வெள்ளி, 29 ஜனவரி, 2010

http://tamileelamsongs.blogspot.com/2009/11/blog-post_9085.html

தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

ந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது.

இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள்.

இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை!

thalaivar
லகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை.

அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது).

இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் இந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், பொய்யுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்… அது இந்த உலகறிந்த உண்மையும் கூட.

பயங்கரவாதமென்று பச்சைச் சாயம் பூசி, பாரெல்லாம் சென்று, தங்கள் பக்தாசலங்களிடம் படைவலுத் திரட்டி ஒரு தேசிய இனத்தையே பாழ்படுத்தி அழித்தொழித்த பெருமை இந்த அண்டப் பெருவெளியில் இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறொருவருக்குமில்லை.

தம் தாய் நிலத்தினை விழுங்கும் இராட்சத பூதத்திடமிருந்து தமிழ் ஈழத்தை விடுவிக்க அதன் விடுதலைக்காக, பெரும்பான்மையினரால் அடிமைப்படுத்தப்படும் ஒரு இனத்தின் சுதந்திரத்திற்க்காக, அவர்களின் அரசியல் விருப்பங்களை வென்றெடுப்பதற்க்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை அழிக்க அகிலத்தைத் திரட்டியது இலங்கை. அதில் வெற்றி பெற்றதாக இப்போ இறுமாப்பும் கொள்கிறது.

இலங்கை அரசின் இந்தப் போர்க் கச்சேரிக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்றவை ஆயுதங்களை வழங்கிய பக்க வாத்திய கர்த்தாக்கள்.

அத்தோடு அணிசேர் கலைஞர்களாக (தமிழக முதலமைச்சர் கலைஞர் உட்பட), ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் போன்றவையும் பங்கேற்றன. இவர்களுடன் மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகளும் மறைமுகமாகச் சுருதி சேர்த்து ஆதரவாக ஆலவட்டம் பாடின.

இதற்கெல்லாம் ஆதாரமாக பிரிட்டனின் பிரபல பத்திரிகையான த டைம்ஸ் பத்திரிகை அண்மையில் பல ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் சுமார் 13.6 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் மதிப்புள்ள இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது. ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்ச் செல்வன் மரணத்தின்போதே…

தங்களுக்கெதிரான யுத்தத்தை இலங்கை அரசு முன்னெடுக்க, அகிலமே திரண்டு நின்று இலங்கை அரசுக்கு முட்டுக் கொடுத்து உதவுகின்றது என்பதை, தமிழீழ விடுதலைப் புலிகளுகளும் அறிந்திருந்தனர். அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது அவர்களதைப் பூரணமாகப் புரிந்து கொண்டனர்.

அத்தோடு தங்களுக்கெதிராக குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், இந்தியாவின் செயற்பாடுகளையும் புலிகள் துல்லியமாகக் கணிப்பிட்டிருந்தனர். இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆயுத ஆளணி வழங்கல் சேவைகளை உலகுக்கு வெளிக் கொணரவும் தலைப்பட்டனர்.

அதன் வெளிப்பாடே 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வவுனியா வான்படை கட்டுப்பாட்டுத் தளத்தின் மீது வான்புலிகளும், கரும்புலிகளும் இணைந்து தாக்குதல் நடாத்தி, அங்கிருந்த கண்காணிப்பு ராடர் கருவிகளை அழித்தனர். அத்தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் காயமடைந்தனர். இந்தச் செய்திகள் மெல்ல மெல்ல வெளியே கசிந்தன.

இந்தியா தந்த ராடார் கருவி…

இந்தக் காலத்தில் இலங்கை மகா உத்தம அதிபர் எனப்போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச விடுத்த அறிக்கையொன்றில் “இந்தியா தந்த ராடர் கருவி, தாக்குதலுக்கு வந்த புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தியா சிறிலங்காவுக்குக் கொடுத்தது (2 Dimension) ராடர் கருவி. இந்தியத் தயாரிப்பான இந்த (2 Dimension) ராடர் கருவி புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது என்பதால், (3 Dimension) ராடர் கருவியை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து சிறிலங்காவுக்குக் கொடுத்ததும் நீங்களறிந்ததே.

இப்படி சர்வதேசத்து சக்திகளின் உற்ற துணையோடு இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த முன்னெடுப்பை விடுதலைப் புலிகளும் முழுமையாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்களும் தங்கள் யுத்த வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டார்களென்று படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலப் பரப்பினைப் பாதுகாப்பதை விட இலங்கை படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதிலேயே அவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர் என்றும் கூறுகின்றனர்.

கிளிநொச்சி்யில் இடம்பெற்ற தற்காப்புத் தாக்குதல்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 200 வரையான புலிகளை மட்டுமே பயன்படுத்தியிருந்த போதிலும், இலங்கைப் படையினருக்கு அதிகளவில் இழப்புகளைக் கொடுத்தனர். அத்தோடு ஆசிய சக்திகள், உலகின் பிறநாடுகளின் அணுசரணையோடு தம்மோடு மோதுவதைத் தனியான ஆயுத சக்தியால் மட்டும் எதிர்கொள்ள முனையவில்லை. இதனை அரசியல், இராஜதந்திர முறையில் அனுக, அதற்கு அழுத்தங்களை கொடுக்கும் பொறுப்பை புலம்பெயர் தமிழரிடம் விட்டிருந்தனரென்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றனர்.

கொல்லப்பட்டது 70000 தமிழர்கள்

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் 70000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் அடக்கம். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூட ஐ.நாவிலுள்ள ஐயாக்கள் சிலரும், கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் இலங்கைக்குச் சார்பாயிருந்து எண்ணிக்கையைக் குறைக்கவே முயற்சிக்கிறார்கள்.

பாதுகாப்பு வலயமென இலங்கைப் படையினர் விரித்த வலை பிணக் குவியலாலும், உடலுறுப்புகளை இழந்து வாழும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில், படுகொலை செய்யப்படும் தமிழர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட எவருமில்லை. பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை. மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை.

பதுங்கு குழிகளுக்குள் இருந்த அப்பாவி மக்களின், அடிப்படை மனித உரிமை குறித்து பேச முடியாவிட்டாலும் குறைந்தது அவர்களின் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இளகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!

அந்த இறுதி நாள்…

பாதுகாப்பு வலயமென்று இலங்கைப் படையினர் விரித்த வலையினுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. மே மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை தொடக்கம் மே மாதம் 18ஆம் நாள் திங்கட்கிழமை வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் சிறிய கால எல்லைக்குள் நடைபெற்றிருந்தன என்பது இப்போ தெரியவருகின்றன.

அதிகளவு மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான விழுப்புண்ணடைந்த அப்பாவி மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக, ஒரு மூன்றாம் தரப்பினுடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றன.

காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரணடைவதற்கு தமிழக, இந்திய, சர்வதேச அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்பது நீங்களறிந்த நிதர்சனம். இதற்கு ‘த டைம்ஸ்’ இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவர் சாட்சியாகவுள்ளார். அவர் தன் கட்டுரையிலும் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவே சூத்திரதாரி..

போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் நாள் சில மேற்குலக மேதாவிகள் ஐ.நாவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்தனர். 13 ஆசிய நாடுகள், 13 ஆப்பிரிக்க நாடுகள், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களால் முறியடித்துள்ளனர்.

குறிப்பாக இதற்கெல்லாம் சூத்தரதாரி எம் பக்கத்து நாடான தமிழினத் துரோக பாரதநாடு தான். இந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோ, ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் மௌனம் சாதித்தனர்.

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலக மேதாவிகளுக்கு எதிராகவும் ஆசிய, ஆபிரிக்கா, கியூபா போன்ற நாடுகளினதும் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை, தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கக் கயிறு இழுப்பில் மேற்குலக மேதாவிகளுக்கேற்பட்ட தோல்வியேதான். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரானது தமிழ் மக்களை விட மேற்குலக மேதாவிகளுக்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் படைத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவு.

பிரபாகரன்… சில முரண்பட்ட தகவல்கள்…

இதனிடையே விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பாக அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சிறிலங்கா இராணுத்தரப்பும் 17, 18, 19ஆம் நாட்களில் தங்கள் தகவல்களுக்கே முரண்பட்ட வகையிலே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டன. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், சர்வதேச புலனாய்வுகளுக்கான பொறுப்பாளர் அறிவரசன் ஆகிய இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் என்பது விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டம் பற்றியும் பூரணமாய் அறிந்தவர்கள் அறிவார்கள். இதில் பெரும்பான்மைத் தமிழருக்கு ஒரு ஐயம். எந்த தகவல் சரியானது, எது தவறானது என்பதானதொரு குழப்பம்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை.

புலிகள் சொல்ல விரும்பும் சேதி!

விடுதலைப் புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப் பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு நுணுக்கமான தகவலை கூற முயல்கிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது ஆய்வாளர்கள் முடிவு.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய மிகப் பெரும் கடமை ஒன்று அனைத்துத் தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன.

ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன!

பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக ‘கொல்லப்பட்ட’ தருணங்கள்!

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வீரச்சாவடைந்து’ விட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல என்பது தாங்களறியாததல்ல.

1984-09-05 ஆம் நாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று இலங்கை பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியானது. சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாக அச்செய்திகள் விபரித்தன.

தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழ்ந்த தமிழர்களிடையே பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. ஆனால் மறுநாள் காலை தமிழகத்தில் மதுரையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் வீட்டிற்கு தலைவர் பிரபாகரன் சிரித்த முகத்துடன் பிரசன்னமானாராம்.

புன்னகையுடன் உள்ளே சென்ற தலைவர் பிரபாகரன் அந்த ஆதரவாளரின் சிறுமியாயிருந்த மகளை தூக்கி வாரி அணைத்துக்கொண்டு “மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல” என நகைச்சுவையாகச் சொன்னாராம் அன்று.

25-07-1989 அன்று பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராசாவுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வன்னியிலிலுள்ள ஆனந்தப் பெரியகுளத்தருகே இருந்ததாகவும், இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் இலங்கை, இந்திய, தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

அன்றைய நாளில் வட-கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், இந்தச் செய்தியை அன்று உறுதி செய்தார். அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரென்பதும், யாரால் இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டாரென்பது ஆனால் இரண்டு நாட்களில் இச்செய்தியில் கொஞ்சம் கூட உண்மையில்லை, தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பதை நாமனைவரும் தெரிந்து கொண்டோம்.

பின்னர் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடந்த நிகழ்வொன்றில் எங்கள் முன் தோன்றினார் தலைவர்.

26-12-2004 அன்று அடித்த சுனாமியின் போது தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சுனாமி பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லையென்றும் ஒரு பரபரப்பான வதந்திச் செய்தி வெளியிடப்பட்டது. தலைவர் பிரபாகரனுக்காக விலை உயர்ந்த சவப்பெட்டி ஒன்று வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

அந்தச் செய்தியை இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று உறுதிசெய்தார். சில நாளிதழ்களும் இச்செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை.

ஆனால் பத்து நாட்களின் பின்னர் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்த நாளிதழ்களும் வெளியிட்டன.

ஆயினும் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக தாங்கள் வெளியிட்ட பொய்களுக்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்த நாளிதழ்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

15-12-2007 அன்று சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை சிறிலங்கா பாதுகாப்புத்துறை வெளியிட்டது.

இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக வக்கிர செய்திகளை பரப்புவதில் சிறிலங்கா அரசும் இந்திய உளவுத்துறையான (RAW) ராவும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்து விட்டன. தலைவர் பிரபாகரனை கொலை செய்ய பல திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பியுள்ளார், அவ்வாறே அவர் இப்போதும் மீண்டுள்ளார் என்பது இன்றைய உண்மை நிலை!

புலிகள் விட்டுச் சென்ற சான்றுகளின் பின்னால்…

நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் நாள் கிளிநொச்சி நகரம் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை இன்றும் புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியிருக்கின்றதென படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வசிப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப் புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதை முன்னேறிய இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும், ராணுவ அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டன.

அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த வீடொன்றில் தேசிய தலைவர் பயன்படுத்தும் உடைகளையும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டுவிட்டு சென்றிருந்தனர். அதன் பின்னர் தேசிய தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர்.

மகன் சாள்ஸ் அன்டனியினதும், மகள் துவாரகாவினதும் தேர்வுத் தாள்களையும், அவர்கள் முன்னர் பாவித்ததாகக் கூறி சில விளையாட்டுப் பொருட்களையும், நெருங்கிய உறவினர்களுடன் மற்றும் தளபதிகளுடன் தலைவரது குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், இலங்கைப் படைத்தரப்பு கைப்பற்றியதாக தங்கள் ஊடகங்களில் அதனை வெளியிட்டனர்.

இதன் மூலம் இலங்கை இராணுவமும், இலங்கை அரசாங்கமும் தலைவர் பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதியிருந்தனர்.

ஒரு துப்பாக்கியை எடுத்துச் செல்வதா கஷ்டம்!

ஆகவே அவர்களின் முழுப் படைப் பலமும், கவனமும் இங்கு திருப்பப்பட்டிருந்தது. இதற்க்காக இலங்கையின் எல்லாப் படை பலத்தையும் ஒருங்கமைத்து இவ்விடங்களில் மையப்படுத்தினர் என்பது அப்பட்டமான உண்மை. தலைவர் நிச்சயமாக இங்கேதான் இருந்தவரென்றால் இப்படியான பொருட்களையும், எச்சங்களையும் ஏன் விட்டுவிட்டு செல்லவேண்டும் என்ற தர்க்க ரீதியான வாதங்களும் எழாமலில்லை.

விடுதலைப் புலிகள் பின்நகரும் போது எனறுமே தங்கள் ஆயுதங்களை, தங்கள் ஆவணங்களை விட்டுச் செல்வதில்லை. கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சில வாரங்களின் பின் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை அப்போது தெரிவித்திருந்தனர்.

அதாவது, கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலும், மற்றய இடங்களிலுள்ள கட்டங்களிலும் கதவுகளில் திறப்பு மட்டுமே இருந்ததாகவும், வேறெந்தப் பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லையென, அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் அன்றைய நாட்களில் குறிப்பிட்டிருந்தனர்.

பெருமளவில் ஆட்லறி உந்துகணைச் செலுத்திகளையும், கனரக ஆயுதங்களையும் மற்றும் படைத்தளவாடங்களை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல்ட் கமோண்டோ ரக துப்பாக்கியைக் கொண்டு செல்வது கடினமானது அல்ல என்கின்றனர் பிரபல படைத்துறை ஆய்வாளர்கள்.

இறுதி நாளன்று தலைவர் வன்னியில் இல்லை!

இறுதி நேரத்தில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த பின்புதான் தலைவர் தப்ப முயற்சித்தார் என்பது முரணான வாதம். ஏனெனில் அப்படிப்பட்ட முட்டாள்தனமான முன்னெடுப்புக்களை விடுதலைப் புலிகள் என்றுமே முன்னெடுத்ததில்லை. ஆக சில நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இறுதி நாளான திங்கட்கிழமை காலை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வெளியுலகுடன் தொடர்பு கொண்டது (ரேடியோவில்) நீங்களனைவரும் அறிந்ததே. அவர் பேசும் போது, பின்புலத்தில் அவருக்கருகில் கேட்கப்பட்ட வெடியோசைகளையும், குண்டுச் சத்தங்களையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அப்போதைய அவரின் குரலிலிருந்து அவர் தன் இறுதி நேரத்தை நெருங்கி விட்டாரென்பதையும் நீங்களறிந்திருப்பீர்கள்.

அந்த அபத்த நிலையிலும், அவரின் இறுதி நேரத்திலும், ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் ஒரேயொரு கேள்வி தான் அவரிடம் கேட்கப்பட்டது. (எங்களின்) உங்களின், உலகத் தமிழினத்தின் ஏன் தமிழ்ச் சாதியின் ஒட்டுமொத்தக் குரலாய், வேண்டுகையாய் அவரிடம் கேட்கப்பட்டது அந்த ஒரேயொரு கேள்வி தான் அது… தேசியத் தலைவர் எங்கே?

அந்தப் பதில் தெளிவாகவும், எம்மீது நிலை கொண்டு, நீண்டிருந்த சோகத்திலும் எமக்கு மிகுந்த தெம்பாகவும் இருந்தது.

‘தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார்!’ – என்பதே அந்த பதில்!

தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாக,
காவிய நாயகனாக,
தமிழினத்தின் வியத்தகு வீரனாக,
இனத்தின் விடுதலை ஆன்மாவாக,
தமிழினத்தின் மீட்பராக
தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை.

இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

- இது திருக்குறள்!

தாயகத்திலிருந்து,
கவே.கரிகாலன்.

எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.

இந்த முறையும் அதுவே நடக்கும்.

அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.
புலிப்பசங்கள்.
தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..










ஒரு தலைவன் வரவுக்காய்
காத்திருந்தோம் எங்கள் தலையவன் பிறந்தான் ..

Tamil eelam Women's Day celebrations,






தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..
















தமிழ் சுதந்திர போராட்ட வீராங்கணைகள்...இவர்கள் எம் சகோதரிகள் என்பதில் பெருமை கொள்வோம்





இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை வரலாறாகவே அறிந்திருந்தோம். அந்த வரலாற்றுக்கே சாட்சியமாக எங்களை இருக்க வைத்தான் ஒரு மனிதன். அவர் தான் பிரபாகரன். புலிகளின் தவறுகளோடு என்னால் ஒன்றிப்போக முடியாவிட்டாலும் அவர்களின் வீரத்தோடு என்னால் இணைந்து போக முடியும். எலிகளாகவே வாழ்ப்பழக்கப்பட்ட நம் மக்களைப் புலிகளாக நிமிர்த்தியவர் அவர்.

துயரங்களே வாழ்வாக வாழும் உரிமையே பிச்சையாகக் கையேந்தி நின்றவர்களை வாழ்க்கையின் உச்சங்களை எட்டச் செய்த மகாவீரர் அவர். வாலை குழைத்து சலுகைகளுக்காகக் கையேந்தி நிற்கும் முதுகெலும்பற்ற கோழைகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த உன்னத வீரன் அவர்.

அகிம்சைகளும் அஞ்சாமையும் ஒரு சொட்டு இரத்தத்தில் அல்லது ஒரு துண்டு எலும்பில் வாலை மடக்கி உட்கார்ந்ததைப் பார்த்து " தமிழா உனக்கு எதிர்காலமே இல்லையா? "என்று கூனிக்குறுகி இருந்த ஒரு இனத்தை உலகமே நின்று திரும்பிப் பார்க்க வைத்தது அவர் தான்.

குட்டக் குட்டக் குனிவதல்ல வாழ்க்கை என்பதை இளைய தலை முறைக்கல்லாது எல்லாத் தலை முறைக்கும் எடுத்துக் காட்டியதும் செயற்படுத்திக் காட்டியதும் அவரேதான். எத்தனை இஸங்களைக் கற்றிருந்தாலும் எத்தனை அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் எத்தனை அறிவுச் சுடர்களைக் கொழுத்தி வைத்திருந்தாலும் எந்தக் கல்வி மானாலும் எந்த அறிஞராலும் எந்த அரசியலாளராலும் சொல்லிக் கொடுக்க முடியாத ஒன்றைச் சொல்லிக் கொடுத்தவர் அவர்.

அது தான் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்பது. சில நூற்றாண்டுகளாக நீண்டிருந்த அடிமை வாழ்க்கையில் மறந்து போயிருந்த தமிழனின் வீரம். அதற்காக அந்த வீர மறவனுக்கு அவரின் பிறந்த நாளில் "சல்யூட்"

தனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......

பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை “அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்’ என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இசைப்பிரியாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்கிற தகவல்களை பகிர்ந்து கொண்டனர் ஈழ ஆதரவாளர்கள். பேராசிரியர் அறிவரசனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, “”நெல்லை கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து 1996-ல் ஓய்வு பெற்றுவிட்டேன்.

தமிழ்ப் பணி மட் டுமே என் மூச்சு!என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து “தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?’ என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம். அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப்பாளர்கள், “அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை தகுதியுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அப்படி தமிழாசிரியர்களாக உருவாக்க 40 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்றனர். மேலும், “இதற்கான பாடத் திட்டங்களையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பணி முடிய எவ்வளவு நாட்கள் ஆகும்?’ என்றனர்.

நான், “இரண்டு ஆண்டுகள் ஆகும்’ என்றேன். உடனே அவர்கள் “இரண்டு ஆண்டுகள் பணி செய்ய இயலுமா அய்யா’ என்று கேட்க, “எனக்கு முழு சம்மதம்’ என்று கூறி ஒப்புக் கொண்டேன். எனக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கு பணி செய்த இரண்டாண்டுகளும் எந்த குறையும் எனக்கில்லை. 40 பேருக்கும் தமிழ் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக உருவாக்கினேன். 40 பேருமே தேர்ச்சி பெற்றனர். சங்ககால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர… பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர். இந்தத் தமிழ்ப் பணிக்காகத்தான் நான் அழைக்கப்பட்டிருந்தேன். இந்த பணிக் காலத்தில் ஒருநாள், இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் 8 மாணவிகளும் பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர்.

“சில பயிற்சிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறோம் அய்யா’ என்றனர். அந்த வகையில் தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து 8 மாதங்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர் அவர்கள். தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதன்முதலாக பயிற்சியை முடித்து “சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா’ என்று ஓடோடி வந்து நோட்டுகளை காட்டுவார் மதிவதனி. உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெரு மிதம் உண்டு. மாலை 7 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே புலிகளின் “தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ ஒலிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது.

ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன். துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதனால், அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது, இசைப்பிரியாவை சந்தித்தேன். அப்போது அவரிடம், “”இசை சரி… பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே…’ என்றேன். அதற்கு அவர், “இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர்.

ஆனால் இசைப்பிரியா… இசைப்பிரியா… என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்ததால், அதுவே நிலைத்துவிட்டது’ என்றார். இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர். ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக் காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரிய மாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண், ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன்”என்றார் அறிவரசன்.

அவரிடம், “”பிரபாகரனை சந்தித்தீர்களா?” என்று கேட்டபோது, “”தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார். என்னிடம், “உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்’ என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன். நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், “யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர். எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்’ என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது. இப்படிச் சொன்னவர் சட்டென்று, “என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?’ என்றார்.

நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ “எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?’ என்றார். உடனே நான், “மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்’ என்றேன். மகிழ்ந்து சிரித்தார். “உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது’ என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன். இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைபெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன்.

சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது. அந்த சூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், “அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?’ என்றார். “சரியாக இரண்டு வருடம்’ என்றேன். “அப்பா… இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?’ என்று ஆச்சரியப்பட்டார். “தமிழீழம் மலர்ந்தால் நீங்களெல்லாம் இங்கு வந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா’ என்று கூறி வழி அனுப்பி வைத்தார் பிரபாகரன். கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். அந்த 2 வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது” என்றார் பேராசிரியர் அறிவரசன்.

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.1993)

கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்

அதனால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன் தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்துஇ தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்றுஇ பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும்இ இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களைஇ சிந்தனைகளைஇ மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தைஇ தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.

1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல, ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.

பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்திஇ அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.

யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாகஇ மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள்இ நூலகங்கள்இ மலிவுவிலைக் கடைகள்இ பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடையஇ அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.

தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்லஇ எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகராஇ கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.

1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும்இ திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில்இ இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள்இ பத்திரிகையாளர்களர்இ கலைஞர்கள்இ பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்துஇ எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும்இ சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.

இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும்இ ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.

கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும்இ நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில்இ எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்புஇவிடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம்இ எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும்இ தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரைஇ தாயகத்தைஇ தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.

கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பாஇ புலேந்திரன்இ திலீபன்இ ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாதுஇ தமிழீழத்தைஇ தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.

கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்

கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக் கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின் றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச் சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக் குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.

இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.

கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.

ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.

சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது. “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம்

நடுக்கடலில் படுகொலை

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.
7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுூபர் – கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.

13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா”? என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?”" என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா”? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.

சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.
ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.

அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.
இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.

தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.

சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.

இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.

16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.

சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.

16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.
கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு”

கேணல் கிட்டு @ சதாசிவம் கிருஷ்ணகுமார் - வல்வெட்டித்துறை

கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்) @ சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா 2-ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்

கடற்புலி கப்டன் றொசான் இரத்தினசிங்கம் அருணராசா அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்

கடற்புலி கப்டன் நாயகன் சிவலிங்கம் கேசவன் பொலிகண்டி, வல்வெட்டித்துறை

கடற்புலி கப்டன் ஜீவா @ நடராசா மார்க்ஜெராஜ் - கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். தூயவன் மகாலிங்கம் ஜெயலிங்கம கண்டிவீதி, யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். நல்லவன் சிலஞானசுந்தரம் ரமேஸ் மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்

கடற்புலி லெப். அமுதன் அலோசியஸ் ஜான்சன் 2-ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்

லெப். கேணல் குட்டிசிறி இராசையா சிறிகணேசன் சுதுமைலை வடக்கு, மானிப்பாய்.

மேஜர். வேலன் மலரவன் சுந்தரலிங்கம் சுந்தரவேல் வியாபாரிமூலை, பருத்தித்துறை

தகவல் :

காவியநாயகன் கிட்டு – Maaveerarkal – Heroes
நடுக்கடலில் படுகொலை – பழ நெடுமாறன்

ஈழம் வெல்லும்வரை ஓயாதடி!! – வித்யாசாகர்
See full size image

ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி
ஆயிரம் பேரையும் சொல்லி அடி!

சட்டமும் பட்டமும் செய்து முடி
இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி!

அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி
அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி!

அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி!

ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி
ஆளுக்கொரு வானத்தை வெல்லுங்கடி!

சேலை தலைப்பிலே ஏன் கண்ணீரடி
இனி சுப்பனோ குப்பனோ துரத்தி யடி!

அடங்கி அடங்கிப் போக கூடாதடி – பெண்ணே
ஆணவம் கண்டினி ஓடாதேடி!

ஆணுக்கு பெண்ணிங்கே நிகரில்லடி – பெண்ணே
ஆணொன்றும் பெண்ணுக்கு இலக்கில்லடி!

ஆணும் தானும் ஒரு கை கோர்த்தடி -
ஆணும் தானும் ஒரு கை கோர்த்தடி – பெண்ணே
அகிலத்தை மொத்தமாய் ஆண்டுக்கடி!

வானம் வரை ஒரு போர் கொள்ளடி – பெண்ணே
ஈழம் வெல்ல எவன் கொம்பனடி!

வீடு உறவெல்லாம் வேணுமடி – பெண்ணே
சிங்களன் தொட்டாலே சீறி-அடி!

ஆடிக் காற்றிலே பெண்ணே கும்மியடி
இனி சிங்களன் சிங்கமோ; தூசியடி!

புலி விரட்டிய பெண்ணே புறப்படடி
சூரியனை கூட நீ சுட்டு எறி!

வானம் வரை ஒரு போர் கொள்ளடி – பெண்ணே
வானம் வரை ஒரு போர் கொள்ளடி -
வெல்லும் வரை பெண்ணே ஓயாதேடி!

ஈழ ஈழ ரத்தம் பாயுதடி – பெண்ணே
ஈழ ஈழ ரத்தம் பாயுதடி -
நீயும் பொங்கியெழுந்தா ஈழம் கையிலடி!

ஆணென்றும் பெண்ணென்றும் பார்காதடி
பெண்ணே -ஆணென்றும் பெண்ணென்றும் பார்க்காதடி
ஈழம் வெல்லும்வரை ஓயாதடி!!

புறப்படு புறப்படு போர் கொள்ளடி – பெண்ணே
புறப்படு புறப்படு போர் கொள்ளடி – பெண்ணே
நீ சுழற்றிய வாளுக்கெல்லாம் நீதி ஈழமடி!

வீரம் வீரம் பொங்க சமர் செய்யடி -
வீரம் வீரம் பொங்க சமர் செய்யடி -
சமரிலே பெண்மையின் சவால் வெல்லடி!!
———————————————————————–
வித்யாசாகர்
மாதந்தை மறைந்தாரோ


மாதந்தை வேலுப் பிள்ளை
மரணித்தார் என்றதுமே
வேதனை தாங்கவில்லை
வெம்பியழ இடமுமில்லை
சோதனைகள் மத்தியிலே
சோர்ந்தவர் மடிந்தாரோ
பாதகர்கள் கொடுமையினால்
புனிதரவர் இறந்தாரோ
சாதனைகள் புரிந்தவொரு
தமிழ்த்தலைவன் கருகொடுத்து
மாதரசன் மணியாட்சி
மகிழவொரு காலத்தே
அதனழகைப் பார்க்காமல்
உயிர்விடுத்தல் தகுமாமோ?
சீதாவின் நிலையுறுத்தி
சீரன்னை பார்வதியும்
சேதியொன்று மறியாது
சித்தங்கலங்கி நிற்க
பேதையென வாடியங்கே
புலம்புவது சரிதானோ?
ஆதரிக்குந் தமிழரணி
அணியணியாச் சிதறுதற்கு
போதனைக்கு ஒருபெரியோன்
இல்லாத குறையன்றோ
வேதமொழி தாயகமாய்
கொண்டவரால் நீதியங்கே
அணிவகுத்த காலத்தை
அழித்தங்கே அரக்கருடன்
தாயகத்துக் கனவுகளை
தகர்த்தெறியும் ஆட்சிவெறி
தமிழ்மானம் அடகுவைத்து
தமிழரினம் பகட்டுடனே
வெய்யோனின் நன்றிவிழா
பிறந்தநாள விழாக்களென்று
ஆயிரமா யிரமாயத்
தமிழினங்கங்கள் அழிவுற்று
காயத்தின் வடுநீங்கா
காலாண்டு செல்லமுன்னர்
நேயமில்லா வகையோடு
நாமெல்லாம் எவ்வகையுள்
கரிகாலன் தந்தையேயும்
மாவீர வுறக்கத்தை
மலர்தூவி யஞ்சலிக்க
மனதுண்டு வழியில்லை
தமிழ்காக்கும் மாவீரன்
தந்தைக்குத் தலைவணங்கி
தேசியத்தின் ஒற்றுமையாய்
தமிழீழம் மலருமென்று
ஆசிநல்கிக் கண்ணுறங்கும்
தமிழினங்கள் அகங்குளிர....



ஈழத்தின் கதிரவனே!
http://4.bp.blogspot.com/_kkvu2mnBmfk/Sw7cghnJVdI/AAAAAAAAAPc/esfbGJlvSZ8/s1600/thalaivar.jpg
ஈழத்தின் கதிரவன்தான்
என் தலைவன் பிரபாகரன்...

தலைவா உனது பிரிவில்தான்
எங்கள் வாழ்வில் இருள்
சூழ்ந்து கொண்டதை கண்டோம்...

தலைவா உன்னை கொன்று விட்டதாக கூறி
கூவி கொண்டாடுகிறான்
சிங்கள இன வெறியன்...

தலைவா உனது வருகையில்தான்
தமிழ் ஈழத்தின் விடியலும்
விடுதலையும் இருக்கின்றது
என்பதை இவ்வுலகம் அறியும்...

தலைவா உனது வருகையைக் கண்டு
இவ்வுலகமே வியந்து போகும்.
இனவெறியர்களோ பயந்து சாகும்...

ஈழத்தின் கதிரவன்
விரைவில் வருவார்.
தமிழர்கள் வாழ்வுக்கு
விடியலை தருவார்...
போர்க் கோலம் மாறாது

பாய்ந்து தாக்கும் சிறுத்தையின்
குணம் கொண்டவனே தமிழா
சாய்ந்து மண்ணில் கிடக்க
நாம் என்னடா உக்கிய மாரமா
தேய்ந்து மூலையில் கிடக்க
நாம் என்ன பழைய செருப்பா
மாய்த்து வா பகையை ! எழுந்து
பறை சாற்றி வா வெற்றியை

எந்தமிழ் அன்னை நொந்தவன்
விந்தில் பெற்றவள் இல்லை
செந்தமிழர் நாங்கள் வீரத்தில்
வளர்ந்த வேங்கையின் பிள்ளை
சிந்திய குருதியில் என்றோ ஒருநாள்
ஈழம் மலரும் என்பது நம்பிக்கை
வந்த எம் பகையை வரவேற்று
வென்று நிலைப்பவர் நாம் உண்மை

கேடு கெட்ட ஒரு வாழ்வை
தமிழர் நாம் வாழ்ந்ததில்லை
கூடு விட்டுக் குருவிகள்
ஒருபோதும் அடிமையானதில்லை
பாடுபட்டு பாரம்பரியமாய் மண்ணை
ஆண்டு வந்த மக்களை
வீடு வாசல் இன்றி அடிமையாக்க
இங்கொரு பகைவன் எமக்கில்லை

காலம் கடந்து போனாலும்
பூண்ட போர்க் கோலம் மாறாது
தாளம் தப்பாய் போட்டாலும்
கொண்ட பாட்டின் கருத்துத் தவறாது
ஓலம் இட்டு ஓடி ஒழிந்து
நாம் இனியும் வாழ்ந்திடல் ஆகாது
மாளும் நிலை எமக்கு நேர்ந்தாலும்
ஆளும் தமிழ் அகிலத்தில் தோற்காது

வானம் ஏறி நாம் வலம் வந்து
நாடு காத்து நாம் இருப்போம்
கானம் பாடித் தாயகம் தன்னில்
அன்பினில் கூடி நாம் சிறப்போம்
ஊனம் உற்று உரிமைப் போர் மறந்து
நாதியற்று மண்டியிட்டு மடியோம்
மானம் தமிழரின் வாழ்வெனச் சொல்லி
ஒன்றென எல்லோரும் அணிவகுப்போம்



மீட்பர் வருவார்

ஆர்ப்பரித்து அலைகடல்கள்
அகமகிழ்ந்து குதிக்க
பூப்படைந்து செடிகொடிகள்
பூரிப்பில் மிதக்க
வியப்படைந்த வானில் மேகம்
மின்னல் ஒளி தெளிக்க
மீட்பனவன் வந்துதித்தான்
மண்ணுயிர்கள் மீட்க

பாவமதும் சாபமதும்
ஒன்றாகப் புணர்ந்து
கோரமெனும் ஓர் மகவை
ஈன்றெடுக்க அதுவோ
வேகமென உருவெடுத்து
மக்கள் பலி கேட்க
ஏகனவர் தன்வாழ்வை
இரையாக்கிக் கொண்டார்

சிறுவயதில் குழந்தைத்தனம்
நிரம்பப் பெற்று இருந்தார்
விடலையிலே விடுக்கப்பட்டக்
கட்டளையை உணர்ந்தார்
தனக்குரிய தோழர்களைத்
திறம்படவே தெரிந்து - ஒரு
பெரும் மக்கள் படைதன்னை
தன்பின்னே இணைத்தார்

பிறருக்காகத் தன்வாழ்வை
பிழிந்தெடுத்துக் கொடுத்தும் - சிலர்
சுயலாப நோக்கோடு
துரோகங்கள் இழைக்க
இவர்நம்பும் உயிர்நண்பன்
பணம் பொருளை வேண்டி - இவர்க்
கெதிரான அரசாங்கம்
தனில் காட்டிக் கொடுத்தான்

பிறக்கையிலே செல்வங்களில்
கொழிக்கவில்லை பிறர்போல்
சிறக்கையிலே உலகினிலே
யாருமில்லை இவர்போல்
உறக்கமில்லை ஓய்வுமில்லை
மக்கள்தொண்டில் வாழ்வு
இறக்கவில்லை மீட்பரவர்
இடர்நீக்க வருவார்



தீயான திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஆறரைக்கோடிமக்கள் அன்புடன் இருந்தபோதும்

ஆதரவற்றவராய் அழிந்தோம் ஆனாலும்
அரசியல்வேறு மக்கள்அன்பும்வேறு என்பதினை
அறியாதவரல்ல ஈழத்தமிழர்கள்.

நீறாகிப்போன உன்செயலால்-கண்ணில்
நீராகிநிற்கும் நாங்களும் நீங்களும் என்றும்
நீயாரோ நாம்யாரோ என்றல்ல -அடி
வேரால் இணைந்த உறவுகளல்லவா?

தேரான எம்விடுதலைக்கு தோளாகிஆளாகி
சீராகி வடம்பிடிக்கும் சிலகைகள்தானாகி- அயல்
ஊராகி உளம்உழும்ஏராகி உணர்வுப்பேறாகி
தீயாகிப்போனயே திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஓராண்டு நினைவாகும் உன் இன்நாளினிலே
தீராத எம்தாகம்தீர்க்காது தீந்தமிழராய் எமைப்பார்காது
பாரதமாதா தன்அன்புக்கரம்சேர்க்காது பகைவனாய்எமை
வேறாகிப்பார்க்கும்நிலையே நிஜமானதாயுள்ளதையா.

உன்னிலையில் பலபேர்கள் தம்முயிரைத் தந்தபோதும் -தமிழகமோ
தன்னிலையில் தன்பிடியில் தளராது தன்னலமாய் இருந்திடவே
வன்னிமக்கள் பட்டவதைவாழ்வை வகைகூறஇயலாது என்றும்
கன்னித்தமிழன் கண்ணின்று இக்கவலைதீராது தீராது.

சின்னச்சின்ன மழைத்தூறல்களாய் அன்பைசிந்துவோர் சிலரும்
கன்னமிடும் கள்வர்களாய் கைதரவருவோர்களாய் பலபேருமாய்
தன்னலவாதிகளாய் தரணியில் தர்பார்கள்இருப்பதினால்-இன்றுநாம்
என்னென்னவோவானாலும்..... எம்மிருள்கலையும்பொழுதுவிடியும்போது
உன்பெயரும் நன்றியுடன் உயர்வான பதிவுபெறும் மகிமையுறும்.

கேள்வி பதில்

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?
சிவகுமாரன் (1974)

2)
தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
பசுபதி. ராதாகிருஸ்னன் ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)

3)தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?
முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்)

4)
தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
முத்தையன் கட்டு வலது கரை..

5)தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?
இரண்டு இடங்களுக்கு..

6)
மிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)
லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர் (12-03- 1986 இல் வீரச்சாவு)
7)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
மன்னார் கொண்டைச்சி(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,1990-06- 21 இல்
8)
இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?
10 ஒக்டோபர் 1987 முதல் வீரச்சாவடைந்தவர் அன்ரன்
இதே நாளில் தான் மாலதியும் வீரச்சாவடைந்தர்

9)
விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானுர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?
1978-09-07 அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,
சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்கஇரத்மலானை வானூர்தி தளத்தில்
தரித்து நின்ற
"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக
....

1)தென் தமிழீழத்தின் முதலாவது தரைக் கரும்புலித் தாக்குதல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது.தற்கொடையாற்றிய கரும்புலி யார்?
05.1201995 அன்று மட்டு - புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்திய கரும்பிலித்தாக்குதலை கரும்புலி மேஜர் ரங்கன் நிகழ்த்தினார்.யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 25 புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

2)
இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?
1986 நவம்பர் மாதம்


3)இலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?
1999 ஆம் ஆண்டு இந்தப் பல்குழல் எறிகணைகள் முதன் முதலில் மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் தகர்ப்பில விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது.

4)
கடற்புலிகளின் துணைத்தளபதியாக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாள்ஸ் அவர்கள் எப்போது, எந்தச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?
கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியின் போது நடைபெற்ற கடற்சமரில் 11.06.1993ல் வீரகாவியம் படைத்தார்.

5)யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்?
பண்டாரவன்னியன்

6)
உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம்

7)தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்.


8)
கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?
user posted image
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது

9)கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
செல்வா

10)தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?
தந்தை செல்வா.

12)மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது?
28.06.1995.

13)
சுமார் 8000 தமிழீழ மக்களின் சாவிற்குக் காரணமான இந்தியத் துருப்புக்களைத் தமிழீழத்திற்கு அனுப்பிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இனந்தெரியாதோரின் குண்டுத் தாக்குதலிற்குப் பலியான ஆண்டு யாது? (மாதம் திகதி உட்பட)
21 வைகாசி 1991


14)லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?
நளாயினி படையணி.


15)லெப். கேணல் ராதா எங்கே நடைபெற்ற மோதலில் களப்பலியானார்?
லெப்.கேணல் ராதா (கனகசபாபதி ஹரிச்சந்திரன்)
புன்னாலைக்கட்டுவனில் 20-05-1987 அன்று சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் மார்பில் குண்டேந்தி வீரச்சாவடைநதார்.

16)ஆயுதப் போராட்டம் மூலமே தமிழ் மக்களது விடுதலையைப் பெற முடியுமென அரசியல் மேடைகளில் அஞ்சாமல் முழங்கிய
இடதுசாரித் தமிழ்த் தலைவர் யார்?
சண்முகதாசன்

17)தமிழீழ நிலப்பரப்பில் வடமாகாண நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீற்றர்?
8879.6 சதுர கிலோ மீற்றர்.

18)லெப். கேணல் சுகந்தன் படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரமரணமடைந்த இடம் எது?
கோதண்ட நொச்சிக்குளம்.

19)முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி பிறந்த கிராமம் எது?
மண்கும்பான் யாழ்ப்பாணம்.

20)இந்திய சதிக்குப் பலியான கேணல் கிட்டு கொண்டு வந்த சமாதானச் செய்தியின் பெயர் என்ன?
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338&postdays=0&postorder=asc&&start=15][size=18]குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்...

21)
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
நீர்வேலி

22
)லெப். கேணல் கிறேசி வீரமரணமடைந்த வீரச்சமர் நடைபெற்ற இடம் எது?
பெரியமடு (மன்னார்)

23)மட்டக்களப்பு மாவட்டத்தில் முருங்கைக்கல் கனிமவளம் காணப்படும் இடம் எது?
கல்குடா

24)தமிழீழத்தில் கப்டன் றோய் ஞாபகார்த படையணி பயிற்சிப்பாசறை எங்கு அமைந்திருந்தது?


25
கடல் கரும்புலி மேஐர் கணேஷ் எந்த தாக்குதலில் வீரச்சாவடைந்தார்?

user posted image
விடுதலைப் புலிகளின் ஈரூடகத் தாக்குதலான தவளைப் பாய்ச்சல் சமரின் போது