகுதிகளையும் தெற்கில் உள்ள சிங்களவர்கள் பகுதியையும் இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வியாபாரிகளாகவும், சுற்றுலா பயணிகளாகவும் யாழ்ப்பாணம் வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சிங்களவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் கோவில்களுக்கு செல்கிறார்கள். அதோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கும் செல்கிறார்கள்.

வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து, வளர்ந்த வீடு தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது. சிங்கள இராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியதால் அந்த வீட்டின் பெரும் பகுதி சேதமாகிவிட்டது.

பிரபாகரன் வீட்டை சிங்களவர்கள் ஆர்வமுடன் சுற்றிப்பார்க்கிறார்கள். அந்த வீடு முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு பிரபாகரன் வீட்டுக்குள் இருந்த சிறிதளவு மண் எடுத்துச் செல்கிறார்கள்.

அந்த மண்ணில் பிறந்ததால் பிரபாகரன் வீரமும், தீரமும் கொண்டிருந்ததாக கருதுகிறார்கள். இதன் மூலம் சிங்களவர்கள் மனதிலும் பிரபாகரன் தன்னிகரற்ற அவதார புருஷனாக வாழ்வது தெரிய வந்துள்ளது.

[முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி புஸ்பகலா துரைசிங்கம் மண்கும்பான் யாழ் 10-05-1973 16-08-1994 கடலன்னையின் பெண் குழந்தை கடற்புலிகள் மகளிர்

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

புஸ்பகலா துரைசிங்கம்

மண்கும்பான் யாழ்

10-05-1973 16-08-1994

கடலன்னையின் பெண் குழந்தை
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்"
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபுூரண உண்மை.
கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.
ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.
லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை'
என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.
கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.
எல்லாம் தயார்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.
என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
எல்லோருக்குமே பரபரப்பு.
தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.
ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.
'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.
ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.
தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.
இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்
Location: தமிழீழம்

புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர் – போராளியின் மடல்.

புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர் – போராளியின் மடல்.


"அன்பிற்குரிய "இனிய தமிழீழ பெரு மக்களே".

"உங்களுக்கு தெரிந்த "சிறிய அறிமுகத்துடன்,தகவல்",

த‌மிழீழ உருவாக்க‌ம்!...

இல‌ங்கை அர‌சின், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் த‌மிழ் அட‌க்குமுறையால் த‌ந்தை செல்வா உட்ப‌ட்டோர் அகிம்சை வ‌ழியில் போராடி "த‌மிழீழமே" தீர்வு என்றார்க‌ள். அவ‌ர்க‌ளின் அகிம்சை வ‌ழி ப‌ய‌ன‌ளிக்க‌வில்லை.

அதன் பின் தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களால், இப்போராட்டம் ஆயுதபோராட்டமாகியது. சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை, கொடுமைகள், சித்திரவதைகளை கண்டு தலைவர் அவர்கள் பொறுக்கமுடியாமல் "கிளர்ந்தெழுந்தார். தமிழ் மக்களின் விடிவிற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இடையான தடை கற்களை உடைக்க ஆரம்பித்தார்.(இது தவறா).

மகாபாரதத்தில் கூறப்பட்டவற்றை ஆழமாக சிந்தியுங்கள். யோசியுங்கள். தர்மம், நீதிக்கு எதிராக இருப்பவர்கள், எவராயினும் அழிக்கப்படவேண்டியவர்கள். (அது கூட பிறந்தவர்களாயினும்) இந்த கூற்று தவறு என்றால், கடவுள் தவறானவர். தவறான கடவுளை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள். (நீங்கள் வணங்குவதால் கடவுள் தவறானவர் இல்லை). ஆகவே, இந்த தமிழீழத்திற்கான போர் தவறில்லை.



ஒரு கண‌ம், சிந்தியுங்கள் வசதியான நல்ல குடும்பத்தில் பிறந்த தலைவருக்கு என்ன தலையெழுத்தா?

