சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன் |
அதற்கு வசதியாக வடக்கு தமிழர் பகுதிகளையும் தெற்கில் உள்ள சிங்களவர்கள் பகுதியையும் இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வியாபாரிகளாகவும், சுற்றுலா பயணிகளாகவும் யாழ்ப்பாணம் வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சிங்களவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் கோவில்களுக்கு செல்கிறார்கள். அதோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கும் செல்கிறார்கள். வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து, வளர்ந்த வீடு தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது. சிங்கள இராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியதால் அந்த வீட்டின் பெரும் பகுதி சேதமாகிவிட்டது. பிரபாகரன் வீட்டை சிங்களவர்கள் ஆர்வமுடன் சுற்றிப்பார்க்கிறார்கள். அந்த வீடு முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு பிரபாகரன் வீட்டுக்குள் இருந்த சிறிதளவு மண் எடுத்துச் செல்கிறார்கள். அந்த மண்ணில் பிறந்ததால் பிரபாகரன் வீரமும், தீரமும் கொண்டிருந்ததாக கருதுகிறார்கள். இதன் மூலம் சிங்களவர்கள் மனதிலும் பிரபாகரன் தன்னிகரற்ற அவதார புருஷனாக வாழ்வது தெரிய வந்துள்ளது. |
செவ்வாய், 26 ஜனவரி, 2010
சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:45.01 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தவரை தெற்கில் இருந்து சிங்களவர்கள் யாரும் தமிழர் நில
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக