சனி, 19 ஜூன், 2010

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள்

Ltte emblem.jpg
விடுதலைப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) இலங்கையில் உள்ள, அரசுக்கு எதிரான ஒரு முக்கிய தமிழர் அமைப்பாகும். 1976 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இலங்கையின் வட கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில், இலங்கைத் தமிழருக்கு என தனி நாடு அமைக்கக்கோரி செயல்படும் ஒர் அமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகக தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007 இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைத் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பானமை உறுப்பினர்களையும், தலைவர் பிராபகரனையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009 புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி
ஜனநாய வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
Ltte emblem.jpg
சின்னம்
தொடக்கம்1976
நாடுஇலங்கை
கிளைகட்டுரையைப் பார்க்க
வகைதரை,கடல், வான் படைகள்
புனைபெயர்புலிகள்
குறிக்கோள்புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
விழாமாவீரர் நாள் - நவம்பர் 27
போர்கள்ஈழப் போர்
போர் விருதுகள்மாவீரர்
கட்டளைத் தளபதிகள்
தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன்
உளவுத்துறைபொட்டு அம்மான்
கடற்படைகேணல் சூசை
அரசியல் துறைபா. நடேசன்

தோற்றமும் வளர்ச்சியும்

விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தேச் செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பானஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது.

1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.[2] அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.[3] சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனத்துவேசம்
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
உலகளாவிய எதிர்ப்புப் போராட்டங்கள்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

பா தொ

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் *கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம் * சிங்களப் பேரினவாதம்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
மகிந்த ராஜபக்ச
வே. பிரபாகரன்
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்
இந்த வார்ப்புருவை: பார் பேச்சு தொகு

இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்புள் உள்வாங்கப்பட்டன. இதன் மூல யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.[5] புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் என்ககருதியதாக கருதப்படுகிறது.[6]இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள் ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.


1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இழக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி[7] இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.


இந்திய படைக் காலம்

முதன்மைக் கட்டுரை: இந்திய அமைதி காக்கும் படை

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும்[1] இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில்இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளை களைவதை நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்திய இந்திய அமைதி காக்கும் படைய அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது


பல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும்,புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[10] மேலும் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களைய திட்டமிட்டு[11] பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோகில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படையின் செல்வாக்கு குறைந்தது.


இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும் புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு பாரிய இழப்புகளை சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.

ஈழப் போர் II

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது. இந்தப் சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.

1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.


ஈழப் போர் III

கிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கில் அணியொன்று 2004

1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிக்கா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்ல தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர். [15] இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முக்கியத்துவம் வாய்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது. மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில்முக்கிய நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.[17] யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வங்கிச் முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

2001 போர் நிறுத்தம்

ஆகஸ்டு 31, 2007 தேதியன்று வரையிலான நிலவரப்படி புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள்

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவுச் செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயைபேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.

டிசம்பர் 2001 இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிப் பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் நடைப் பெற்ற ஆறுச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் களைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைப்பெறவில்லை.


ஈழப் போர் IV

நான்காம் ஈழப்போர்

2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தர் வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.

புலிகளின் உள் கட்டமைப்பு

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையணைத்தும் பிரபாகரன் தலைமையிலான மத்திய தலைமையகம் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளைச் செய்கின்றது.

கடற்புலிகளின் விசைவேகப் படகு

அரசியல்துறை

படைத்துறை

முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் படையணிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

படைத்துறை அதிகார படிநிலை

விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது.


மாவீரர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்

கொள்கைகள்

விடுதலைப் புலிகளின் கொள்கைகள்

  • தன்னாட்சி
  • மரபுவழித் தாயகம்
  • தமிழ்த் தேசியம்
  • இயக்க ஒழுக்கம்
  • சாதிபேதமற்ற சமூகம்
  • சம பெண் உரிமைகள்
  • சமய சார்பின்மை
  • தனித்துவமான சமவுடமை

புலிகள் நோக்கி விமர்சனங்கள்

விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் முக்கியம்.

  • புலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை
  • புலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை
  • புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை
  • தம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்
  • வன்முறையாக சட்டத்தை மீறுதல்
  • ஏக பிரதிநிதித்துவம் நிலைப்பாடு
  • ஜனநாயக விழுமியங்களைப் பேணாமை
  • இறுக்கமான மூடிய கட்டமைப்பு
  • பாசிசப் போக்கு
  • பயங்கரவாத செயற்பாடுகள்
  • சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல்
  • கட்டாய ஆள் சேர்ப்பு
  • தமிழ் இனவாதத்தை ஊக்குவித்தல்
  • முஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்
  • பண்பாட்டு கட்டுப்பாடுகள்
தரைப்புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தரைப்படை தரைப்புலிகள் என்றும் கூறப்படுகிறது. இது தரையில் முதன்மையாக இயங்கும் பல்வேறு படையணிகளைக் கொண்டது. கப்டன் ஜெயந்தன் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, மேஜர் சோதியா படையணி, 2ம் லெப் மாலதி படையணி, லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, லெப். கேணல் விக்ரர் கவச எதிர்புப் படையணி, லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி என பல்வேறு படையணிகளையும் பிரிவுகளையும் கொண்டது.

கடற்புலிகள்


கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலி நீச்சல் வீரர்கள்
கடற்புலி நீச்சல் வீரர்கள்

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள் படகு
கடற்புலிகள் படகு

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்


கடற்புலிகள் சின்னம்

கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்குகின்றார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.



Sea Tiger Fast Attack boat.jpg



















































கடற்புலிகள் வரலாறு

  • ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது.
  • 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.
  • 1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது.
  • மே 24, 2007 - இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம் ஒன்று தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 36 இலங்கைக்கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.[1]

































தாக்குதல் முறை

பல கடற்கலங்களில் அணிகளாக சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று.

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்


கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்


படத் தொகுப்பு

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்

கடற்புலிகள்
கடற்புலிகள்











































இவற்றையும் பார்க்க

கலைச்சொற்கள்

  • ஓட்டிகள்

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.

இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2]


மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்று[3]


கொழும்புத் துறைமுகத் தாக்குத

இவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக கருதப்படுபவை

  • 1995 ஏப்ரல் 19 திருகோணமலை துறைமுகத்தில் ரணசுறு சூரயா மீது தாக்குதல்
  • கற்பிட்டிக்கடற்பரப்பில் வைத்து சகரவர்த்தன கப்பல் மீதான தாக்குதல்

இவற்றையும் பார்க்க

புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு

தமிழீழ விடுதலை புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்

தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகார பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படித்தியிருப்பதாக்க ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. [1][2][3]





விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி.

கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.[1]

நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்!

கடலிலும் தரையிலும் சண்டை செய்கின்ற வலிமை வாய்ந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவு கடற்படைத் தளத்தை நேற்று (24.05.07) தாக்கி அழித்த சம்பவம் சிறிலங்கா அரச தரப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிகாலை 1 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஈரூடகப் படையணி நெடுந்தீவின் தென்பகுதியில் தரையிறங்கி, கடற்படைத் தளம் மீது தாக்குதலை தொடுத்தது. இரண்டு மணி நேர கடும் சமரின் பின்னர் கடற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

அதே வேளை சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகளும், நீருந்து விசைப்படகுகளும் நெடுந்தீவுக்கு விரைந்து வந்தன. அந்தப் படகுகள் மீதும் கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு டோராப் படகு அழிக்கப்பட்டது. இரண்டு நீருந்து விசைப் படகுகள் சேதமாக்கப்பட்டன.

தாக்குதலை வெற்றிகரமாக முடித்த விடுதலைப் புலிகள் கடற்படைத் தளத்தில் சிறிலங்கா கடற்படையினர் விட்டுவிட்டு ஓடிய ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு அதிகாலை 7 மணியளவில் தளம் திரும்பினர்.

இந்தத் தாக்குதலில் 34 கடற்படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச் சாவடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து பிற்பகல் வரை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு மௌனம் சாதித்தது. பின்பு வழமை போன்று தமது தரப்பு இழப்புக்களை குறைத்து அறிவித்தது. தமது தரப்பில் 4 கடற்படையினர் கொல்லப்பட்டும், 4 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணியான ஈரூடகப் படையணி நடத்திய இந்தத் தாக்குதல் சிறிலங்கா தரப்பில் பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியின் முதலாவது தாக்குதல் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மண்டைதீவு படைத் தளத்தின் மீது இடம்பெற்றது. அந்தத் தாக்குதல் பற்றிய செய்தியில் விடுதலைப் புலிகள் தாம் கடலிலும் தரையிலும் சண்டை செய்ய வல்ல ஈருடகப் படையணி ஒன்றை உருவாக்கி இருப்பதை பிரகடனப்படுத்தி இருந்தனர்.

அமெரிக்காவின் ஈரூடகப் படையாகிய "மரைன்" உலகப் புகழ் வாய்ந்தது. அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான போரில் இருந்து இன்றைய ஈராக் போர் வரைக்கும் அமெரிக்காவினுடைய அனைத்துப் போர்களிலும் "மரைன்" படையணி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இன்றைக்கு உலகம் முழுவதையும் அமெரிக்கா தன்னுடைய வல்லாதிக்க அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பதற்கு அதனுடைய "மரைன்" படையணி மிக முக்கிய காரணம்.

தமிழீழத்தின் களநிலவரங்களையும், புவியியல் அமைப்பையும் கொண்டு பாக்கின்ற போது "மரைன்" போன்ற ஒரு ஈரூடகப் படையணியை விடுதலைப் புலிகள் உருவாக்கியது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்தது.

ஆயினும் மண்டை தீவு தாக்குதலுக்குப் பின்பு விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதல் எதையும் மேற்கொள்ளவில்லை. ஏறக்குறைய பத்து மாதங்கள் கழித்து நெடுந்தீவு மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு படைத் தளம் மீதான தாக்குதலாக இது அமைகிறது.

யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் விரைவில் அடையக்கூடிய இலக்குகள் இருக்கின்றன. ஆனால் ஏறக்குறை 16 கடல்மைல்கள் தொலைவில் உள்ளதும், சிறிலங்கா படையினருக்கு சாதகமான இடத்தில் அமைந்துள்ளதுமான நெடுந்தீவுப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதலை நடத்தி தனது வலிமையை நிரூபித்து இருக்கிறது.

கொழும்பில் இருந்து யாழ்குடாவிற்கான வினியோகப் பாதையின் வழியில் நெடுந்தீவு அமைந்துள்ளது. நெடுந்தீவு விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுமானால் யாழ் குடாவிற்கான கடல் வினியோகம் முற்றாக துண்டிக்கப்படும்.

