சனி, 22 மே, 2010

தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து பலம் பெறும் போது மாவீரர்களின் கனவு நனவாகும்: புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளPDFPrintE-mail

See full size image

தமிழ் மக்களின் பலம் ஒருங்கிணைந்து இராணுவ பலமாக, பொருளாதார பலமாக, எமது மக்களின் அரசியல் பலமாக வளம் பெற்று பலம் பெற்று நிற்கும் போது மாவீரர்களின் கனவு நனவாகும்தமிழினத்தையும் தமிழ்; தேசியத்தையும் பலப்படுத்த தேசியத் தலைவரின் பின்னால் அணி திரள வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் திரு ச.பொட்டு அவர்கள் ஆனையிறவில் மாவீரர் நினைவாலயம் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது தெரிவித்தார். ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் மீட்கப்பட்ட ஆனையிறவுப் பகுதியில் 3000க்கும் அதிகமான மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இதில் பொதுச்சுடரை சோதியா படையணி சிறப்புத்தளபதி கேணல் துர்க்காவும் தமிழீழ தேசியக் கொடியை வட போர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனும் ஏற்றினர். முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்களும் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் திருவுருவப் படத்துக்கு தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியும் ஈகச்சுடர் ஏற்றினார்கள். முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர், முதல் பெண் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் ஏனையை மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கும் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிதித்துறைப் போராளி ப+ங்குன்றன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர் வணக்க நடனங்களை தொடர்ந்து கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு பொறுப்பாளர் கீதன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் திரு ச.பொட்டு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் திரு ச.பொட்டு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழினம் தேசிய விழிப்புணர்வு பெற்று நிற்கும் ஒரு பெருமிதமான காலத்தில் நாங்கள் நிற்கின்றோம். சிறிலங்கா தேசியத்தின் தலைமையை தெரிவு செய்கின்ற அந்த சந்தர்ப்பத்தை நாம் புறங்கையால் புறந்தள்ளி பெருமிதத்துடன் நிற்கின்றோம் என்று கூறினார்.

தமிழினத்தின் தேசியத்தின் தலைமையை நாம் தெரிவு செய்து விட்டோம். உங்களது தேசியத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்ற தெளிவான செய்தியை தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிங்களத்துக்கு ஒரு பாடத்தை காட்டியிருப்பது தமிழினத்தின் பலத்தின் வெளிப்பாடு தான் என்றும் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது:-

உலகிலே தனித்து விட்ட இனமாக, இன்னொரு நாட்டின் உதவியற்ற இனமாக தமிழினம் தனது விடுதலைக்கு தானாகவே பேராட வேண்டிய வரலாற்று நிலையில், அந்த விடுதலை விட்டுக் கொடுக்கப்படாமல் தலை நிமிர்ந்து நிற்கும் எழுச்சி நிலைக்கு மாவீரர்களே காரணம்.

நாம் உதவிகளற்ற நிலையை மாவீரர்களின் உயிரை விலையாகக் கொடுத்தே ஈடுசெய்துள்ளோம். ஆனையிறவை வெற்றி கொள்ளும் ஆரம்பத்தில் அறுநூறு மாவீரர்களை வித்ததாக விட்டிருந்தோம். அந்த மாவீரர்களின் பெறமதி இன்று ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதனால் உண்மையான அர்த்தம் செறிந்ததாக மாறியிருக்கின்றது. இது போன்றே எமது விடுதலைக்காக இதுவரை கொடுத்துள்ள இந்த விலை உண்மையானதாவதற்கு தமிழினம் விடுதலை பெறுவது அவசியம்.

தமிழின விடுதலையின் போது இந்த மாவீரர்களின் அர்ப்பணம் உண்மையானதாக, பெறுமதியானதாக மாறும்.

நாம் பலமற்றவர்களானால் எமது வராலாற்றை எதிரிகள், துரோகிகள் எழுதினால் இந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பு பெறுமதியற்றதாகப் போகும்.

பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தால் முற்றுகைக்குள்ளான நேரத்தில் தலைவர் உறுதியான முடிவை எடுத்தார். விலையாக கொடுக்கப்பட்ட உயிர்கள் தமிழீழ வரலாற்றில் பதிந்து வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் மாவீரர் நாள் பற்றிய கனவைக் கண்டார். விடுதலைக்காக கொடுக்கப்பட்ட விலைகள், உயிர்கள் தமிழீழ மக்களின் வரலாற்றில் பதிந்து வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மாவீரர் நாள் என்ற பெயரை தேர்வு செய்து செய்தார்.

இன்று உலகப் பரப்பெங்கும் மாவீரர்கள் நினைக்கப்படுகின்றார்கள் என்றால், எல்லாத் தமிழர்களும் விடுதலையின் பால் ஒன்றுபட்டு சிந்திக்கின்றார்கள் என்றால், அது தமிழழினம் இன்று பலம் வாய்ந்த விடுதலை இராணுவமாக மாவீரர்களின் அர்ப்பணத்தால் வளர்ந்து நிற்பதால் வந்தது. நாம் இந்திய இராணுவத்தால் அழிக்கப்படாததால், நிலைத்து நின்றதால் அந்நிலை வந்தது.

சிறிலங்கா இராணுவத்தால் யாழிலிருந்து வெளியேற்றப்பட்ட போது மனம் சோர்ந்து அழிந்துவிடாமையால் வந்தது. வன்னியிலே எம்மை அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் தொடுத்த பெரும் இராணுவ நெருக்கடியை எதிர்கொண்டு நின்றதால் வந்தது. தமிழினம் தேசிய விழிப்புணர்வு பெற்று நிற்கும் ஒரு பெருமிதமான காலத்திலும் நாங்கள் நிற்கின்றோம். சிறிலங்கா தேசியத்தின் தலைமையை தெரிவு செய்கின்ற அந்த சந்தர்ப்பத்தை நாம் புறங்கையால் புறந்தள்ளி பெருமிதத்துடன் நிற்கின்றோம்.

தமிழினத்தின் தேசியத்தின் தலைமையை நாம் தெரிவு செய்து விட்டோம். உங்களது தேசியத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்ற தெளிவான செய்தியை தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிங்களத்துக்கு ஒரு பாடத்தை காட்டியிருப்பது தமிழினத்தின் பலத்தின் வெளிப்பாடு தான்.

தமிழ் மக்களின் பலம் ஒருங்கிணைந்து இராணுவ பலமாக, பொருளாதார பலமாக, எமது மக்களின் அரசியல் பலமாக வளம்பெற்று பலம் பெற்று நிற்கும் போது மாவீரர்களின் கனவு நனவாகும். தமிழினத்தையும் தமிழ்; தேசியத்தையும் பலப்பபடுத்த தலைவரின் பின் அணி திரள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக