- க
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.
இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2]
மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்று [3]
இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை
- கொழும்புத் துறைமுகத் தாக்குதல்
- 1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
- கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்
இவற்றையும் பார்க்க
- கடற்புலிகள்
- புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு
- விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி
- en:Frogman
- en:Anti-frogman techniques
இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை
- கொழும்புத் துறைமுகத் தாக்குதல்
- 1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
- கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்
விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.
கடற்புலிகள்
கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
கடற்புலிகள் வரலாறு
- ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
- 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
- 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
- மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[1]
தாக்குதல் முறை
பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.
கடற்புலிகள் வரலாறு
- ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
- 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
- 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
- மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக் கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் முறை
பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.கடற்புலிகள்
சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை
கர்னல் சூசை சிறப்புப் பேட்டி!
தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்:
கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது?
ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது). எனவே நம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றால்தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பதற்கு தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதல்லாமல் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆகவே எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தளம் தமிழகமாகவும், போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இருநாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பல்களை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.
கே : தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்தியிருக்கிறீர்கள். கடற்போர் அனுபவங்களைப் பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள். உலக வரலாற்றில் தமிழீழக் கடற்புலிகளின் கடற்சண்டை பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன. அந்த சண்டைகளைப் பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
ப: கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லுதலும், பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களைக் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லுதலுமாக இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நாம் ஓட்டிகளை இணைத்துக் கொண்டோம். பின் எமது போராளிகளை ஓட்டிகளாக வளர்த்தெடுத்தோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். அவ்வாறு எதிரியின் கலங்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்எல்ஆர் உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில், வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்எல்ஆர் ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர். குறிதவறவில்லை. ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.
இக்காலப்பகுதியில் சிறீலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன், கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் எனவும் அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஜர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற கடற் கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 05.04.1991அபீதா மீதான தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்று முழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையினால் தீவக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.
இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகி பின் Ôவிடுதலைப்புலிகளின் கடற்புலிகள்Õ எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991-இல் தீவக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன்முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன்
முதல் ஏகே-எல்எம்ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவுப் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அரசு திட்டமிட்டபடி ஒன்றும் நடக்கவில்லை. இடர்மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தைத் தொடர்ந்ததைப் பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்குப் பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப். கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப்.மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப்.மணியரசன். லெப்.சேகர், மேஜர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத் தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.
அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் / பற்றிக், மேஜர் நிலவன்/வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்து விசைப்படகுகளை அழித்துக் காவியமாகின்றனர். மேலும் கப்டன் சிவா, லெப்.பூபாலன், 2ம் லெப்.சுரேந்திரன் இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித்தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.
வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கவெண்ணி 29.08.1993 கப்டன் மணியரசன், மேஜர் புகழரசன், சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத்தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி இரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினர் உதவியுடன் கட்டளை கண்காணிப்புக் கப்பல், எடித்தாரா இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.
இதில் முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக்கடல், மாதகற் கடல், வடமராட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம், மேற்குப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வர்ணிக்கப்படும் சாகரவர்த்தனா என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ் கடல் ரோந்துக் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா (மற்றையது ஜெயசாகர. இந்தக் கப்பல்தான் 26.03.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து ரோந்தில் ஈடுபட்ட கலம்)
தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பதை எமக்கு எடித்தாரா, அபிதா என முன்னைய (1990, 1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவங்கள். எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணை கொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1996 காலப்பகுதி - 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்துவிட்டுத் திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த கலத்தைத் தம்மைத் தாக்கவந்தததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற, எம்மவர் அதன்படி ஒழுகினர். எவ்வளவோ முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செய்ய வேண்டாமெனக் கூறப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நடந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்த நிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பத்துப்போராளிகள் கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள்) பொருட்கள் ஆகியவற்றுடன் லெப். கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக்கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. முந்திய வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன், படகையும், போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகள் அழித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே, அவர்களுக்குப் பணிந்ததுபோல் போக்குக் காட்டிவிட்டு, படகையும் போராளிகளையும் பக்குவமாகக் கரைசேர்க்கிறான் அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிகாவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தபின், திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.
மேலும் எம் போராட்டத்துக்கான வளம் சேர்த்தல் பணியின் போது சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப்படகுகளைப் பாதுகாத்த சமர்கள்!
எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுகத் தாக்குதல் - எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் - யாழ்ப்பாணத்தை விட்டுவந்து புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்.
எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வதற்கு - குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை - 1 எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறீலங்கா வான்படை, மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.
ஓயாத அலைகள் ஒன்று, பின் இரண்டு, மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓட ஒட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம்! 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ளமுடியாமைக்கான காரணம், வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமை எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது. 13 கி.மீ. கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோதஇ தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000 இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆனையிறவுப் படைத் தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.
இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளி இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப் போர்க்காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித்தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களிலும் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரைக் குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.
மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புலிகளின் விசேட துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.
கே: கடல்பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்து போய்க் காணப்படுகிறது. சிறீலங்கா கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்தியக் கடற்படைக்கு நிகரான சிறீலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
ப: எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலை குலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தார்ப்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப்படாவிட்டால் அவனது ரவை எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவறாத சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையில் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தும் திறன் எனப்பல இதில் அடங்குகின்றன.
இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள், அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது மட்டும் செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது. அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித்தாக்குதலின் மூலம் வோட்ட ஜெற் இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார்: வோட்ட ஜெற் அடித்தால் காணாது. டோறா மூழ்கடிக்க வேண்டும். 29.08.1993இல் சுப்ப டோறா அடித்தபோது Ôடோறா அடித்தது சரி. வீரையாவை அடியுங்கள் பார்ப்பம்Õ என மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன் மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.
கே: உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல யுத்த களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகளைப் பற்றிப் பேசமுடியுமா?
ப: வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது. எமது தமிழீழம் ஒரு புறம் சிறீலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்கவேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத்தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பற்றிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூர நோக்குடைய சிந்தனையை, செயற்பாட்டை மிகத்தெளிவாக உணரலாம். அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுது கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப் பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்குப் பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன், படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்குப் பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து, 1985ல் கப்பல் வாங்கி சர்வதேச தொடர்பை உருவாக்கினார். கெரில்லாப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இருந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத் திறனை - செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும்போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள் கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991இல் உருவாக்கி நின்றார்.
26-08-1992 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைத் தீவுக் கடலில் கட்டி நிற்கும் ஒரு வோட்ட ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது ‘ஏன்ராப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட, இழுத்து வரலாமே’ என்று அண்ணா கேட்டார். அதன்பின்தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள், மக்களுடன் நன்கு பழகி இருக்க வேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்கு உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.
1992 காலப்பகுதி, கடற்புலிகள் மகளிரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி லெப். கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தைத் தருகிறேன் என்று கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு, எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.
எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழி வகுத்தது.
1996ஆம் ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார்: Ôபடகிலே எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடுÕ எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார், அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர். எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்குவழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப்பற்றிப் பார்ப்போம்.
1991 ஆம் ஆண்டு, ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப் பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டி வீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டு போய் இறக்க மட்டும்தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.
தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது, இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போதுத, அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, Ôநான் எமது படகுகளை எரிக்க மாட்டேன், மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவுÕ என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி Ôகண்டிவீதியால் தான் வருவம்Õ என உறுதியளித்து அதை நிறைவேற்றினர். தலைவர், போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.
இழப்புகளையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை. மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்ட மனமே அவருடையது.
ஒரு முறை, மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்வு டன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார்: 'இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில் இருக்கிற கடற் படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள். நான் உடனே தாறன்' என்று இழப்புக்குள் இருந்து எங்களைத் தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள் ஆட்கொண்டு விடாத மன உறுதியுடன் விளங்கியதைக் காண முடிந்தது.
ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந் தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு முறை தலைவர் ஆர்பிஜி அனுப்பியிருந்தார். அதனைப் புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில் வைத்து ராங் ஒன்றை அடிக்க, அதில் ராங் வெடிக்கவில்லை. அது பிழைத்துவிட்டது. எங்கோ போய்விட்டது. அப்போது எல்லோரும் முடிவெடுத்தனர். அந்த ஆயுதம் பயனளிக்காது என்று அப்படியே வைத்துவிட்டனர். தலைவர் சொல்லி அனுப்புகிறார்: 'மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்' என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட, அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அப்போது அண்ணை சொல்கிறார் 'ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில் வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை'.
நான் வடமராட்சியில இருக்கும்போது எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்லுகிறார், 'ஆமி சுடச்சுட வாறான்' என்று. அப்போது தலைவர் 'சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்' என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மை யிலேயே அதற்குச் சரியான காரணம், சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவர்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்கள் விடவில்லை என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்த பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தலைவர் இதைத் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தன.
தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையைச் செய்ய விட வைக்காது.வடமராச்சியில் Ôஓப்பிறேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய்த் தலைவரைச் சந்திக்கிறேன்Õ அப்பொழுது தலைவர் சொல்கிறார் : 'வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டா அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்' என்ற தலைவரின் அந்தக் கட்டளை, பின்னாளில் பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்தது. 1998 காலப்பகுதி - எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது. நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளை மையத்திற்கு தளபதியை அனுப்பி, நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில், தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு, நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை, ஆண்களுக்கு நிகராகக் களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காட்டியமைக்கு இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.
வளர்ந்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வட மராட்சிக்குப் பொறுப்பாக இருந்தபோது தலைவர் என்னை அழைத்து, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமை இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக, போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.- கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை
Article Tools E-mail this article
Printer friendly version
Comments
[ - ] Text Size [ + ]
வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது.
கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது.
வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 1990 களுக்குப் பின்னரே கடற்புலிகளின் பலம் இந்தக் கடற்பரப்பில் அதிகரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முன்னரான 3 ஆவது ஈழப்போர் காலத்தில் வடக்கு - கிழக்கின் கடலாதிக்கம் கடற்புலிகள் வசமேயிருந்தது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது.
நான்காவது ஈழப்போர் வெடிக்குமானால் அதில் கடற்புலிகளின் பங்கு மிக அதிகளவிலிருக்குமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அதற்கேற்ப கடற்புலிகளும் தங்களைப் பெருமளவில் கட்டியெழுப்பி வருவதுடன் கடற்படையினருக்கு இப்பகுதியில் பேரச்சுறுத்தலாகவுமிருந்து வருகின்றனர்.
வடக்கு - கிழக்கில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நிலப்பரப்புடன் அண்டிய கடற்பரப்பை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் கடற்புலிகள், தற்போது தங்கள் தாக்குதல் நடவடிக்கையை தென்பகுதிக் கடற் பரப்புக்கும் விஸ்தரித்துள்ளனர்.
கடற்பயிற்சிகள், வழிமறிப்பு சமர், தாக்குதல், முறியடிப்பு சமர், தற்பாதுகாப்பு நடவடிக்கை, ஆயுதக் கப்பல்களின் வருகையென கடற்புலிகளின் செயற்பாடுகள் காலத்துக்கு காலம் முனைப்பு பெற்றே வருகிறது. கடற்புலிகளுடனான கடற்சமரின் போது தாக்குதல்களை நடத்த விமானப்படையினர் அஞ்சுமளவுக்கு கடற்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
வடக்கு - கிழக்கில் புலிகள் பிரதேசங்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளை முறியடிப்பதில் கடற்புலிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். கடற்புலிகள் வளர்ச்சியடைய முன்னர் புலிகள் மீதான தாக்குதல்களில் கடற்படையினரின் பங்கு கணிசமான அளவு இருந்தது.
பாரிய படைநடவடிக்கைகளின்போது கடற்படையினரின் உதவியுடன் தரையிறங்கும் படை அணிகள் புலிகளின் பகுதிகளினுள் இலகுவாக ஊடுருவி புலிகளுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்து வந்தன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடற்புலிகளின் வளர்ச்சி, இலங்கை கடற்படையினரை மட்டுமல்லாது தரைப் படையினரையும் பெரிதும் அச்சுறுத்துவதாயுள்ளது.
ஆனையிறவு படைத்தளம் மீதான புலிகளின் முற்றுகையை 1991 இல் படையினர் முறியடித்திருந்தனர். கட்டைக்காடு - வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக தரையிறங்கிய பல நூற்றுக்கணக்கான படையினரே, ஆனையிறவு வரை நகர்ந்து அந்தத் தளம் மீதான முற்றுகையை முறியடித்தது வரலாறு. அன்று கடற்புலிகள் இந்தளவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
அதேநேரம், சுமார் பத்து வருடங்களின் பின்னர் ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் கைப்பற்றுவதற்கு கடற்புலிகளின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. வடமராட்சி கிழக்கில் குடாரப்பு தரையிறக்கமே ஆனையிறவு படைத்தளத்தைப் புலிகள் வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தது.
அந்தளவுக்கு கடற்புலிகளும் மரபு வழிப் படையணியாக மாற்றம் பெற்றதன் மூலம் கடற்படையினருக்கு மட்டுமல்லாது இராணுவத்தினருக்கும் கடற்புலிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அண்மைய நாட்களில் கடற்புலிகளின் நடவடிக்கை கடற்படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவேயுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், சுமார் 800 படையினருடன் திருகோணமலையிலிருந்து யாழ். குடாவுக்குச் சென்ற கடற்படைக் கப்பலொன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் திடீர் முற்றுகைக்கிலக்கானது. இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக நான்கிற்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகள் சென்ற போதும் அதில் இரண்டு கடற்புலிகளால் அழிக்கப்பட்டன.
800 க்கும் மேற்பட்ட படையினருடன் சென்ற பாரிய கப்பலால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் அது விரைந்து சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததுடன் இந்தியக் கடற்படையின் உதவியையும் கேட்டது.
கடற்படையினரின் டோரா படகுகளை அழித்த கடற்புலிகளால், 800 படையினருடன் சென்ற கப்பலையும் அங்கே தாக்கி அழித்திருக்க முடியும். ஆனாலும், கடற்புலிகளின் நோக்கம் அப்போது அதுவாயிருக்கவில்லை. அதனால், அந்தக் கப்பல் இந்தியக் கடல் எல்லைக்குள் தப்பிச் சென்று பின்னர் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் காலி கடற்படைத் தளத்தை சென்றடைந்ததும் அனைவரும் அறிந்ததே.
இதுபோன்றே ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத்தளம் மீது சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் கடும் ஆட்லறித் தாக்குதலைத் தொடுத்தபோது, யாழ்.குடாவிலிருந்து சுமார் 800 கடற்படையினருடன் திருமலைத் துறைமுகத்தினுள் நுழைந்த `ஜெற்லைனர்' கப்பல் அங்கிருந்து தப்பிச் சென்று இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்தது.
பின்னர் மறுநாளே அந்தக் கப்பல், வடக்கிற்கோ அல்லது திருமலைத் துறைமுகத்திற்கோ செல்ல முடியாது காலிதுறைமுகத்தை சென்றடைந்தது. கடற்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தக் கப்பல் உடனடியாக திருமலைத் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்தது.
இதைவிட கடந்த மாதம் முற்பகுதியில் கூட வடமராட்சி வடக்கில் பருத்தித்துறைமுனை முதல் காங்கேசன்துறை துறைமுகம் வரையான கடற்பரப்பில் இரவு 7 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை பத்துக்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகளுடன் கடற்புலிகள் பலமணி நேரம் சமரிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடற்புலிகள் வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகையில், திருகோணமலை மாவட்டம் சம்பூரிலிருந்து விலகியதன் மூலம் கடற்புலிகளின் தளம் இல்லாது போய்விட்டது. எனினும், தற்போது அவர்கள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிய கடற்தளமொன்றை அமைத்துள்ளதன் மூலம் கிழக்கிலும் தங்கள் கடல்வழி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கெதிராக தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்திய படையினர் முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி நகர மேற்கொண்ட முயற்சி ஒரு சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.
ஹபரண மற்றும் காலியில் இடம்பெற்ற தாக்குதல்களானது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பல்வேறு விடயங்களைப் புரிய வைத்திருக்கும்.
வடக்கு - கிழக்கில் யுத்த முனைக்கு அப்பால் விமானப் படை விமானங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுக்கப்பால் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் தினமும் நடைபெறுகிறது.
இதையடுத்தே யுத்தமுனைக்கப்பால் படையினரையும் படை நிலைகளையும் இலக்கு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இவ்வாறான தாக்குதல்கள் தொடரப் போவதையும் அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், யுத்தமுனைக்கப்பால் படையினர் அப்பாவிப் பொதுமக்களையே இலக்கு வைக்கின்றனர். ஆனால், புலிகளோ யுத்தமுனைக்கப்பாலும் படையினரையும் படைநிலைகளையுமே இலக்கு வைக்கின்றனர். ஹபரணவில் கடற்படையினரின் இடைத் தங்கல் முகாம் மீதான தாக்குதலும் காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலும் இதனை தெளிவாக்குகின்றன.
கடற்படையினரை கடலில் இலக்கு வைக்கும் அதேநேரம், அவர்களை தரையிலும் புலிகள் இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளதையே ஹபரண தாக்குதல் காட்டுகிறது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படையின் சில அணிகள் இல்லாது போயுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கூட மீண்டும் களமுனைக்கு திரும்பும் வாய்ப்பு குறைவென்பதால் கடற்படையினருக்கு இது மிகப் பெரும் இழப்பாகவேயுள்ளது.
மிகத் துல்லியமாக உளவு பார்த்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடற்படையினரின் வாகனத் தொடரணி ஒன்றை கிளேமோர் தாக்குதல்கள் மூலம் இலக்குவைப்பதன் மூலம் குறிப்பிட்டளவு இழப்புக்களையே ஏற்படுத்த முடியுமென்பதாலும் பலத்த பாதுகாப்பும் வீதிச் சோதனையும் நடைபெறும் இப்பகுதியில் சிங்கள மக்களே வசிப்பதால் கிளேமோர் தாக்குதலை நடத்தும் வாய்ப்பும் மிகக் குறைவு.
இதனாலேயே இவ்வாறானதொரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு வாகனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.
அதேநேரம், மிக அதிகளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் தாக்குதலுக்கான திட்டமும் வகுக்கப்பட்டு விரைந்து செயற்படுத்தப்பட்டமையானது படையினர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை கடற்படைத்தளத்திலிருந்து விடுமுறையில் தென்பகுதிக்குச் செல்லும் கடற்படையினரின் வாகனத் தொடரணியும், விடுமுறை முடிந்து கடமைக்குத் திரும்பும் (கொழும்பிலிருந்து) கடற்படையினருடன் வரும் வாகனத் தொடரணியும் இந்த இடைத் தங்கல் முகாமில் தரித்து நின்று விட்டே பயணத்தைத் தொடரும். இதனால், ஓடிக்கொண்டிருக்கும் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்துவதை விட ஓரிடத்தில் நிற்கும் வாகனத் தொடரணியைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், திருமலையிலிருந்து தெற்கேயும், தெற்கிலிருந்து திருமலைக்கும் செல்லும் தொடரணிகள், ஒரே நேரத்தில் இந்த இடத்தில் எப்போது வருமென்பதும் நீண்ட உளவறிதல் மூலம் அவதானிக்கப்பட்டே பெருமளவு கடற்படையினர் ஓரிடத்தில் குழுமியிருக்கையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே பெரும் உயிர்ச் சேதமேற்பட்டது.
சிங்களவர்களே முழுக்க முழுக்க வசிக்கும் இந்தப் பகுதியில் மிகத் துல்லியமாக இந்தளவுக்கு உளவு பார்த்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டதென்பது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. அத்துடன், குறிப்பிட்டளவு நேரமே இந்த இடைத்தங்கல் முகாமில் படையினர் தரித்துச் செல்வார்களென்பதால், அந்த நேரத்தில் அவ்விடத்திலிருந்து எவராவது தகவல் வழங்கியே இந்த வாகனத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது.
வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த வாகனம் எங்கிருந்து அங்கு வந்ததென்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தம்புள்ளைப் பகுதியிலிருந்தே அங்கு வந்ததாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து தம்புள்ளை ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கும் அதிகமென்பதாலும் இந்த வீதியில் 24 மணிநேரமும் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாலும் அவ்வேளையில் கடற்படையினரின் வாகனத் தொடரணி அந்த வீதியில் போக்குவரத்துச் செய்வதை படையினர் அறிந்துமிருந்ததால் அவர்களது பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த வாகனம் எவ்வாறு அவ்விடத்திற்கு வந்ததென்ற மர்மம் இன்னமும் புலனாகவில்லை.
அதேநேரம் இந்த வாகனத்தின் சாரதி கரும்புலி உறுப்பினராகவே இருப்பதால் வீதிச்சோதனை நிலையத்தில் மொழிப் பிரச்சினையையும் தாண்டி அவர் எவ்வாறு வந்தாரென்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன், அவர் மட்டும் வெறும் கன்ரரை செலுத்தி வந்தது, ஏன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இதைவிட, கடற்படையினரின் வாகனங்கள் குழுமி நின்ற இடத்திற்குள் இந்த `கன்ரர்' எவ்வாறு திடீரெனப் புகுந்ததென்ற கேள்வியும் எழுகிறது. வீதியோரத்திலிருந்து சுமார் இருபது மீற்றர் தூரத்திலேயே இந்த பஸ்கள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. இவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த ஆயுதம் தாங்கிய கடற்படையினர் பலரும் அங்கு நின்றிருந்த போதும் எப்படி அவர்களையும் தாண்டி இந்த வாகனம் பஸ்கள் நின்ற இடத்துக்குள் புகுந்தது.
`கன்ரர்' சாரதி திடீரென, பிரேக் அறுந்துவிட்டது, பிரேக் அறுந்து விட்டதென, சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்தே பஸ்கள் மீது கன்ரரை மோதியதாக நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். படையினர் அனைவரதும் கவனத்தை சடுதியாக திசை திருப்ப அவர் இவ்வாறு கத்தியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.
எனினும் இந்தத் தாக்குதலும் இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதமும் படைத்தரப்பை உலுக்கியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களை இனிமேல் எவ்வாறு தடுக்கலாமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதுடன் இனிமேல் யுத்தமுனைக்கு வெளியே இவ்வாறான தாக்குதல் நடக்கப் போகின்றதென்ற அச்சத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் விடுபடுவதற்கிடையில் காலித் துறைமுகத்தினுள் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் மேலும் உலுக்கியுள்ளது. வடக்கு - கிழக்கிற்கு வெளியே தென்பகுதியில் பலத்த பாதுகாப்பு நிறைந்த கடற்படைத் தளம் மீதான தாக்குதல் உடனடியாக விடைகாண முடியாத பல கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கில் கடற்புலிகளின் முக்கிய கடற்தளமாக இருந்த சம்பூரை படையினர் கைப்பற்றிய பின்னர் கிழக்கில் கடற்புலிகளின் செயற்பாடுகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டு விட்டதாக படைத்தரப்பு நம்பியிருந்த வேளை, வடக்கு - கிழக்கு யுத்தமுனைக்கு வெளியே பலமைல் தொலைவில் ஐந்து கடற்புலிப்படகுகள் கடற்படைத் தளத்தினுள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து அரசு இன்னமும் விடுபடவில்லை.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை வெளிவராத உண்மையொன்றுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் இந்தத் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரவிருந்ததாக அயல்நாட்டு உளவுத்துறை கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் கொழும்புத் துறை முகத்துக்கு பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் ஆயுதக் கப்பலொன்று வந்தது. மிகவும் இரகசியமான இந்த தகவலை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெற்றுவிட்ட புலிகள் கொழும்பு துறைமுகத்தினுள் வைத்து இந்தக் கப்பலைத் தகர்க்க திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக கடற்புலிகளின் அணியொன்று, நீர்மூழ்கிக் கருவிகள் மற்றும் காந்தக் குண்டுகள் சகிதம் நீர்கொழும்பிலிருந்து கடல் வழியாக படகொன்றில் கொழும்புக்கு வந்தபோது, மிக மோசமான காலநிலையாலும் கடற்கொந்தளிப்பாலும், வத்தளைக்கு அப்பால் பமுனுகம என்ற இடத்தில் தரையிறங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட, பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒருவர் சயனைட் அருந்தி உயிரிழக்க இருவர் பிடிபட்டனர்.
அன்றைய தினம் காலநிலை சீராக இருந்திருந்ததால் அந்த ஆயுதக் கப்பல் கொழும்புத் துறைமுகப் பகுதியில் அழிக்கப்பட்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். எனினும். இயற்கை கைகொடுத்ததால் பாரிய அழிவிலிருந்து படைத்தரப்பு தப்பியது. இதையடுத்து ஆயுதக் கப்பல்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது.
அதன்பின், கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் ஆயுதக் கப்பல்களை காலித் துறைமுகத்துக்கு திசை திருப்புவதென அரசும் படைத்தரப்பும் முடிவு செய்தன. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் மிகப் பெருமளவிலிருப்பதால் கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் புலிகளால் ஊடுருவுவது சுலபமானதென படைத்தரப்பு கருதியது.
இதையடுத்து கொழும்புக்கு எந்தவொரு ஆயுதக் கப்பலும் வரவில்லை. இந்த நிலையிலேயே பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கப்பலொன்று காலித் துறைமுகத்துக்கு வரவிருந்த நிலையில் காலி கடற்படைத் தளத்தினுள் புகுந்து கடற்புலிகள் நடத்திய தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கான ஆயுதக் கப்பல்களின் வருகை பற்றி பெரும்பாலும் இந்திய உளவுப் பிரிவே இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கும். அண்மையில் கூட மட்டக்களப்பு, கல்முனை கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று அழிக்கப்பட்டதாக அரசும் படைத் தரப்பும் கூறின.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் என்றுமே கிழக்கு கடற்பரப்புக்கு, அதுவும் இலங்கை கடற்பரப்பினுள் காலை வேளையில் வந்ததாக சரித்திரமில்லை. நள்ளிரவு வேளையில் அல்லது அதிகாலையிலேயே முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்புக்கே அவர்களது ஆயுதக் கப்பல்கள் வந்து செல்லும்.
சிலவேளை ஆயுதங்களை இறக்கிய பின், அந்தக் கப்பல் அடையாளம் காணப்பட்டு அது எங்கு செல்கிறது என்பது கண்டுபிடிக்கப்படுவதை புலிகள் விரும்பமாட்டார்கள். அதனால் தந்திரமாக அதனை அழித்துவிட முற்படுவார்கள். இந்தக் கப்பலும் அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கலாமென்று சில தகவல்கள் கூறின.
இதேநேரம் இலங்கைக்கு ஆயுதக் கப்பல்கள் வருவது புலிகளுக்கு எவ்வாறு தெரிகிறதென்ற கேள்வி அரசைக் குடைந்து கொண்டிருக்கிறது. இரு நாட்டு அரசுகளுக்கிடையே மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை கூட அறிந்து கொள்ளுமளவிற்கு புலிகள் வளர்ந்துவிட்டது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலை கடற்படையினர் முறியடித்துவிட்டதாக அரசும் கடற்படையும் கூறலாம். ஆனால், ஆயுதக் கப்பலின் வருகைக்கு முன்பான தாக்குதலே இதுவெனக் கூறப்படுவதால், இங்கு தாக்குதல் முறியடிக்கப்பட்டதா அல்லது கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டனவா என்பது முக்கியமல்ல. கடற்படைத் தளத்திற்குள் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்களென்பதுதான் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம்.
துறைமுகத்தினுள்ளிருக்கும் கடற்படைத் தளத்தின் வாசலுக்குள் வந்து தற்கொலைக் தாக்குதலையும் படகுகளிலிருந்து ஆர்.பி.ஜி.தாக்குதலையும் புலிகள் நடத்தியுள்ளனர். மூன்று கடற்கரும்புலிப் படகுகள் வெடித்துச் சிதறி பலத்த சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் ஏனைய இரு படகுகளில் வந்தவர்கள் ஆர்.பி.ஜீ. தாக்குதலை நடத்திவிட்டு அவற்றிலிருந்து குதித்து அந்தப் படகுகளை அழித்த பின்னர் காலி நகருக்குள் தப்பிச்
சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களைத் தேடியே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு தேடுதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கடற்புலிகள் எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாது. படையினர் தடுமாறுகின்றனர். கிழக்கிலிருந்தே வந்ததாக பொதுவாகக் கூறப்பட்டாலும் கிழக்கில் அம்பாறையின் பொத்துவில் மற்றும் பாணம பகுதியிலிருந்தும் தெற்கில் காலிக்கு கீழேயுள்ள ஜால, திஸமகாராம மற்றும் தங்காலையிலிருந்து வந்த கடற்புலிப் படகுகளே தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறாயின், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட தங்களுக்கு தொடர்பேயில்லாத, பகுதிகளிலுமிருந்து புலிகள் எப்படி வந்தார்கள், அவர்களுக்கு படகுகளை வழங்கியது யார், மூன்று படகுகளில் எவ்வாறு வெடிமருந்துகள் நிரப்பப்பட்டன, தெற்கிலும் புலிகள் ஊடுருவிவிட்டார்களா என்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது.
இந்த நிலைமை இதனுடன் நின்றுவிடப் போவதில்லை. கடற்படையினரை கடலில் மட்டுமல்லாது தரையிலும் புலிகள் சந்திப்பதால், விமானப் படையினரும் இதுபோன்ற ஆபத்துக்களை எதிர்நோக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரு தரப்புகளுக்குமிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
அடுத்த சுற்று பேச்சுக்களுக்கு புலிகள் மிகவும் பலமான நிலையிலேயே செல்வதால் அடுத்து என்ன என்பதை ஜெனீவாப் பேச்சுத்தான் தீர்மானிக்கப் போகிறது. /
- இவை கடல் கரும்புலிகள் படகு
கரும்புலிகள்
கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்குகிறார்கள். 1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் உயிர் நீத்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.[1]. பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் உயிர் நீத்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.
கரும்புலிகளின் படைப்பிரிவுகள்
- தரைக் கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- வான் கரும்புலிகள்
தரைக் கரும்புலிகள்
முதல் தரைக் கரும்புலித் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார். கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து ஒப்ரேசன் லிபரேசன் எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.
கப்டன் மில்லர் (ஜனவரி 1, 1966 - ஜூலை 5, 1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.கரும்புலிகள் நாள்
(கரும்புலிகள் தினம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
விடுதலைப்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.
- ச
சாள்சு அன்ரனி சிறப்புப் படையணி
லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப். சீலனின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையணி, பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
வரலாறு
"வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்." என்ற இந்த வரலாற்று வரிகள் தமிழீழ தேசியத் தலைவரால் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் வெளியிடப்பட்ட சுதந்திர விடுதலைப்போரின் கள வரலாறு ஆன நெருப்பாற்று நீச்சலில்10ஆண்டுகள் என்ற நூலுக்கான ஆசிச் செய்தியில் உள்ளடக்கப்பட்ட முதல் வரிகளாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் போராடி உயரிய உயிர்கொடை தந்தவன் லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி ஆவான் இந்த மாவீரனின் பெயரால் தமிழீழ தாயக விடுதலைப்போரின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப்படையணியே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும்.
ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு 1991ஆம்ஆண்டு பங்குனித் திங்கள் 25ஆம்நாள் (ஏப்ரல் 10ஆம்நாள்) சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிவரலாற்றில் தடம்பதிக்கத்தொடங்கியது. உலகில் உள்ள பல்லாயிரக் கணக்கான படையணிகளையும்விட வித் தியாசமாகவே இந்தப்படையணியின் அடித்தளம் மிகவலுவாக போடப்பட்டது. உலகிலுள்ள படைத்துறைசார் படையணிகளைவிட தாயக விடுதலைக்காக போராடி தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தை பெற்று எடுப்பதே தனது இலட்சியம் என்ற அடிப்படை உண்மையுடன் கட்டி எழுப்பப்பட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆகும்.பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற அடிப்படை கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இவற்றையும் கடந்து அளப்பரிய தியாகங்களையும் மயிர்க்கூச்செறியும் வீரசாதனைகளையும் சொற்களால் சொல்லிவிடமுடியாத அர்ப்பணிப்புக்களையும் எழுத்தில் எழுதிடமுடியாத கொடைகளையும் செய் துமுடித்தது படையணியின் வீரம்செறிந்த வரலாறு சாதனைகளிலே படைக்கப்பட்டது சாதனையின் ஒத்தசொல் சாள்ஸ் அன்ரனி எனும் அளவிற்கு படையணியின் வீரம் மேலோங்கி விட்டது.
படையணியின் இந்தளவு வெற்றிக்கும் புகழுக்கும் சாதனைக்கும் காரணம் படையணியின் நாமத்தை சுமந்திருக்கும் லெப். சீலன் என்னும் மாவீரனின் உயிர்த்துடிப்புள்ள உயரிய வீரம் ஆகும். இவனது நாமத்தின் இரகசியமே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வெற்றிகளாகும்
1991ஆம்ஆண்டு தொடக்கம் 2005ஆம்ஆண்டாகிய இன்றளவும் ஈழத்தின் சுதந்திர நாள்வரை சாள்ஸ் அன்ரனி சிறப்பு ப்படையணிப் போராளிகளுக்கு வீரத்தையும் விவேகத்தையும் தியாகத்தையும் தற்கொடை யையும் உயிரோட்டத்தில் உணர்வாக ஏற்றிவிட்டவை. லெப்.சீலன் எனும் அந்த மகத்தான வீரனின் வரலாற்று வரிகளாகும் என்னைச் சுட்டுவிட்டு என் துப்பாக்கியை அண்ணையிடம் கொண்டுபோய் கொடு இந்த வரிகளில் எத்தனையோ புனிதம் மிகுந்த கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. வீரம் அர்ப்பணிப்பு தற்கொடை தாயகப்பற்று தலைவரிடத்தில் உள்ள மேலானபாசம் என்ப வற்றையும்விட சிறிதளவேனும் மாறிடா இலட்சியப்பிடிப்பு என்பனவற்றின் அடிப்படையை ஒத்ததாக லெப்.சீலனின் நாமம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு வழிகாட்டியாக அமை ந்துவிட்டது எனவேதான் தமிழீழதாயகத்தை மீட்டெடுக்க நடந்த அனைத்து களங்களிலும் உறுதியோடு இறுதிவரை அக்கினி ப்பிழ ம்புகளுக்குள் நின்று நீராடி வெற்றிகளைப் பெற் று தாயக விடுதலையை இலகுவாக்கியது. எனவேதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு இயலாத ஒன்று இருக்காமல் போய்வி ட்டது
தேசியத்தலைவரின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து 1991ஆம்ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ தாயகத்தின் சுதந்திரத்திற்காக நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றது. ஒவ்வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும்போதும் வெற்றியுடன் திரும்புவோம் என்ற உறுதியுடனேயே களம் சென்று வெற்றியுடனேயே திரும்பிவந்த வரலாறே ஏராளம் உண்டு.
05.05.1991 அன்று சிங்கள தேசத்தின் ஆக்கிர மிப்பாளர்கள் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் என்ற இடங்களில் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்தை வன்னி விக்கிரம 2 பெயர் நடவடிக் கை மூலம் பெரும் எடுப் பிலான இராணுவ முன்னெடுப்பினூடாக ஆரம்பித்தனர் தான் நினைத்ததே நடக்கும் என்ற பேராசை யுடன் ஆக்கிரமிப்பை ஆரம்பித்த எதிரிக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமலே இருந்தது.
பல்லாயிரம் படைகளுடன் விமானங்கள் உலங்குவானூர்திகள் கவசவாகனங்கள் என தொடர்ந்து ஆட்லறி ஏவுகருவிகள் உந்துகை ணகள் என பல இராணுவ முன் னெடுப் பை எதிரி ஆரம்பிக்க சிறிலங்காவின் வடபிராந்திய இராணுவ த்த ளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ தலை மையில் சிங்களப்படை களின் கெமுனு கஜபா படையணிகளின் 2டி விசன்களுக்கு மேலான படைகள் நக ர்வுகளை ஆரம்பித்தது விண்ணை முட்டிய வெடியோசையும் எறிகணை வெடிப்புக்களும் விமானக்குண்டுகளும் எதிரியின் மூர்க்கமான ஆக்கிரமிப்பை பறைசாற்றின எதிரியின் ஆள் ஆயுதப் பலத்தைவிட போராளிகளின் பலம் குறைந்து இருந்தது. என்றாலும் மனப்பலம் போராளிகளுக்கு உச்சத்தே இருந்தது அதைவிட தலைவரின் வழி நடத்தல் தந்திரோபாயம் மேலாக இருந்தது.