தற்போதைய நிலையில் யாழ் குடாவை கைப்பற்றாது நெடுந்தீவை மட்டும் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய பலம் விடுதலைப்புலிகளுக்கு உண்டா என்பது ஒரு கேள்விக் குறியே. ஆயினும் நெடுந்தீவுத் தளம் மீதான இந்தத் தாக்குதல் யாழ் குடாவிற்கான வினியோகத்திற்கு விடப்பட்ட ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அத்துடன் நெடுந்தீவுக் கடற்படைத் தளம் ஒரு ராடர் நிலையமாகவும் செயற்பட்டுவந்தது. வான்புலிகளின் வருகையின் பின்பு நெடுந்தீவின் ராடர் நிலையம் மேலும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியது. இந்த ராடர் நிலையத்தை நவீனப்படுத்துகின்ற திட்டமும் சிறிலங்கா அரசிடம் இருந்தது. தற்பொழுது அந்த ராடர் நிலையம் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டதோடு, ராடரையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றிருக்கிறார்கள்.

இப்படி பல வகைகளில் நெடுந்தீவுத் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி இலங்கைத் தீவின் எப் பகுதியிலும் தரையிறங்கித் தாக்குதலை நடத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய வலிமையுடன் இருக்கிறது. துறைமுகங்களை மட்டும் அன்றி இலங்கைத் தீவின் கரையோரமாக உள்ள அனைத்து இராணுவ, பொருளாதார இலக்குகளையும் விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நெருக்கடி நிலை சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

விரைவில் விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் வன்னியில் பெரும் எடுப்பில் நடந்து வருகின்றன. "கறுப்பு ஜுலை" சில வாரங்களில் வருவதும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழர் கப்பற்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1933 இல்வல்வெட்டித்துறையில் இருந்துஅமெரிக்கா சென்ற அன்னபூரணி

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின்ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. [1]

தமிழர் கப்பற்கலை வரலாறு

"எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன்பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்தவ. உ. சிதம்பரனார் வாழ்க்கையில் இருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140).

"1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாக கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154)

1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது." மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155).

நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் எழுதிய "நம் நாட்டுக் கப்பற்கலை" என்னும் நூலில் பண்டைய தமிழரின் கப்பற்கலை பற்றிய பல தகவல்கள் உள்ளன.

அன்னபூரணி

1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.

தமிழ்மணி

நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ்மணி"

பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று தற்சமயம் நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ்மணி" ஆக உள்ளது.

துறைமுகங்கள்


பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள்

இக்கால முக்கிய துறைமுகங்கள்

கப்பல், கடல் கலங்கள் வகைகள்

வெளிநாட்டார் குறிப்புகள்

லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார். 'பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை."[3]

கலைச்சொற்கள்

  • துறைமுகம் - port
  • உலர்துறை - dry docks
  • கப்பல் கூடம்
  • மாலுமி இல்லங்கள் - sailor's home
  • தண்டையல் - caption
  • சட்டிமம் - Saxtant

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்

இவற்றையும் பார்க்க

கடற்புலிகள்
சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை
கர்னல் சூசை சிறப்புப் பேட்டி!

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்:

கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது?

ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது). எனவே நம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றால்தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பதற்கு தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதல்லாமல் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆகவே எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தளம் தமிழகமாகவும், போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இருநாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பல்களை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.

கே : தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்தியிருக்கிறீர்கள். கடற்போர் அனுபவங்களைப் பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள். உலக வரலாற்றில் தமிழீழக் கடற்புலிகளின் கடற்சண்டை பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன. அந்த சண்டைகளைப் பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

ப: கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லுதலும், பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களைக் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லுதலுமாக இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நாம் ஓட்டிகளை இணைத்துக் கொண்டோம். பின் எமது போராளிகளை ஓட்டிகளாக வளர்த்தெடுத்தோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். அவ்வாறு எதிரியின் கலங்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்எல்ஆர் உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில், வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்எல்ஆர் ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர். குறிதவறவில்லை. ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.

இக்காலப்பகுதியில் சிறீலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன், கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் எனவும் அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஜர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற கடற் கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 05.04.1991அபீதா மீதான தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்று முழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையினால் தீவக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.

இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகி பின் Ôவிடுதலைப்புலிகளின் கடற்புலிகள்Õ எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991-இல் தீவக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன்முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன்

முதல் ஏகே-எல்எம்ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவுப் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அரசு திட்டமிட்டபடி ஒன்றும் நடக்கவில்லை. இடர்மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தைத் தொடர்ந்ததைப் பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்குப் பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப். கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப்.மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப்.மணியரசன். லெப்.சேகர், மேஜர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத் தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.

அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் / பற்றிக், மேஜர் நிலவன்/வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்து விசைப்படகுகளை அழித்துக் காவியமாகின்றனர். மேலும் கப்டன் சிவா, லெப்.பூபாலன், 2ம் லெப்.சுரேந்திரன் இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித்தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.

வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கவெண்ணி 29.08.1993 கப்டன் மணியரசன், மேஜர் புகழரசன், சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத்தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி இரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினர் உதவியுடன் கட்டளை கண்காணிப்புக் கப்பல், எடித்தாரா இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.

இதில் முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக்கடல், மாதகற் கடல், வடமராட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம், மேற்குப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வர்ணிக்கப்படும் சாகரவர்த்தனா என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ் கடல் ரோந்துக் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா (மற்றையது ஜெயசாகர. இந்தக் கப்பல்தான் 26.03.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து ரோந்தில் ஈடுபட்ட கலம்)

தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பதை எமக்கு எடித்தாரா, அபிதா என முன்னைய (1990, 1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவங்கள். எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணை கொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

1996 காலப்பகுதி - 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்துவிட்டுத் திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த கலத்தைத் தம்மைத் தாக்கவந்தததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற, எம்மவர் அதன்படி ஒழுகினர். எவ்வளவோ முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு செய்ய வேண்டாமெனக் கூறப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நடந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்த நிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பத்துப்போராளிகள் கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள்) பொருட்கள் ஆகியவற்றுடன் லெப். கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக்கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. முந்திய வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன், படகையும், போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகள் அழித்துக்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே, அவர்களுக்குப் பணிந்ததுபோல் போக்குக் காட்டிவிட்டு, படகையும் போராளிகளையும் பக்குவமாகக் கரைசேர்க்கிறான் அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிகாவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தபின், திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.

மேலும் எம் போராட்டத்துக்கான வளம் சேர்த்தல் பணியின் போது சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப்படகுகளைப் பாதுகாத்த சமர்கள்!

எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுகத் தாக்குதல் - எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் - யாழ்ப்பாணத்தை விட்டுவந்து புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்.

எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வதற்கு - குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை - 1 எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறீலங்கா வான்படை, மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.

ஓயாத அலைகள் ஒன்று, பின் இரண்டு, மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓட ஒட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம்! 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ளமுடியாமைக்கான காரணம், வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமை எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது. 13 கி.மீ. கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோதஇ தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000 இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட ஆனையிறவுப் படைத் தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.

இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளி இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப் போர்க்காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித்தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களிலும் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரைக் குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.

மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புலிகளின் விசேட துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.

கே: கடல்பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்து போய்க் காணப்படுகிறது. சிறீலங்கா கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்தியக் கடற்படைக்கு நிகரான சிறீலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

ப: எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலை குலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தார்ப்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப்படாவிட்டால் அவனது ரவை எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவறாத சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையில் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தும் திறன் எனப்பல இதில் அடங்குகின்றன.

இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள், அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது மட்டும் செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது. அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித்தாக்குதலின் மூலம் வோட்ட ஜெற் இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார்: வோட்ட ஜெற் அடித்தால் காணாது. டோறா மூழ்கடிக்க வேண்டும். 29.08.1993இல் சுப்ப டோறா அடித்தபோது Ôடோறா அடித்தது சரி. வீரையாவை அடியுங்கள் பார்ப்பம்Õ என மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன் மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.

கே: உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல யுத்த களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகளைப் பற்றிப் பேசமுடியுமா?

ப: வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது. எமது தமிழீழம் ஒரு புறம் சிறீலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்கவேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத்தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பற்றிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூர நோக்குடைய சிந்தனையை, செயற்பாட்டை மிகத்தெளிவாக உணரலாம். அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுது கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப் பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்குப் பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன், படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.

இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்குப் பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து, 1985ல் கப்பல் வாங்கி சர்வதேச தொடர்பை உருவாக்கினார். கெரில்லாப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இருந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத் திறனை - செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும்போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள் கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991இல் உருவாக்கி நின்றார்.

26-08-1992 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைத் தீவுக் கடலில் கட்டி நிற்கும் ஒரு வோட்ட ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது ‘ஏன்ராப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட, இழுத்து வரலாமே’ என்று அண்ணா கேட்டார். அதன்பின்தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள், மக்களுடன் நன்கு பழகி இருக்க வேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்கு உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

1992 காலப்பகுதி, கடற்புலிகள் மகளிரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி லெப். கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தைத் தருகிறேன் என்று கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு, எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.

எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழி வகுத்தது.

1996ஆம் ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார்: Ôபடகிலே எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடுÕ எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார், அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர். எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்குவழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப்பற்றிப் பார்ப்போம்.

1991 ஆம் ஆண்டு, ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப் பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டி வீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டு போய் இறக்க மட்டும்தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.

தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது, இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போதுத, அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, Ôநான் எமது படகுகளை எரிக்க மாட்டேன், மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவுÕ என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி Ôகண்டிவீதியால் தான் வருவம்Õ என உறுதியளித்து அதை நிறைவேற்றினர். தலைவர், போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.

இழப்புகளையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை. மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்ட மனமே அவருடையது.

ஒரு முறை, மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்வு டன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார்: 'இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில் இருக்கிற கடற் படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள். நான் உடனே தாறன்' என்று இழப்புக்குள் இருந்து எங்களைத் தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள் ஆட்கொண்டு விடாத மன உறுதியுடன் விளங்கியதைக் காண முடிந்தது.

ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந் தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு முறை தலைவர் ஆர்பிஜி அனுப்பியிருந்தார். அதனைப் புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில் வைத்து ராங் ஒன்றை அடிக்க, அதில் ராங் வெடிக்கவில்லை. அது பிழைத்துவிட்டது. எங்கோ போய்விட்டது. அப்போது எல்லோரும் முடிவெடுத்தனர். அந்த ஆயுதம் பயனளிக்காது என்று அப்படியே வைத்துவிட்டனர். தலைவர் சொல்லி அனுப்புகிறார்: 'மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்' என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட, அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அப்போது அண்ணை சொல்கிறார் 'ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில் வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை'.

நான் வடமராட்சியில இருக்கும்போது எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்லுகிறார், 'ஆமி சுடச்சுட வாறான்' என்று. அப்போது தலைவர் 'சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்' என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மை யிலேயே அதற்குச் சரியான காரணம், சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவர்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்கள் விடவில்லை என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்த பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தலைவர் இதைத் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தன.

தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையைச் செய்ய விட வைக்காது.வடமராச்சியில் Ôஓப்பிறேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய்த் தலைவரைச் சந்திக்கிறேன்Õ அப்பொழுது தலைவர் சொல்கிறார் : 'வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டா அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்' என்ற தலைவரின் அந்தக் கட்டளை, பின்னாளில் பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்தது. 1998 காலப்பகுதி - எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது. நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளை மையத்திற்கு தளபதியை அனுப்பி, நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில், தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு, நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை, ஆண்களுக்கு நிகராகக் களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காட்டியமைக்கு இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்ந்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வட மராட்சிக்குப் பொறுப்பாக இருந்தபோது தலைவர் என்னை அழைத்து, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமை இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக, போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.


கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை


காலி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆயுதக் கப்பல்

வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது.

கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது.

வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 1990 களுக்குப் பின்னரே கடற்புலிகளின் பலம் இந்தக் கடற்பரப்பில் அதிகரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முன்னரான 3 ஆவது ஈழப்போர் காலத்தில் வடக்கு - கிழக்கின் கடலாதிக்கம் கடற்புலிகள் வசமேயிருந்தது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது.

நான்காவது ஈழப்போர் வெடிக்குமானால் அதில் கடற்புலிகளின் பங்கு மிக அதிகளவிலிருக்குமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அதற்கேற்ப கடற்புலிகளும் தங்களைப் பெருமளவில் கட்டியெழுப்பி வருவதுடன் கடற்படையினருக்கு இப்பகுதியில் பேரச்சுறுத்தலாகவுமிருந்து வருகின்றனர்.

வடக்கு - கிழக்கில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நிலப்பரப்புடன் அண்டிய கடற்பரப்பை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் கடற்புலிகள், தற்போது தங்கள் தாக்குதல் நடவடிக்கையை தென்பகுதிக் கடற் பரப்புக்கும் விஸ்தரித்துள்ளனர்.

கடற்பயிற்சிகள், வழிமறிப்பு சமர், தாக்குதல், முறியடிப்பு சமர், தற்பாதுகாப்பு நடவடிக்கை, ஆயுதக் கப்பல்களின் வருகையென கடற்புலிகளின் செயற்பாடுகள் காலத்துக்கு காலம் முனைப்பு பெற்றே வருகிறது. கடற்புலிகளுடனான கடற்சமரின் போது தாக்குதல்களை நடத்த விமானப்படையினர் அஞ்சுமளவுக்கு கடற்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

வடக்கு - கிழக்கில் புலிகள் பிரதேசங்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளை முறியடிப்பதில் கடற்புலிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். கடற்புலிகள் வளர்ச்சியடைய முன்னர் புலிகள் மீதான தாக்குதல்களில் கடற்படையினரின் பங்கு கணிசமான அளவு இருந்தது.

பாரிய படைநடவடிக்கைகளின்போது கடற்படையினரின் உதவியுடன் தரையிறங்கும் படை அணிகள் புலிகளின் பகுதிகளினுள் இலகுவாக ஊடுருவி புலிகளுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்து வந்தன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடற்புலிகளின் வளர்ச்சி, இலங்கை கடற்படையினரை மட்டுமல்லாது தரைப் படையினரையும் பெரிதும் அச்சுறுத்துவதாயுள்ளது.

ஆனையிறவு படைத்தளம் மீதான புலிகளின் முற்றுகையை 1991 இல் படையினர் முறியடித்திருந்தனர். கட்டைக்காடு - வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக தரையிறங்கிய பல நூற்றுக்கணக்கான படையினரே, ஆனையிறவு வரை நகர்ந்து அந்தத் தளம் மீதான முற்றுகையை முறியடித்தது வரலாறு. அன்று கடற்புலிகள் இந்தளவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

அதேநேரம், சுமார் பத்து வருடங்களின் பின்னர் ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் கைப்பற்றுவதற்கு கடற்புலிகளின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. வடமராட்சி கிழக்கில் குடாரப்பு தரையிறக்கமே ஆனையிறவு படைத்தளத்தைப் புலிகள் வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தது.

அந்தளவுக்கு கடற்புலிகளும் மரபு வழிப் படையணியாக மாற்றம் பெற்றதன் மூலம் கடற்படையினருக்கு மட்டுமல்லாது இராணுவத்தினருக்கும் கடற்புலிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அண்மைய நாட்களில் கடற்புலிகளின் நடவடிக்கை கடற்படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவேயுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், சுமார் 800 படையினருடன் திருகோணமலையிலிருந்து யாழ். குடாவுக்குச் சென்ற கடற்படைக் கப்பலொன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் திடீர் முற்றுகைக்கிலக்கானது. இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக நான்கிற்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகள் சென்ற போதும் அதில் இரண்டு கடற்புலிகளால் அழிக்கப்பட்டன.

800 க்கும் மேற்பட்ட படையினருடன் சென்ற பாரிய கப்பலால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் அது விரைந்து சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததுடன் இந்தியக் கடற்படையின் உதவியையும் கேட்டது.

கடற்படையினரின் டோரா படகுகளை அழித்த கடற்புலிகளால், 800 படையினருடன் சென்ற கப்பலையும் அங்கே தாக்கி அழித்திருக்க முடியும். ஆனாலும், கடற்புலிகளின் நோக்கம் அப்போது அதுவாயிருக்கவில்லை. அதனால், அந்தக் கப்பல் இந்தியக் கடல் எல்லைக்குள் தப்பிச் சென்று பின்னர் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் காலி கடற்படைத் தளத்தை சென்றடைந்ததும் அனைவரும் அறிந்ததே.

இதுபோன்றே ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத்தளம் மீது சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் கடும் ஆட்லறித் தாக்குதலைத் தொடுத்தபோது, யாழ்.குடாவிலிருந்து சுமார் 800 கடற்படையினருடன் திருமலைத் துறைமுகத்தினுள் நுழைந்த `ஜெற்லைனர்' கப்பல் அங்கிருந்து தப்பிச் சென்று இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்தது.

பின்னர் மறுநாளே அந்தக் கப்பல், வடக்கிற்கோ அல்லது திருமலைத் துறைமுகத்திற்கோ செல்ல முடியாது காலிதுறைமுகத்தை சென்றடைந்தது. கடற்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தக் கப்பல் உடனடியாக திருமலைத் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்தது.

இதைவிட கடந்த மாதம் முற்பகுதியில் கூட வடமராட்சி வடக்கில் பருத்தித்துறைமுனை முதல் காங்கேசன்துறை துறைமுகம் வரையான கடற்பரப்பில் இரவு 7 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை பத்துக்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகளுடன் கடற்புலிகள் பலமணி நேரம் சமரிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடற்புலிகள் வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகையில், திருகோணமலை மாவட்டம் சம்பூரிலிருந்து விலகியதன் மூலம் கடற்புலிகளின் தளம் இல்லாது போய்விட்டது. எனினும், தற்போது அவர்கள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிய கடற்தளமொன்றை அமைத்துள்ளதன் மூலம் கிழக்கிலும் தங்கள் கடல்வழி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கெதிராக தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்திய படையினர் முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி நகர மேற்கொண்ட முயற்சி ஒரு சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.

ஹபரண மற்றும் காலியில் இடம்பெற்ற தாக்குதல்களானது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பல்வேறு விடயங்களைப் புரிய வைத்திருக்கும்.

வடக்கு - கிழக்கில் யுத்த முனைக்கு அப்பால் விமானப் படை விமானங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுக்கப்பால் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் தினமும் நடைபெறுகிறது.

இதையடுத்தே யுத்தமுனைக்கப்பால் படையினரையும் படை நிலைகளையும் இலக்கு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இவ்வாறான தாக்குதல்கள் தொடரப் போவதையும் அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், யுத்தமுனைக்கப்பால் படையினர் அப்பாவிப் பொதுமக்களையே இலக்கு வைக்கின்றனர். ஆனால், புலிகளோ யுத்தமுனைக்கப்பாலும் படையினரையும் படைநிலைகளையுமே இலக்கு வைக்கின்றனர். ஹபரணவில் கடற்படையினரின் இடைத் தங்கல் முகாம் மீதான தாக்குதலும் காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலும் இதனை தெளிவாக்குகின்றன.

கடற்படையினரை கடலில் இலக்கு வைக்கும் அதேநேரம், அவர்களை தரையிலும் புலிகள் இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளதையே ஹபரண தாக்குதல் காட்டுகிறது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படையின் சில அணிகள் இல்லாது போயுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கூட மீண்டும் களமுனைக்கு திரும்பும் வாய்ப்பு குறைவென்பதால் கடற்படையினருக்கு இது மிகப் பெரும் இழப்பாகவேயுள்ளது.

மிகத் துல்லியமாக உளவு பார்த்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடற்படையினரின் வாகனத் தொடரணி ஒன்றை கிளேமோர் தாக்குதல்கள் மூலம் இலக்குவைப்பதன் மூலம் குறிப்பிட்டளவு இழப்புக்களையே ஏற்படுத்த முடியுமென்பதாலும் பலத்த பாதுகாப்பும் வீதிச் சோதனையும் நடைபெறும் இப்பகுதியில் சிங்கள மக்களே வசிப்பதால் கிளேமோர் தாக்குதலை நடத்தும் வாய்ப்பும் மிகக் குறைவு.

இதனாலேயே இவ்வாறானதொரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு வாகனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.

அதேநேரம், மிக அதிகளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் தாக்குதலுக்கான திட்டமும் வகுக்கப்பட்டு விரைந்து செயற்படுத்தப்பட்டமையானது படையினர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை கடற்படைத்தளத்திலிருந்து விடுமுறையில் தென்பகுதிக்குச் செல்லும் கடற்படையினரின் வாகனத் தொடரணியும், விடுமுறை முடிந்து கடமைக்குத் திரும்பும் (கொழும்பிலிருந்து) கடற்படையினருடன் வரும் வாகனத் தொடரணியும் இந்த இடைத் தங்கல் முகாமில் தரித்து நின்று விட்டே பயணத்தைத் தொடரும். இதனால், ஓடிக்கொண்டிருக்கும் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்துவதை விட ஓரிடத்தில் நிற்கும் வாகனத் தொடரணியைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், திருமலையிலிருந்து தெற்கேயும், தெற்கிலிருந்து திருமலைக்கும் செல்லும் தொடரணிகள், ஒரே நேரத்தில் இந்த இடத்தில் எப்போது வருமென்பதும் நீண்ட உளவறிதல் மூலம் அவதானிக்கப்பட்டே பெருமளவு கடற்படையினர் ஓரிடத்தில் குழுமியிருக்கையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே பெரும் உயிர்ச் சேதமேற்பட்டது.

சிங்களவர்களே முழுக்க முழுக்க வசிக்கும் இந்தப் பகுதியில் மிகத் துல்லியமாக இந்தளவுக்கு உளவு பார்த்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டதென்பது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. அத்துடன், குறிப்பிட்டளவு நேரமே இந்த இடைத்தங்கல் முகாமில் படையினர் தரித்துச் செல்வார்களென்பதால், அந்த நேரத்தில் அவ்விடத்திலிருந்து எவராவது தகவல் வழங்கியே இந்த வாகனத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது.

வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த வாகனம் எங்கிருந்து அங்கு வந்ததென்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தம்புள்ளைப் பகுதியிலிருந்தே அங்கு வந்ததாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து தம்புள்ளை ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கும் அதிகமென்பதாலும் இந்த வீதியில் 24 மணிநேரமும் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாலும் அவ்வேளையில் கடற்படையினரின் வாகனத் தொடரணி அந்த வீதியில் போக்குவரத்துச் செய்வதை படையினர் அறிந்துமிருந்ததால் அவர்களது பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த வாகனம் எவ்வாறு அவ்விடத்திற்கு வந்ததென்ற மர்மம் இன்னமும் புலனாகவில்லை.

அதேநேரம் இந்த வாகனத்தின் சாரதி கரும்புலி உறுப்பினராகவே இருப்பதால் வீதிச்சோதனை நிலையத்தில் மொழிப் பிரச்சினையையும் தாண்டி அவர் எவ்வாறு வந்தாரென்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன், அவர் மட்டும் வெறும் கன்ரரை செலுத்தி வந்தது, ஏன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதைவிட, கடற்படையினரின் வாகனங்கள் குழுமி நின்ற இடத்திற்குள் இந்த `கன்ரர்' எவ்வாறு திடீரெனப் புகுந்ததென்ற கேள்வியும் எழுகிறது. வீதியோரத்திலிருந்து சுமார் இருபது மீற்றர் தூரத்திலேயே இந்த பஸ்கள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. இவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த ஆயுதம் தாங்கிய கடற்படையினர் பலரும் அங்கு நின்றிருந்த போதும் எப்படி அவர்களையும் தாண்டி இந்த வாகனம் பஸ்கள் நின்ற இடத்துக்குள் புகுந்தது.

`கன்ரர்' சாரதி திடீரென, பிரேக் அறுந்துவிட்டது, பிரேக் அறுந்து விட்டதென, சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்தே பஸ்கள் மீது கன்ரரை மோதியதாக நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். படையினர் அனைவரதும் கவனத்தை சடுதியாக திசை திருப்ப அவர் இவ்வாறு கத்தியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

எனினும் இந்தத் தாக்குதலும் இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதமும் படைத்தரப்பை உலுக்கியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களை இனிமேல் எவ்வாறு தடுக்கலாமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதுடன் இனிமேல் யுத்தமுனைக்கு வெளியே இவ்வாறான தாக்குதல் நடக்கப் போகின்றதென்ற அச்சத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் விடுபடுவதற்கிடையில் காலித் துறைமுகத்தினுள் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் மேலும் உலுக்கியுள்ளது. வடக்கு - கிழக்கிற்கு வெளியே தென்பகுதியில் பலத்த பாதுகாப்பு நிறைந்த கடற்படைத் தளம் மீதான தாக்குதல் உடனடியாக விடைகாண முடியாத பல கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கில் கடற்புலிகளின் முக்கிய கடற்தளமாக இருந்த சம்பூரை படையினர் கைப்பற்றிய பின்னர் கிழக்கில் கடற்புலிகளின் செயற்பாடுகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டு விட்டதாக படைத்தரப்பு நம்பியிருந்த வேளை, வடக்கு - கிழக்கு யுத்தமுனைக்கு வெளியே பலமைல் தொலைவில் ஐந்து கடற்புலிப்படகுகள் கடற்படைத் தளத்தினுள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து அரசு இன்னமும் விடுபடவில்லை.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை வெளிவராத உண்மையொன்றுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் இந்தத் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரவிருந்ததாக அயல்நாட்டு உளவுத்துறை கூறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் கொழும்புத் துறை முகத்துக்கு பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் ஆயுதக் கப்பலொன்று வந்தது. மிகவும் இரகசியமான இந்த தகவலை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெற்றுவிட்ட புலிகள் கொழும்பு துறைமுகத்தினுள் வைத்து இந்தக் கப்பலைத் தகர்க்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக கடற்புலிகளின் அணியொன்று, நீர்மூழ்கிக் கருவிகள் மற்றும் காந்தக் குண்டுகள் சகிதம் நீர்கொழும்பிலிருந்து கடல் வழியாக படகொன்றில் கொழும்புக்கு வந்தபோது, மிக மோசமான காலநிலையாலும் கடற்கொந்தளிப்பாலும், வத்தளைக்கு அப்பால் பமுனுகம என்ற இடத்தில் தரையிறங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட, பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒருவர் சயனைட் அருந்தி உயிரிழக்க இருவர் பிடிபட்டனர்.

அன்றைய தினம் காலநிலை சீராக இருந்திருந்ததால் அந்த ஆயுதக் கப்பல் கொழும்புத் துறைமுகப் பகுதியில் அழிக்கப்பட்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். எனினும். இயற்கை கைகொடுத்ததால் பாரிய அழிவிலிருந்து படைத்தரப்பு தப்பியது. இதையடுத்து ஆயுதக் கப்பல்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது.

அதன்பின், கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் ஆயுதக் கப்பல்களை காலித் துறைமுகத்துக்கு திசை திருப்புவதென அரசும் படைத்தரப்பும் முடிவு செய்தன. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் மிகப் பெருமளவிலிருப்பதால் கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் புலிகளால் ஊடுருவுவது சுலபமானதென படைத்தரப்பு கருதியது.

இதையடுத்து கொழும்புக்கு எந்தவொரு ஆயுதக் கப்பலும் வரவில்லை. இந்த நிலையிலேயே பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கப்பலொன்று காலித் துறைமுகத்துக்கு வரவிருந்த நிலையில் காலி கடற்படைத் தளத்தினுள் புகுந்து கடற்புலிகள் நடத்திய தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கான ஆயுதக் கப்பல்களின் வருகை பற்றி பெரும்பாலும் இந்திய உளவுப் பிரிவே இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கும். அண்மையில் கூட மட்டக்களப்பு, கல்முனை கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று அழிக்கப்பட்டதாக அரசும் படைத் தரப்பும் கூறின.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் என்றுமே கிழக்கு கடற்பரப்புக்கு, அதுவும் இலங்கை கடற்பரப்பினுள் காலை வேளையில் வந்ததாக சரித்திரமில்லை. நள்ளிரவு வேளையில் அல்லது அதிகாலையிலேயே முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்புக்கே அவர்களது ஆயுதக் கப்பல்கள் வந்து செல்லும்.

சிலவேளை ஆயுதங்களை இறக்கிய பின், அந்தக் கப்பல் அடையாளம் காணப்பட்டு அது எங்கு செல்கிறது என்பது கண்டுபிடிக்கப்படுவதை புலிகள் விரும்பமாட்டார்கள். அதனால் தந்திரமாக அதனை அழித்துவிட முற்படுவார்கள். இந்தக் கப்பலும் அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கலாமென்று சில தகவல்கள் கூறின.

இதேநேரம் இலங்கைக்கு ஆயுதக் கப்பல்கள் வருவது புலிகளுக்கு எவ்வாறு தெரிகிறதென்ற கேள்வி அரசைக் குடைந்து கொண்டிருக்கிறது. இரு நாட்டு அரசுகளுக்கிடையே மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை கூட அறிந்து கொள்ளுமளவிற்கு புலிகள் வளர்ந்துவிட்டது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலை கடற்படையினர் முறியடித்துவிட்டதாக அரசும் கடற்படையும் கூறலாம். ஆனால், ஆயுதக் கப்பலின் வருகைக்கு முன்பான தாக்குதலே இதுவெனக் கூறப்படுவதால், இங்கு தாக்குதல் முறியடிக்கப்பட்டதா அல்லது கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டனவா என்பது முக்கியமல்ல. கடற்படைத் தளத்திற்குள் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்களென்பதுதான் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம்.

துறைமுகத்தினுள்ளிருக்கும் கடற்படைத் தளத்தின் வாசலுக்குள் வந்து தற்கொலைக் தாக்குதலையும் படகுகளிலிருந்து ஆர்.பி.ஜி.தாக்குதலையும் புலிகள் நடத்தியுள்ளனர். மூன்று கடற்கரும்புலிப் படகுகள் வெடித்துச் சிதறி பலத்த சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் ஏனைய இரு படகுகளில் வந்தவர்கள் ஆர்.பி.ஜீ. தாக்குதலை நடத்திவிட்டு அவற்றிலிருந்து குதித்து அந்தப் படகுகளை அழித்த பின்னர் காலி நகருக்குள் தப்பிச்

சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களைத் தேடியே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு தேடுதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு கடற்புலிகள் எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாது. படையினர் தடுமாறுகின்றனர். கிழக்கிலிருந்தே வந்ததாக பொதுவாகக் கூறப்பட்டாலும் கிழக்கில் அம்பாறையின் பொத்துவில் மற்றும் பாணம பகுதியிலிருந்தும் தெற்கில் காலிக்கு கீழேயுள்ள ஜால, திஸமகாராம மற்றும் தங்காலையிலிருந்து வந்த கடற்புலிப் படகுகளே தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறாயின், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட தங்களுக்கு தொடர்பேயில்லாத, பகுதிகளிலுமிருந்து புலிகள் எப்படி வந்தார்கள், அவர்களுக்கு படகுகளை வழங்கியது யார், மூன்று படகுகளில் எவ்வாறு வெடிமருந்துகள் நிரப்பப்பட்டன, தெற்கிலும் புலிகள் ஊடுருவிவிட்டார்களா என்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது.

இந்த நிலைமை இதனுடன் நின்றுவிடப் போவதில்லை. கடற்படையினரை கடலில் மட்டுமல்லாது தரையிலும் புலிகள் சந்திப்பதால், விமானப் படையினரும் இதுபோன்ற ஆபத்துக்களை எதிர்நோக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரு தரப்புகளுக்குமிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

அடுத்த சுற்று பேச்சுக்களுக்கு புலிகள் மிகவும் பலமான நிலையிலேயே செல்வதால் அடுத்து என்ன என்பதை ஜெனீவாப் பேச்சுத்தான் தீர்மானிக்கப் போகிறது.