16 வயதிலிருந்து தலைமறைவாக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க. கேட்டால் சொல்பார்கள், அவர் அங்கு சொகுசாகதான் வாழ்ந்தார் என்று. நான் ஒன்று கூறுகிறேன், உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அவர் சொகுசாக வாழவில்லை. அவர் நல்லா இருந்தால்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும்.


அண்மை காலத்தில் இலங்கை இராணுவம் வெளியிட்ட வன்னியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்று.

நீங்கள் சிந்தியுங்கள், கஷ்டப்பட்ட குடும்பதில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு பெரிய ஹொட்டலில் போய் சாப்பிட்டு, அல்லது சுற்றுலா தளங்களுக்கு ஒரு முறை சென்றிருந்தாலும், புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எடுத்து அதை பாதுகாப்பார்கள். இதற்காக இவர்கள் தினமுமா?, அல்லது சிலவேளைகளிலோ இப்படி சொகுசாக வாழ்பவர்கள் என்று கருதமுடியுமா?



உங்கள் சிறு வயது பிள்ளைகளுக்கு மிக வேண்டப்பட்டவர்கள், விலை உயர்ந்த சிறு விளையாட்டு பொருள் ஒன்றை அன்பளிப்பு அளித்தால், உங்களால் தடுக்க முடியுமா? இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா?.

பிறந்தநாளே கொண்டாடாத குழந்தை ஏதேனும் ஒரு முறை அமைதியான சந்தர்ப்பத்தில் சிலரின் விருப்பங்களுக்கு அமைய ஒரு முறை கொண்டாடினால் சொகுசா? இப்படியான குழந்தையின் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கை என்பவர்களை எப்படி கூறுவது?

சிந்தியுங்கள்!...

ஆரம்பகாலத்தில் தலைவர் அவர்கள், அப்போதைய யாழ்.மேயராக இருந்த அல்பிரைட்டை கொன்றாராம். இது மாபெரும் குற்றமாம், ஒரு இனத்தில் பிறந்து அதே இனத்தை காட்டிக் கொடுத்தும், உயிர் பலி எடுப்பதை அங்கீகரித்து, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன். ஒரு தகுதியான பொறுப்பில் இருக்க முடியுமா? இவ்வாறானவர்கள் வாழ தகுதியானவர்களா? இதை அல்பிரைட்டுக்கு வேண்டியவர்கள், தலைவரை தப்பாக பிரச்சாரம் செய்தார்கள்.(சுயநலத்திற்காக)

இதே, போல் ஒவ்வொரு தொடர்சம்பவங்களும். சிலர் தாமும் தமிழருக்காக போராடுகிறோம் என்பார்கள். போராடுபவர்கள் நல்ல விதமாக போராடினால் யாராக இருந்தாலும் வரவேற்போம். அதை விட்டு விட்டு இப் போராட்டத்தை அரசியலாக்குவது,வியாபாரம்,பதவி,
பணம்,பெண் என்று கட்டு கோட்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வது, அவர்களிடம் பேசிப்பார்த்தார்கள் முடியவில்லை, போராட்டத்திற்கும் தடை கற்களாக இருந்தார்கள். என்ன செய்வது, நீங்களே கூறுங்கள். இப்படியானவர்களுக்கு துதிபாடுகிறவர்களும், இவர்களின் நட்பை வைத்திருந்த சில அரசியல்வாதிகளும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் இவர்கள் மரணத்தை தப்பு என்கிறார்கள்.

உண்மையில் நீங்கள் இதை விட்டு விட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனைகள், இழப்புகள் என்பதை அந்த பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். எல்லோராலும் எதிர்த்து போராட முடியாது. ஆனால் போராட முடிந்தவர்கள் போராடாமல் இருப்பதே மா பெரும் தவறு.

இப்படி நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள். உண்மையான வலி புரியும். இவர்கள் என் உறவினர்கள் இல்லை என்று நினைப்பதை விட்டு விட்டு, (இப்போது உறவினர்களாக இருந்தாலே சில சமயங்களில் சில பேருக்கு வலிப்பதில்லை) தனக்கு தான் கஷ்டம் வந்தால்தான் புரியுதே தவற, அப்படியே தனக்கு வந்தாலும் சிலர் திரும்பவும் வரக்கூடாது என்பதற்காக ஒதுங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.

உங்களையே மீண்டும் இது தாக்கும் மற்றும், உங்கள் குழந்தைகள் என அடுத்த சந்ததியினரையும் தாக்கும். இப்படி எவ்வளவு காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். அடிமையாக இருப்பதை விட, உயிரை விடுவது மேல். உயிரை விட துணிந்தால் ஏன் வீணாக உயிரை விட வேண்டும். உயிரை விட துணிந்த நீங்கள் அதை பிரயோசனமாக அதுவும் நமது நாட்டிற்காகவும், எம் மக்களுக்காகவும் விட்டால் எவ்வளவு பெரும் நன்மை. அடுத்த சந்ததியினராவது நிம்மதியாக வாழ்பார்கள். அல்லது அவர்களும் உங்களை போல ஒவ்வொரு நாளும் பயத்திலும், நிம்மதியில்லாமலும் வாழவேண்டிவரும்.

மற்றும், நீலன்திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற அறிவு தலைவர்களை எல்லாம் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்களே. அந்த அறிவாளிகள் தங்கள் அறிவை என்ன செய்தார்கள். எதிரிக்கு அடகு வைத்தார்கள். தன் இனத்திற்காக செய்திருந்தால் எவ்வளவோ நன்மை அதை விட்டு விட்டு இனத்திற்கு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிக்க திட்டமிட்டார்கள், பிரச்சாரம் செய்தார்கள். தங்களின் சுயநல சுகபோக வாழ்க்கைக்காக. இப்படி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

சிந்தியுங்கள், சிங்கள தலைவர்கள் அவர்கள் இனத்திற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பது போல இவர்களும் கொடுத்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இதற்கு எதிர் மாறாகவே இவர்கள் இருந்தார்கள் தவற, என்ன செய்தார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் சந்திரிக்காவிற்கு மிகவும் வேண்டியவராக இருந்ததும் வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார். நீலன் திருச்செல்வம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருந்தார். இவ்வளவு காலமாக என்ன செய்தார்கள். கேட்டால் புலி தடையாக இருந்தது என்பார்கள்.


புலி நல்லதுக்கு தடையாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களால் புலிகளை மீறி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனம் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை, சிங்கள இனவாதமும் விட்டுயிருக்காது அப்படியானால் ஏன் இவர்களுடன் கைகோர்ப்பான்.

மற்றும், ராஜீவ் காந்தி கொலை மாபெரும் தவறு என்கிறார்கள். ராஜீவ் அமைதி ஒப்பந்த காலத்தில் அவரின் அமைதி படை இலங்கையில் என்ன செய்தது.

பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எடுத்த‌து, கொடும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல் அழிப்பு என எவ்வளவோ நாசம் பண்ணினது, ஒரு ராஜீவ் இறந்ததிற்கு இவ்வளவு துடிக்கிறார்ககளே.

அங்கு அவ்வளவுபேர் இறந்ததிற்கும், அக் கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்வார்கள்.

இப்ப அதனால் எவ்வளவு பிரச்சினை என்கிறார்கள். இருந்திருந்தால், அப்பவே அழித்திருப்பார்கள், அப்ப அழித்திருந்தால் இப்படியான சம்பவம் உலகிற்கு தெரிந்திருக்காது. தமிழ் இனத்தின் அழிப்பும் அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால் இப்ப தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது. முழு உலகத்தின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. மற்றும் முழு தமிழ் இனமும் கிளர்ந்து நிற்கிறது. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆனால் எம் இனத்திற்கு இந்தியா மாபெரும் தவறு இழைத்து விட்டது. தனக்கு தானே மண் அள்ளிக் கொட்டி விட்டது. மற்றும் இந்தியாவின் இச்செயலை தமிழீழ மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பகை உணர்வு தலைவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் ஒட்டு மொத்த இந்தியாவை இவ்வளவு அழிவிற்கும் பின் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை. உண்மை நட்பு நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுவே இந்தியாவினது பாதுகாப்பிற்கும் உகந்தது.

இப்ப இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் தூர நோக்கு பார்வை குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவும் இத் தவறை ஒரு நாள் உணர்வார்கள்.அப்போது இவ் அழிவுக்கு என்ன பதில் சொல்வார்களோ.

புலிகள் இராணுவ பலத்தை மட்டுமே நம்பினார்கள், அரசியல் போக்கை மறந்து விட்டார்கள், வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்றார்கள். உண்மையில் புலிகள் அரசியல் சம்பந்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தினார்கள் ஆனால், வெளிநாடுகள் விலை பேசுவதாக அமைந்தது, சில விடயங்கள் இந்தியாவுக்கு பாதகமான விடயமாகவும் இருந்தது.


எங்கள் தலைவர் எதற்கும் விலை போகமாட்டார். நம்பினவர்களை ஏமாற்றவும் விரும்பமாட்டார். அப்படி பல காரணங்களால் சரிவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார்கள். உலக நாடுகள் தங்கள் சுயநலத்தை கருத்திற் கொண்டே அரசியல் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் உணர்வு, சுதந்திரம், கெளரவம் கண்ணுக்குத் தெரியவில்லை. என்பதே உண்மை.

ஒரு கண‌ம் சிந்தியுங்கள், பல ஆயிரம் மாவீரர்களின் தமிழீழ கனவை அழிக்கலாமா? தலைவர் இதை எப்படி செய்வார்? மாவீரர்களை நீங்கள் சாதாரணமாக பார்க்காதீர்கள். ஒவ்வொரு மாவீரனும் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். இள வயதில் நாட்டுக்காக எந்த சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்காமல், நாட்டுக்காகவே சந்தோஷ்மாக வீரமரணமடைந்தார்களே, நீங்கள் சிந்தியுங்கள் உங்கள் எல்லோராலும் அப்படி முடியுமா?

அந்த தலைவன் வளர்த்த இந்த மாவீரர்களாளேதான் முழு உலகிற்கும் தமிழ் இன பெருமை தெரியவந்தது. இல்லையென்றால் ஆரம்பகாலம் போல் அடிமையாக, உணர்வற்று பயந்து வாழ்ந்தவர்களாகவே இருப்பீர்கள்.

அவர்களின் தியாகத்தினால் நீங்கள் இன்று கெளரவத்துடன் ஓரளவேனும் வாழ்கிறீர்கள். மாவீரர்களை உங்களில் ஒருவை போல் நினையுங்கள், அதன் புனித தன்மை தெரியும். அது புரிந்தால் "நீங்களும் உணர்வுள்ள, வீரமும், மானமும் கொண்ட சோர்ந்து போகாத வீர தமிழ் மகன் ஆவீர்கள்".


எமது போராட்டத்தில் தலைவர் அவர்கள் சில தவறுகள் செய்திருப்பதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பாதகமாக அமைந்தவற்றை கூறினார்கள்.

ஆனால் அம் முடிவுகள் அந்நேரத்தில் நிச்சயமாக சரியானதாகவே எடுக்கப்பட்டது. போராட்டத்தில் வெற்றி, தோல்வி வருவது சகஜம், அதற்காக தவறு என்று அர்த்தமில்லை.

தலைவர் அவர்கள் ஒரு முடிவை தீர்க்க தரிசனமாகவே எடுப்பார். எடுத்த பின் அதைப் பற்றி மனச்சஞ்சலங்கள் கொள்வதில்லை. ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் தெளிவுடனே இருப்பார். மற்றவர்கள் போல் அடிக்கடி குழப்பிக் கொண்டிருப்பதில்லை. இதில் இருந்து அவரின் மன உறிதியை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் போல் இருந்திருந்தால் தனி மனிதராக இவ்வளவு கால போராட்டத்தை வழி நடத்தியிருக்க முடியாது. இது உண்மை.

எமது போராட்டத்தில் தற்சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தோல்வி என்று மட்டும் பார்க்காமல், வேறு வழிகளிலும் சிந்தியுங்கள்.
கடைசியாக நடந்த வன்னிப்போரில் இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் நடந்த போராக நிச்சயம் இல்லை.


இது புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர். எந்த உதவியின்றி தனியே நின்ற புலிகளும், 20 உலக நாடுகளின் துணையுடன் நின்ற இலங்கை அரசும்.

அதாவது உலக நாடுகளின் முப்படைகளுக்குரிய ஆயுதம், புலனாய்வுத் தகவல்கள், ராடர்கள், பயிற்சி, இராணுவம், இராணுவ வல்லுனர்கள், மருத்துவங்கள், இராணுவ உபகரணங்கள், பணபலம், பதவிபலம் என்று நிறைய ஒன்று சேர்ந்து வன்னிப்போர் முனையில் குவித்தார்கள்.

இது மட்டுமில்லாமல் விலை போனவர்களும், துரோகிகளாகியவர்களும் இப் போரில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு இருந்தும் உலக நாடுகளால் புலிகளுடன் எவ்வளவு காலம் போரிட்டார்கள் என்று யோசியுங்கள்.

அவ்வளவு காலம் போரிட்டதும் இல்லாமல், கடைசியிலும் முடியாமல் கோழைத்தனமாகவும், நயவஞ்சகத்துடனும் தடை செய்யப்பட்ட நச்சுக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், மயக்கக்குண்டுகள் என்பவற்றையும் வீசினார்கள். அவற்றை வீசியும் புலிகளும், மக்களும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தார்கள் என்று யோசியுங்கள்.

புலிகள் இன்னும் போராடி இருப்பார்கள். ஆனால் சிலர் கூறினார்கள் புலிகள் ஏன் பெரிதாக சண்டை பிடிக்கவில்லை எல்லாவற்றையும் இழந்தார்கள். வெளியில் இருந்து பார்பவர்களுக்கு புரியாது.

ஏனெனில் இலங்கை அரசு போர்பகுதியில் செய்தியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை,

உண்மையில் புலிகள் அங்கு முழு பலத்துடன் போரிட்டார்கள். சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் போருக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டு இருக்கும் இம் மாபெரும் போரில். ஆனால் புலிகள் பல மாதக்கணக்கில் நடந்த போரை தாக்குப்பிடிக்க எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்களின் ஆயுதக் கப்பல்கள் வரமுடியாமல் போனதால் ஆயுத சப்ளை குறைந்து விட்டது. அதனால் தலைவர் அவர்கள் நடக்கவிருந்த இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர் இழப்புக்களை தடுப்பதற்காகவும் ஆயுதங்களை மெளனிக்கச் செய்தார்.

உண்மையில் புலிகள் பலத்தை உலக வல்லரசு மற்ற இதர நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் நன்கு கணித்திருப்பார்கள். என்பதே உண்மை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த "கிருஸ் ரையன்" போன்றவர்களும் புலிகளின் பலத்தை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளைப் போல் சிறிய நிலப்பரப்பில் குறைந்த வளங்களுடன் உலக நாடுகளுடன் இவ்வளவு காலம் போரிட்டு அப் படைகளுக்கு பாரிய இழப்புகள்(இலங்கை அரசு அறிவித்தது கடைசி போரில் 6500 இராணுவம் பலி, 25000 ற்கு மேற்பட்டோர் காயம் என்றார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கும் யோசியுங்கள்). ஏற்படுத்த உலகத்தில் எந்த இராணுவத்தாலும் நிச்சயமாக முடியாது. தடை செய்யப்பட்ட குண்டுகளின் மத்தியில் போய் நின்று பார்த்தால் தான் புரியும். அப் போரின் கணம்.

தற்போது தமிழ் மக்கள் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பியிருக்கிறார்கள்.

இதில் அதாவது தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான போராளிகளும் மரணித்தவேளையில் அவர்கள் மரணிக்கும் போது தான் மட்டும் தப்பிப்பது சரியில்லை என நினைத்தும்,

தான் இருப்பதால் தான் உலக நாடுகள் ஒரு தீர்வு தராமல் இருப்பதாகவும் கருதி போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தாலும்,

அல்லது தான் வீரமரணம் அடைந்தால் இவ்வளவு கால போராட்டம் வீணாகிவிடும் என்றும், உலக நாடுகளிற்கு தெரியாமல் இருப்பதற்காகவும்,

கடைசி நேரத்தில் தலைமறைவாக இருந்தாலும். இதில் எந்த முடிவையும் தலைவர் அவர்கள் எடுத்திருந்தாலும், நிச்சயமாக போற்றுதலுக்குரியவராவார்.(எப்பவும்)

அந்த மாமனிதனின் விலை பேசமுடியாத உறுதிபடைத்த இலட்சியத்தையுடைய அவரின் மனதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அவர் எப்பவும் எந்த துயரத்திலும் மனம் தளராத உறுதிபடைத்தவர். எப்போதும் தெளிவாகவே இருப்பவர், அதனால் அவர் அந்த நேரத்தில் நிச்சயமாக உறுதியான ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆகவே நீங்கள் எல்லோரும் தலைவனின் இலட்சியத்தை அடைவதற்காக, ஒன்று பட்டு கருத்து வேறுபாடுகளை இப்போதாவது மறந்து ஒற்றுமையுடன் தமிழ் இனம் சுயகெளரவத்துடன், தலை நிமிர்ந்து, உரிமையுடன் நிம்மதியாக வாழ உலக நாடுகளின் மனதில் இடம்பிடிக்க கூடியவாறும், அதனால் "தமிழ் தனி அரசு" அமைய பாடுபட உறுதிமொழி எடுத்துகொள்வோமாக.

இவ் அமைதி வழிப்போராட்டம் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைகளற்றதாக இருக்க மிக முக்கிய கண்காணிப்புடன் செயற்படுங்கள். தீயசக்திகளும் தூண்டிவிடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள்.

இப் போராட்டத்தில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பதவிப்போட்டிகளை இச்சந்தர்ப்பத்திலாவது தமிழர்களாகிய நீங்கள் நீக்கிவிடுங்கள்.

தமிழ் இனம் தலைநிமிராமல் இப் பதவி, பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் மட்டும் எத்தனை நாட்கள் வாழுவீர்கள். வாழவிடுவார்கள்,

சிந்தியுங்கள். தயவுசெய்து அளவுக்கதிகமான ஆசைகள், பொறாமைகள், போட்டிகளை தள்ளிவையுங்கள். நீங்கள் அவர் பக்கம், இவர் பக்கம் என்றில்லாமல் நியாயத்துடன், வழிதவறாதவர்களுடன் உங்களின் உண்மையான மனச்சாட்சிபடி நில்லுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.

எதிரி எங்களை அழிக்க எவ்வளவு இரகசியமாக, திட்டங்களை உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் தீட்டினான். அவனை விட புத்திசாலிகள் நீங்கள். ஏன் உங்களால் முடியவில்லை. முக்கியமாக முகாம் மக்களின் நிலையை ஒரு கண‌ம் சிந்தியுங்கள். ஏனோ தானோ என்று இல்லாமல், அவலங்களை உங்கள் அவலங்களாக எண்ணிப் பாருங்கள். இவர்களை வெளியே எடுப்பது புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.

புலிகளால்தான், இவ்வளவு இழப்பு என்பவர்கள், இப்ப அவர்களுக்கு எந்த தடையும் தற்சமயம் இல்லை. இப்ப இவர்களது பேச்சு இலங்கை அரசிடம் எவ்வளவுக்கு எடுபடுகிறது என்பதை பார்ப்போம். தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு எப்படி தங்களால் உடனடியாக செய்யமுடியும் என்பார்கள். சரி இப்போராட்டத்திற்கு முன் இவர்கள் என்ன செய்து எதை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகவே எல்லாவ‌ற்றையும் உணர்ந்து செயற்படவேண்டிய காலம் இது.

எங்கள் போராட்டம் வெறும் ஆயுதபோராட்டத்தில் மட்டும் இருக்கவில்லை. புலிகள் ஆரம்பகாலங்களில் அகிம்சை வழியிலும், பேச்சுவார்த்தை வழிகளிலும் ஈடுபட்டார்கள். அவை திருப்திதரவில்லை, ஏமாற்றமாகவே இருந்தது.

உதாரணமாக திலீபன் அண்ணாவின் அகிம்சை போராட்டம். அவரின் தியாகம் காந்தியின் தேசத்திற்கே அகிம்சையை உணர்த்தியது. அப்படி நடந்தும் ஏதும் கிடைக்கவில்லை. அதன் பின் ஆயுத போராட்டம் உச்சம் பெற்றது. எம் போராட்டத்தை எதிரி தவறு என்றாலும், எம் இனத்தவர்களும் அல்லவா. இலங்கையில் எத்தனையோ சிங்களவர்களுக்கு இடையில் போட்டி கட்சி, குழுக்கள் உள்ளது. ஆனால் தமிழனுக்கு எதிராக என்றால் ஒன்று சேருகிறார்கள். இங்கு அப்படியா, எம் இனத்தவர்கள் சிலர், எதிரி பக்கம் செல்கிறார்கள். எவ்வளவு வேதனை. உயிருக்காக எப்பவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

ஆகவே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உலக அரங்கில் எம் உணர்வுகளை உரத்து ஒலிக்க செய்வதுடன், எம் சுயஉரிமையை பெற்றுக்கொள்வதுடன் "தமிழ் அரசை" நிறுவ உறுதி பூண்டு நிற்போமாக.

என் அன்பான இன்னொரு வேண்டுகோள், தமிழர்கள் எல்லோரும் (முக்கியமாக குழந்தைகளுக்கு) மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை குழந்தைப் பருவத்திலே நிச்சயமாக கற்று அறிந்து கொள்ளவையுங்கள். அவை ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் மிக முக்கியமானவை. அவற்றை மேலோட்டமாக பார்க்காமல் அதில் இருப்பவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். அத்துடன் எமது தாயக வரலாற்றை முக்கியமாக அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருங்கள். தெரியாத பலவிடயங்களை தெரிவியுங்கள்.

எனவே சோர்ந்து போகாமல் எமது அமைதி வழி "தமிழ் தனி அரசு" போராட்டத்தை பெரும் எழுச்சியுடன் தொடர்ந்து கொண்டிருப்போமாக. இப் போராட்டத்தின் முடிவை காலம் நிர்ணயிக்கும். அதுவரை உலக நாடுகளின் கைகளில் தான் தற்போது உள்ளது. அதனால் இவர்கள் உண்மையை உணர்ந்து நல்ல தீர்ப்பை தருவார்கள் என்று நம்புவோமாக. அப்படி நடக்காவிடின் அதன் விளைவுகளுக்கு உலக நாடுகளே பொறுப்பாவார்கள்.

"ஒற்றுமையின் பலம் ஓங்குக"

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அன்புடன்,
புலனாய்வுப் போராளி,
இளங்கோ...
நேசன்(ஈழத்திலிருந்து)

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.

இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் 'கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார்.

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.
(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.
(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.
(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.
1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.
1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.
1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு 'புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.
இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.

இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.
இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.


சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.
1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.
1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.

1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1
(ஆவணி 1984 - ஆடி 1987)
ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.