எதிரிமுற்றிலும் எதிர்பாராதளவு மின்னல் வேகத்தாக்குதலை ஆரம்பித்துவிட்டது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எதிரி என்ன நடக்கிறது என்று சிந்திக்கமுன்னே அடிபட்ட நாயாய் ஓடத்தொடங்கிவிட்டான். வாய்ப்பேச்சில் வீராக இருந்த சிங்களத்தலைமைகள் வாய்பேசாது மௌனித்து நின்றன எதிரிக்கு பாரிய ஆள் ஆயுத சேதம் ஏற்பட எதிரி பின்வாங்கி ஓடிவிட்டான். சாள்ஸ் அன்ரனியின் முதலாவது தாக்குதலில் ஓடத்தொடங்கிய சிங்களப்படைகள் தொடர் ஓட்டத்திலே பங்கேற்கத் தொடங்கியது வன்னிவிக்கிரம -02இல் தோல்வியடையத் தொடங்கிய சிங்களம் இன்று வரை தோல்வியையே சந்திக்கிறது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது தாக்குதலில் அடிவாங்கிய சிங்களப்படைகள் இற்றைவரை சுமார் 82 தாக்குதலுக்குமேல் அடிவாங்கியே ஓய்ந்து போய் இருக்கின்றன.
ஆனால் அன்றைய முதல் சமரில் தனது தந்திரோபாய யுக்தியினாலும் திறமையான பயிற்சியினாலும் எதையும் வென்றிடும் வீரத்தினாலும் மின்னல் வேகத்தாக்குதலால் வெற்றி கொண்டதுபோல் இன்றுவரை அதாவது வன்னிவிக்கிரம -02 தொடக்கம் பன்னிரெண்டாயிரம் எதிரிப்படைகளோடு 72 மணிநேரம் ஓயாது போரிட்டு வெற்றிகொண்ட தீச்சுவாலை சமர் வரை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வெற்றிமேல் வெற்றிபெற்று சாதனையின் உச்சத்திற்கு சென்று எதையுமே எதிர்கொள்ளும் சிறப்பு ஆற்றலை பெற்றது.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கே யுரிய வேகமும் வீரமுமே அதன் வெற்றிக்கு உதவிக்கரம் நீட்டியது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைந்து கொண்ட ஒவ்வொரு போராளியும் தனக்கென சாதனை ஒன்றினை தேர்ந்து எடுத்துக்கொண்டான் ஒவ்வொரு விடுதலைப் போராளியும் ஈழதேசத்தின் விடு தலை உணர்வின் உச்சத்தே சென்று விட்டமையினால் தாயக சுதந்திரத்திற்காய் தாம் ஒவ்வொருவரும் உயரிய தியாகம் செய்ய வேண்டுமென தன்னகத்தே சபதம் செய்து கொண்டனர் இவர்களின் இந்த உணர்வோடு படையணியில் ஏற்கனவே வீரகாவியமான மாவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் உயிரோட்டமாக ஒவ் வொரு களத்திற்குள்ளும் உள்நுழையும் போராளிகள் வீராவேசத்துடன் போர்புரிந்து மயிர்க்கூச்செறியும் வீரசாதனை களை செய்து ஈற்றில் தம் முயிரையே கொடை யாக தந்து சாதனை படைத்தனர்.
- கொடிய இராணுவ முற்கம்பி வேலியில் படுத்து எனக்கு மேலால் ஏறி ஓடுங்கோ என்றான் ஒரு வீரன்
- என்னைப்பார்க்காமல் ஷெல்லை எனக்கு மேலால் அடியுங்கோ என்றான் ஒருவீரன்
- நான் போறன் பொறி வெடித்ததும் அதற்குப்பின்னால் வாருங்கள் என்றான் ஒரு வீரன்
- எதிரியின் இயந்திரத்துப்பாக்கி சடசடக்க நான் நேரே செல்கிறேன் நீங்கள் பக்கவாட்டாக நகருங்கள் என்றான் ஒருவீரன்
- எதிரியின் துப்பாக்கி சுட்டுக்கொண்டிருக்க தணல்போல் பழுத்திருந்த அவனது துப்பாக்கி குழலைப்பிடித்து இழுத்து சூட்டை நிறுத்தி ஓடுங்கடா உள்ளே என்றான் ஒருவீரன்
இப்படியாக இன்னும் எத்தனையோ வீர சாதனைகளும் தியாகங்களும் அர்ப்பணிப் புக்களும் படையணியின் உயிரோட்டத்தில் கல ந்திருந்தமையினாலேயே எந்தக் களம்சென்றாலும் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கோட்பாட்டில் எதையும் வென்று இயலாது ஒன்று இருக்காது எமக்கு என்ற தாரக மந்திரத்திற்கு அமைய வெற்றியோடு நிமிர்ந்து நிற்கிறது.
சிங்கள எதிரியோடு வலிந்த தாக்குதல்களிலும் பாதுகாப்பு சமர்களிலும் சளையாது நின்று போராடியமையினாலேயே கடந்த வருடத்தில் இடம்பெற்ற தேசத்துரோகி கருணாவின் பச்சத்துரோகத்தனத்திற்கான சமரில் சொற்பநேரத்திற்குள் சாவு மணி அடிக்கமுடிந்தது எம் தேசத்தின் தலைவன் என்ன சொல்கிறானோ அதற்கு வேகமுடனும் விவேகமுடனும் செயல் வடிவம் கொடுத்து எதிர்கொள் ளப்போவது எரிமலை என்றாலும் சிறிதும் கலங் கிடாத மனவுறுதியுடன்களம் விரைந்து பகல் பாராது களமாடி பசி தாகம் நித்திரையை மறந்து மழை பனி வெய்யிலில் தோய்ந்து தனது கடமையை செய்துமுடித்து வெற்றிபெறும் அபாரசக்தி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பு அம்சம் ஆகும்.
தமிழீழ தாயகத்தில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கேற்று குருதிதோய்ந்த களத்தில் செங்களம் ஆடி வீரமுடன் போர்புரிந்து 1058 மாவீரர்களின் சாதனைகளும் வீரம்செறிந்த சண் டைகளினதும் தியாகங்களினதும் கொடைக ளினதும் இவை அனைதினதும் பெறுமதியும் சொற்களால் சொல்ல முடியாதவை இவைகளை அறிந்து கொள்ளவேண்டுமாயின் சிங்கள எதிரியிடமே கேட்டுப்பார்ப்பது நல்லது சிங்கள எதிரிக்கே இந்த வீரர்களின் செயல் நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பு ஒன்று ஏனெனில் இந்த மகத் தான மாவீரர்களின் செயலை நேரே நின்று அனுபவித்தவன் எதிரியே ஆவான்
கரந்தடிப்படையாக இருந்த எமது விடுதலைப்போராட்டம் மரபுவழிப்படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கிய நாள் முதல் தாயக விடுதலைப் போராட்டம் தளர்வி ல்லா உறுதிகொண்ட புதிய மூச்சாய் எழுந்து நிற்கின்றது என்றால் மிகையா காது சொன்னதை சொன்னபடியே சொல்லிய இடத்தில் சொல்லி யநேரத்தில் செய்து முடிக்கும் திறன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் இருந்தமையினாலேயே செல்லும் களம் எங்கும் வெல்லும் படையணி ஆகி ஈழப்போராட்டத்திற்கு மிகை யானதோர் உந்துசக்தியாக திகழ்கிறது.
த
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை
தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக பரிமாணிக்கும் ஒரு கொரிலா இயக்கம். த.வி.பு களிடம் இறுகிய இராணுவ அதிகாரப் படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதாரண போராளியாக்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை தவிர்த்து எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை தரங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
- தலைவர் (இது வரை வே. பிரபாகரன் மட்டுமே)
- உப தலைவர் (இது வரை மாத்தையா மட்டுமே)
- பிரிகேடியர் (இது வரை சு. ப. தமிழ்ச்செல்வன் மட்டுமே)
- சிறப்புத் தளபதி
- மாவட்டத் தளபதி
- கேணல்
- லெப்டினன் கேணல் (லெப். கேணல்)
- மேஜர்
- கப்டன்
- 1ம் லெப்டினன்
- 2ம் லெப்டினன்
- போராளி
வேலுப்பிள்ளை பிரபாகரன்
(வே. பிரபாகரன் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறப்பு: நவம்பர் 26 1954 பிறந்த இடம்: வல்வெட்டித்துறை, இலங்கை இயக்கம்: தமிழீழ விடுதலைப் புலிகள் பணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வாழ்க்கைத் துணை மதிவதனி பிள்ளைகள் சார்ல்சு அந்தோனி, துவாரகா, பாலச்சந்திரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17[1] அல்லது மே 18[2] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது[3]. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்[1]. அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார்[1]. பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது [4]. மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட சைவ நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.
ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்
பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
வரலாற்று முக்கியத்துவம்
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசிய வாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.
பிரபாகரன் கூற்றுக்கள்
- "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." [5]
- 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' [6]
- "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." [7]
- "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். [8]
- "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." [9]
- "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." [10]
- "செய் அல்லது செத்துமடி."
கோபாலசாமி மகேந்திரராஜா
கோபாலசாமி மகேந்திரராஜா (இயக்கப்பெயர்: மாத்தையா) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து 1987 ஆம் ஆண்டு அதன் உப தலைவராக உயர்ந்தார். 1989 இல் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார். இந்தியாவின் றோ அமைப்புக்குப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டார், விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவிக்கு வரத் திட்டமிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 1993 இல் புலிகளால் கைதுசெய்யப்பட்டு 1994 டிசம்பர் 28 ஆம் நாள் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
வாழ்க்கைச்சுறுக்கம்
1956 ஆம் ஆண்டு இலங்கையின் வடமாகாணத்தின் பருத்தித்துறையில் பிறந்த மகேந்திரராஜா, 1978 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். புலிகள் அமைப்புக்குள் வளச்சியடைந்த இவர் விரைவாக வன்னிப் பகுதியின் பிரதிநிதி என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணப் பகுதிக்கு பிரதிநிதியாக இருந்த கிட்டு 1987 மார்ச் 31 ஆம் நாள்யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வீச்சில் சிக்கி காயப்பட்டு தனது ஒரு காலை இழந்தப் பின் கிட்டுவின் பொறுப்புகள் மாத்தையாவிற்குத் வழங்கப்பட்டன. இப்படியாக மாத்தையா வே. பிரபாகரனின் நேரடிக் கவனத்தையும் மற்றும் விடுதலைப் புலிகள் மத்தியில் முக்கியத்துவத்தையும் பெற்றார். ஈழ இயக்கங்களிடையே ஏற்பட்ட சண்டைகளின் போது பல கொலைகள் செய்தார். இதற்குப் பிறகு வட-கிழக்குப் பகுதி இடைக்கால அரசு அமைப்பதான இந்திய ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் சார்பாக இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தகுதியில் மாத்தையா கையெழுத்திடும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் அதிகமானது.
அப்போது அரசியல் பிரிவான மக்கள் முண்ணனியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மாத்தையா கொழும்பில் பல பேர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். அவரது செயற்பாடுகள் தொடர்பான சந்தேக புலிகள் அமைப்பில் ஏற்படத்தொடங்கியது. மாத்தையாவைப் பற்றிய முதல் சந்தேகம் புலிகளின் வேவுத்துறைத் தலைவரான பொட்டு அம்மானுக்கு 1989 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டசம்பவத்திலிருந்து ஏற்பட்டது. இதன் பிறகு புலிகளின் ஒரு பிரிவு மாத்தையாவின் தளத்திலிருந்து பரிமாறப்படும் அனைத்துச் செய்திகளையும் இடைமறித்துக் கேட்கலானது. போதிய தகவல் சேகரிக்கப்பட்டவுடன் மாத்தையா மீது குற்றப்பத்திரிக்கை ஒன்று தாயாரிக்கப்பட்டு மக்கள் முன்னாள் வாசித்துக் காட்டப்பட்டது. மேலும் அதற்கான பதில் கூறுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் மாத்தையா இந்த குற்றப்பத்திரிக்கையை அலட்சியப் படுத்தினார்.
மேற்படி சம்பவத்திற்குப் பின் மாத்தையா அரசியல் பிரிவின் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அகதியாய் வந்தோரின் நலமும் மற்றும் காயமடைந்த புலிகளின் நலம் பேணும் துறையின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அவருக்கு ஒரு சலுகையாக அவரின் 75 பேரைக்கொண்ட பாதுகாப்புக் குழுவும் அனுமதிக்கப்பட்டது.இதன் பின் தொடர்ச்சியாக மாத்தையாவின் இடத்திற்கு பேபி சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மாத்தையாவின் கீழிருந்த ஒருவரைக் கைது செய்து விசாரித்தில் இந்திய உளவு நிறுவனமான றோவுடன் மாத்தையாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. பொட்டு அம்மன் தலைமையில் கமாண்டோ தலைவர் சொர்ணம், பால்ராஜ் மற்றும் கடற்புலித் தலைவர் சூசை உள்ளடக்கிய விடுதலைப் புலிகள் அணியொன்று 1993 மார்ச் 31 ஆம் நாள் கொக்குவில்லில் அமைந்திருந்த மாத்தையாவின் தங்குமிடத்தை தாக்கி மாத்தையாவைக் கைது செய்தது. பின்னர் சாவகச்சேரியில் உள்ள ஒரு முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
பின்னர் 1994 டிசம்பர் 28 ஆம் நாள் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. [1] எனினும் இது பற்றிய சந்தேகக்ங்கள் இன்னமும் நிலவி வருவதோடு மாத்தையா இன்னமும் உயிரோடு இருப்பதாக ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.
சு. ப. தமிழ்ச்செல்வன்
சு. ப. தமிழ்ச்செல்வன்
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்பிறப்பு 1967 இறப்பு நவம்பர் 2, 2007
கிளிநொச்சிவேறு பெயர்கள் தினேஸ் அறியப்படுவது அரசியல் தொழில் புலிகளின் போராளி, அரசியற் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்த்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவாத்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.[1][2]
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார்.
1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.
அரசியற் செயற்பாடுகள்
- தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
- 1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
- தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
- 1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
- 1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.
- 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
- 1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
- 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
படைத்துறைச் செயற்பாடுகள்
- 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை
- 1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்
- தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
- காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
- 1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
- ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் காயமடைந்தார்.
- பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.
- ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
மறைவு
2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[3]. தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.[1]
சு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை
“ | தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். | ” |
- சு. ப. தமிழ்ச்செல்வன்
விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் விபரங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
இல | இயற்பெயர் | இயக்கப்பெயர் | பதவி | பிரிவு | பிறப்பு | வீரமரணம் | பிறந்த இடம் | வீரச்சாவடைந்த இடம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | சாந்தி கந்தசாமி | கௌதமி | 26 / 04 / 1975 | 13 / 07 / 1994 | அராலி தெற்கு | |||
2 | இராமையா தினேஷ் | ஈழமாறன் | கப்டன் | 05 / 05 / 1973 | 11 / 11 / 1993 | யாழ்ப்பாணம் | பூநகரி | |
3 | துரைசிங்கம் புஸ்பகலா | அங்கயற்கண்ணி | கப்டன் | கடற்கரும்புலி | 10 / 05 / 1973 | 16 / 08 / 1994 | கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம் | காங்கேசன்துறை கடல். |
4 | செல்லத்துரை புஸ்பராணி | உமையாள் | கப்டன் | கரும்புலி | 22 / 07 / 1978 | 02 / 01 / 1998 | தாழ்வாள், நெடுங்கேணி, முல்லைத்தீவு | பரந்தன், ஆனையிறவுப் பகுதி, கிளிநொச்சி. |
5 | பெரியதம்பி சந்திரன் | சிதம்பரம் | கப்டன் | கடற்கரும்புலி | 26 / 12 / 1972 | 04 / 05 / 1991 | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | பருத்தித்துறை கடல் |
6 | யோகராசா கோணேஸ்வரன் | காந்தரூபன் | மேஜர் | கடற்கரும்புலி | செப்டம்பர் 10, 1971 | ஜூலை 10, 1990 | வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம் | வல்வெட்டித்துறைக் கடல் |
7 | சதாசிவம் கிருஸ்ணகுமார் | கிட்டு | கேணல் | |||||
8 | ||||||||
9 |
ப
பனிப்புலிகள்
குளிர்பிரதேச மேலைநாடுகளில், குறிப்பாக கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்கான்டனேவிய நாடுகளில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு அல்லது பிரதிநிதித்துவ அமைப்புக்களையும் அவ்வமைப்பு உறுப்பினர்களையும் snow tigers என்று சிலரால் அழைக்கப்படுகின்றனர். Snow Tigers என்பதை தமிழில் பனிப்புலிகள் எனலாம். இந்த சொற்தொடர் Stewart Bell என்ற கனேடிய பத்திரிகையாளர் ஒருவராலேயே முதலில் பயன்படுத்தப்பட்டது. [1] இந்த சொற் தொடரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாமாக முதலில் உபயோகிக்கவில்லை. கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு
தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகார பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படித்தியிருப்பதாக்க ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
ம
மாலதி படையணி
மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் பெயரில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய ஓரு தாக்குதற் படையணியாகும். இப்படையணியானது பல சமர்க்களங்களைத் தனியே தலைமையேற்று நெறிப்படுத்தி வெற்றிகளைக் கண்டுள்ளது.
வ
வான்புலிகள்
வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.
வான்புலிகள் காலக்கோடு
- 1985-86 காலப்பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்[1].
- செப்டம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.
- கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.[2]
- ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை. [3]
- ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
- மார்ச் 26, 2007 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26ம் திகதி மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.
- ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.[4]
- ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின.[5] [6]
- அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்.[7]
- ஆகஸ்ட் 26, 2008: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் இலங்கைக் கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்[8], [9]. இத்தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்தது[10].
- செப்டம்பர் 9, 2008: வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்
- அக்டோபர் 28, 2008: மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர். [11],[12].
- பெப்ரவரி 20, 2009:கொழும்பு வான் படையினரின் தலைமையக கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீதும் வான்புலிகளின் கரும்புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தினர்[13]. இத்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்தனர்[14].
வான்புலிகளின் வலு
வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது[15]. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது.[16] இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.
முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.[17] இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.
வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தாக்குதல் முறை
தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.[18] எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.
பெப்ரவரி 20, 2009 தாக்குதல்
விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் பெப்ரவரி 20, 2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இத்தாக்குதலில் வான் புலிகளின் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்தனர்[14]. ஆனாலும் இரண்டு வானூர்திகளும் சுட்டு வீழத்தப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவின் கூற்றை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது[19]. வானோடியின் உடலும் கைப்பெற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்
வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."[8]
வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.[20]
இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.[21]
விமான ஓடுதளம்
இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.
[தொகு] வான்புலிகளின் அரசியல் சமூகத் தாக்கங்கள்
கவிஞர் புதுவை இரத்தினதுரை வான்புலிகளின் முதல்தாக்குதலை முன்வைத்து எழுதிய "முகிலைத் துளைத்த தமிழனும் இறக்கை முளைத்த கவிஞனும்" என்ற கவிதை பல தமிழர்களின் மனநிலையை பிரதிபலித்தது எனலாம்.
“ | ஈழத்தமிழன் இறக்கை கட்டி முகிலினுக்குள் | ” |
—கவிஞர் புதுவை இரத்தினதுரை |
இவை மட்டுமல்லாது இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தனது குறிப்பில் 'இறக்கை கட்டிய பயங்கரவாதம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் படையணிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
- தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
- பெண்புலிகள்
- கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.
- ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.
- வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் காணப்படுகின்றன.
- கரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி.
- சிறப்புப் படையணிகள்
- வேவுப்புலிகள் - உளவுத்துறையாகும், இது உலகம் முழுவதும் செயற்பட்டு வருகிறது
- விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு
படையணிகளின் சின்னங்கள்
| |||
விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு
ஒவ்வொரு மரபு வழிப் படைக்கும் பொறியியல் பிரிவு இருக்கும். ஆங்கிலத்தில் இதை Engineering Corps என்பர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் களமுனை பொறியியல் பட்டளாத்தை (Combat Engineering Corps (Israel)) குறிப்பிடலாம். பொதுவாக கரந்தடி அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட பொறியில் பிரிவைக் கொண்டிருப்பதில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய ஒரு பிரிவைக் கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்வோ சாவோ என்ற போராட்டத்தில் போர்த் தொழில்நுட்பமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணி. பல மடங்கு பலம் பொருந்திய எதிரியுடன் en:Asymmetric warfare செய்ய தொழிநுட்ப வளைவில் முந்தி உந்துவது அவசியமாகிற்று. ஆகையால் தொடக்க காலம் (~1980 கள்) முதலே புலிகள் பொறியியல் துறையில் ஈடுபட்டனர். அது தவிர குறிப்பிடத்தக்க குடிசார் பொறியியல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு, அதன் வரலாறு, கண்டுபிடுப்புகள், முக்கிய நபர்கள் ஆகிவற்றை விபரிக்கும்.
கண்டுபிடிப்புகள்
- பசிலன் 2000 உந்துகணை, பசிலன் 2000 உந்துகணைச் செலுத்தி
- சமாதானம் 2005
- தற்கொலைக் குண்டு அங்கி [1]
- மறைவேகப் படகு - stealth boats
- ஜொனி மிதிவெடி
- இலத்திரனிய குண்டு விடுவி [2]
- நீர்மூழ்கிக் கப்பல்[3][4][5]
தொழில்நுட்ப திறன்கள்
தொழில்நுட்ப மனிதவளம்
வான்புலிகள் தாக்குதலுக்குப் பின் ஆய்வாளர் குமார் டேவிட் வரைந்த "Human-capital in knowledge-based societies: Technology and the LTTE" என்ற கட்டுரையில் தொழில்நுட்ப திறனுக்கு வெறும் கருவிகள் மட்டுமல்ல மனித வளமும் முக்கியம் என்று சுட்டி, அது புலிகளிடம் உண்டு என்றும் சுட்டினார். குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு நுட்ப உதவி செய்வதாகாவும் குறிப்பிட்டார். [8]
முக்கிய நபர்கள்
- கேணல் சங்கர் - வான்புலிகள் உருவாக்கம்
- கேணல் ராயு - இலத்திரனியல் தொழில்நுட்ப முன்னோடி, கனரக ஆட்டிலறி பீரங்கிப்படை உருவாக்கம் [9]
- மேஜர் மில்லர் - கரும்புலித் தாக்குதல் முறை
- அருளர் - வெடிகுண்டு உற்பத்தி[10]
வேவுப்புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் எதிரிகளாகக் கருதப்படுபவர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், மேலும் ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையை நடத்துவதற்கு முன்னர் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் விடுதலைப் புலிகளின் போராளிகள் நடத்தவல்ல சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் சமரின் முன்னரே வேவு பார்த்துத் தெரிவிப்பவர்கள் வேவுப் புலிகள் எனப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக