வெள்ளி, 29 ஜனவரி, 2010

மாதந்தை மறைந்தாரோ


மாதந்தை வேலுப் பிள்ளை
மரணித்தார் என்றதுமே
வேதனை தாங்கவில்லை
வெம்பியழ இடமுமில்லை
சோதனைகள் மத்தியிலே
சோர்ந்தவர் மடிந்தாரோ
பாதகர்கள் கொடுமையினால்
புனிதரவர் இறந்தாரோ
சாதனைகள் புரிந்தவொரு
தமிழ்த்தலைவன் கருகொடுத்து
மாதரசன் மணியாட்சி
மகிழவொரு காலத்தே
அதனழகைப் பார்க்காமல்
உயிர்விடுத்தல் தகுமாமோ?
சீதாவின் நிலையுறுத்தி
சீரன்னை பார்வதியும்
சேதியொன்று மறியாது
சித்தங்கலங்கி நிற்க
பேதையென வாடியங்கே
புலம்புவது சரிதானோ?
ஆதரிக்குந் தமிழரணி
அணியணியாச் சிதறுதற்கு
போதனைக்கு ஒருபெரியோன்
இல்லாத குறையன்றோ
வேதமொழி தாயகமாய்
கொண்டவரால் நீதியங்கே
அணிவகுத்த காலத்தை
அழித்தங்கே அரக்கருடன்
தாயகத்துக் கனவுகளை
தகர்த்தெறியும் ஆட்சிவெறி
தமிழ்மானம் அடகுவைத்து
தமிழரினம் பகட்டுடனே
வெய்யோனின் நன்றிவிழா
பிறந்தநாள விழாக்களென்று
ஆயிரமா யிரமாயத்
தமிழினங்கங்கள் அழிவுற்று
காயத்தின் வடுநீங்கா
காலாண்டு செல்லமுன்னர்
நேயமில்லா வகையோடு
நாமெல்லாம் எவ்வகையுள்
கரிகாலன் தந்தையேயும்
மாவீர வுறக்கத்தை
மலர்தூவி யஞ்சலிக்க
மனதுண்டு வழியில்லை
தமிழ்காக்கும் மாவீரன்
தந்தைக்குத் தலைவணங்கி
தேசியத்தின் ஒற்றுமையாய்
தமிழீழம் மலருமென்று
ஆசிநல்கிக் கண்ணுறங்கும்
தமிழினங்கள் அகங்குளிர....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக