தலைவரின் சிந்தனைகள் |
இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி. ----------------------------------------------------------------------------------------------------------------------------- பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். ----------------------------------------------------------------------------------------------------------------------------- நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும். ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள். ----------------------------------------------------------------------------------------------------------------------------- நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். ----------------------------------------------------------------------------------------------------------------------------- சமாதானத்தை நான் ஆத்ம பூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக சுதந்திரமாக கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள். ----------------------------------------------------------------------------------------------------------------------------- எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன்;. இலைமறைகாயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள்கொடுத்தவரும; எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும். ----------------------------------------------------------------------------------------------------------------------------- அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. ----------------------------------------------------------------------------------------------------------------------------- குட்டக்குட்டக் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலை நிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையேசாரும். ----------------------------------------------------------------------------------------------------------------------------- உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே. ----------------------------------------------------------------------------------------------------------------------------- உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும். வரலாற்று புறநிலை தோன்றியிருக்கின்றது. |
திங்கள், 19 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக