பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது
அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.
அவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நிஜத்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் - பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.
அங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் - புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்' என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.
அந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.
பெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.
ஊடகவியலாளர்,
தெற்காசியத் தலைமைச் செய்தியாளர்,
ரைம்ஸ்,
சி.என்.என். இந்தியா.
அனிதா பிரதாப்