செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!

ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!

நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!

கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!

நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!

போர்தொடுக்க நீ வரவேண்டும்

வரலாறு படைத்த பெரும்தலைவா
நீ வழிசொல்ல நாம் நடந்தோம்
திசைகெட்டு நிற்கின்றோம் இன்று
நீசென்ற திசை தெரியாது.

திக்கெட்டும் சிங்களம் இங்கு
சிதறுண்டு கிடக்குது தமிழினம்.
புலியாகப்பாய்ந்த நாம் இன்று
புலம்பெயர்ந்து கிடக்கின்றோம் முகாமில்.

என்றைக்கோ ஓர்நாள்
ஓடி நீ வருவாயென்று
உள்மனதில் ஓர்மத்தோடு
உறுதியாக இருக்கின்றோம்.

புரட்சி செய்த மறவர் நாம்
மடியுண்டு இருக்கின்றோம் இங்கு
மனம் திறக்க யாருமில்லை
மானம் கெட்டு மாழ்கின்றோம்.

எமை வேடிக்கை பார்க்கின்றார்கள்
எமக்கு வேதனையைத் தூண்டுகின்றது.
வேதமொழி பேசுவார்கள் வெள்ளையர்கள்
வாளெடுத்து போர்தொடுக்க நீ வருகையில்.

போரெடுத்து பகைமுடித்து
ஈழமதை நாமெடுத்து
இயல்பாக மானத்தோடு நாம் வாழ
வீறுகொண்டு நீ விரைவாக வரவேண்டு

பெண்புலி போராளிகள்....

உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.

ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.

மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.

கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?

பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது

தமிழீழம் மீட்போம் வாருங்கள்

வாழ்க்கைச் சக்கரம் என்றும்
போல் சுழன்றோடிக்
கொண்டிருந்தது.
சிங்களம் மட்டும்
தன்சிந்தனையை மாற்றத்
தொடங்கிய நேரமும்.

இலங்கையில் தமிழர்கள்
வந்தோரை வரவேற்க்கும்
பண்போடு தான் மிக்கமனம்
நிறைந்த மகிழ்ச்சியோடு.

ஆடிப்பாடி மிக்க மகிழ்வோடு
வாழ்ந்து கொண்டிருக்கையில்தான்.
வந்தவன்குடி நித்தம் வாழ்ந்தவன்
குடிஎங்கள் தமிழினத்தின் மீது-

தங்கள் இனவெறியை தீர்க்க
முன்பே அன்று திட்டம்தீட்டிய
திட்டப்படி. சரியான தருணம் பார்த்து
சிங்களத்து இனவெறியைத் தீர்த்தது.

இதைத்தான் இனவெறிச் சிங்களம்
தக்கதருணம் தீட்டிய திட்டம்.
எண்பத்து மூன்றில் கொலையில்
பூத்தது கறுப்பாடிக் கலவரம்.

அன்று தொட்டு இன்றுவரை உலகம்
தமிழனை அழியுங்கள் என்றுதான்.
சிங்களத்திற்க்கு அனுமதி கொடுக்குது
இதுக்குத்தான் உலகத் தமிழர் நாங்கள்.

ஒன்றுபட்டு எம்மினத்தின் மானம் காக்க
எங்கள் தலைவன் கரத்தை பலப்படுத்தி
சிங்களவன் கொட்டம் அழித்து-தமிழர்
எங்கள் தமிழீழம் மீட்போம் வாருங்கள்.

பாயும் ஊகம்


கணப்பொழுது அடிமனதிற்கருத்துடனே எடுத்திடுவாய்நிணரத்தம் பாயும்பூமிநித்தம் நித்தம் சாகும் மக்கள்பணம் பதவி பார்த்திடாமல்பைந்தமிழைக் காத்திடவேகுணக்குன்றாம் வீரன் நீயும்குதித்தோடி வந்திடுவாய்விளக்கற்ற இரவும்விடியலற்ற கனவும்வீறுகொண்ட மைந்தன் நீயும்விடியல்தன்னை நோக்கித்தானேவகுத்ததொரு பாதையிலேவெற்றி நடை போடக்கண்டுவெந்து நொந்தார் வீணரவர்விழுப்புண்பெற்றாய் வீரன் நீயும்அறுவடை செய்யும் தம்பின் களத்தில்அரசியற் சாணக்கிய தம்பிமார்கள்பொறுமையைத்தான் இளக்காத பொற்கொடிகள்போர்தனிலே பாய்ந்து சென்று களமாடச்சிறுமையே உருவான சிறுமதியோர்சிதறுண்டோடிச் சின்னாபின்னம்குறுநிலத்தின் மன்னனைபோற் தம்பிகோலோச்சும் காட்சி என்னே!!!

புதன், 21 ஏப்ரல், 2010

எம்.ஜி.ஆர் உறவும் இறுதிச் சந்திப்பும்

பாவை சந்திரன்

உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.


பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார்.




"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார்.

பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார்.

தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார்.

"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.'

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.

""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார்.

தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009)

இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.

"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.''

""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர்.

""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.

""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி.

""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி.

வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித்.

இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம்.

ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.

தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.

முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.
You might also like:

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

லெப்டினன் கேணல் திலீபன்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987


தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்



'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:

'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"

அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.

உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!

இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! - சபேசன்எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)


திலீபன் பாடல்!

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-165: ஆனையிறவு புலிகள் வசம்!




புத்தாயிரம்-2000-ஆவது ஆண்டில், ஜனவரி 5-ஆம் தேதி, தமிழீழத் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் குமாரர், குமார் பொன்னம்பலம் கொலையுண்டார். வழக்கறிஞரான இவர், சிங்கள ராணுவம், அதிரடிப்படை, போலீஸ் ஆகியவற்றின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.
செம்மணி புதைகுழி போன்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும், ஐ.நா. மனித உரிமைக் கமிஷன், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று புகார்களை அளித்ததாலும் இலங்கை அதிபர்களின் கோபத்துக்கு ஆளானவர்.
இறுதியாக, 29-12-1999 அன்று தேர்தல் வெற்றிவிழா கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பேசிய பேச்சில் பயங்கரவாதத்தை அகற்றுவதுதான் தனது பணி என்று குறிப்பிட்ட அவர், குமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து குமார் பொன்னம்பலம் வெளிப்படையான கடிதம் ஒன்றை சந்திரிகாவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில்,
"விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும் அந்த ஆழமான நம்பிக்கையுடன் தெற்குப் பகுதியில் வாழ்பவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் மட்டுமல்ல; இத் தீவுக்கு வெளியேயும் இந்தக் கருத்தை எழுத்திலும், பேச்சிலும் பகிரங்கமாக வற்புறுத்த விரும்புகிறேன். உங்களுடைய பேச்சில் என்னை எச்சரித்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நெடுகிலும் வெளிப்பட்ட அப்பட்டமான மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்' என்று குறிப்பிட்ட அவர்,
"டிசம்பர் 19-ஆம் தேதி இரவு வரலாற்றில் மறக்கமுடியாத இரவாகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருளின் கரங்கள் படிந்த இரவாகவும் வர்ணித்து இருக்கிறீர்கள். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். தமிழீழப் பகுதியில் ஆயிரக்கணக்கான விதவைகள், சொந்த வாழ்வில் எத்தனையோ இரவுகள் இருள்பிடித்த இரவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற முறையில் உங்களுடைய இருள்படிந்த கரங்களினால் அவர்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் என்றாவது உணர்வீர்கள்' என்றும் உறுதிப்படக் கூறியிருந்தார்.
தொடர்ந்து அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாக உறுமியிருக்கிறீர்கள். உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். அத்தகைய முயற்சி நடைபெறுமானால் இந்தத் தீவில் காலாகாலத்திற்கும் அமைதி என்பதே இல்லாமல் போகும் என எச்சரிக்கிறேன்-
இந்தத் தீவில் பயங்கரவாத மரணக் கலாசாரம் பரவியது என்று சொன்னால் அதற்கு சிங்களவரே காரணமானவர்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்முறைக் கலாசாரத்தைத் தொடங்கியவர்கள் அவர்களே. (சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது.) விடுதலைப் புலிகளின் அருகே நீங்கள் செல்வதற்கு முன்னால், நீங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தீவில் வாழும் ஒவ்வொருவரும் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
சிங்களவருடைய தயவில் அல்லது அவர்கள் தூக்கியெறியும் பிச்சையில் வாழ்வதற்காக நாங்கள் பிறக்கவில்லை. இந்தத் தீவின் ஒரு பகுதி நியாயமாக எங்களுக்கு உரியது. அதைப் போல மற்றொரு பகுதி நியாயமாக சிங்களவருக்குச் சொந்தமானது. இந்த உண்மையைச் சிங்களவர் ஏற்கவேண்டும்.
தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும், தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், அந்த உரிமையை எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்நியப்படுத்த முடியாது என்பதையும், அது அவர்களின் பிறப்புரிமை என்பதையும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்குண்டான அறிவுக்கூர்மை தங்களுக்கு உண்டு என்பதையும், தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யவேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்த நான்கே நாளில், அதாவது ஜனவரி 5-ஆம் தேதி குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு சந்திரிகாவின் ஆள்களே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நேர்மைத் திறமையுடன் அபாரமான துணிச்சலுடன் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குமார் பொன்னம்பலத்தின் இனப்பற்றுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளித்து அவரைக் கெüரவிக்கும் விதமாக "மாமனிதர்' என்ற விருதை வழங்குவதாக'' அறிவித்தார்.

புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப் பெரும் பரப்பளவில், ஏராளமான ஆயுதங்களுடன், கனரக ஆயுதங்கள் உள்பட, குவிக்கப்பட்டு, 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பல்வேறு முகாம்களை உள்ளடக்கியது. அந்த முகாமைத் தகர்ப்பது யாழ்ப்பாணத்துடன் இதரப் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சியாகும்.
இத் தாக்குதல் தொடங்கப்பட்டால் எதிரி தலையெடுக்க முடியாதபடி, ஒரேயடியில் வீழ்த்துவது என்ற சூத்திரப்படி, அதிக நாள்கள் பிடிக்காமல், பலத்தத் தாக்குதலில் வீழ்த்த வேண்டும் என்றும் புலிகள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் ஆனையிறவு தளம் புலிகளின் வசமாயிற்று.
20 ஆயிரம் வீரர்களுடன் 4 ஆயிரம் புலிப் போராளிகள் மோதி வென்றனர். ஆயிரக்கணக்கில் சிங்கள வீரர்கள் இப் போரில் மடிந்தனர். சந்திரிகாவின் கடும் தணிக்கைக்குப் பிறகும் வெளிவந்த செய்திகள் மூலம் சிங்கள ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. மூடி மறைக்கப் பார்த்தும் முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஆனையிறவுப் போர்க்காட்சிகளும், மீட்புச் செய்தியும், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளையும் மீட்ட செய்திகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரும் இழப்பு என்பது உறுதியாயிற்று.
இதனைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு முல்லைத்தீவுச் சண்டையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்களை சிங்கள வீரர்கள் அல்ல என்று சொன்னதில் ஆரம்பமானது. ஆனையிறவு முகாம் தகர்ப்பில் உயிரிழந்த வீரர்களுக்கும் அதே நிலை நீடித்ததால், பல ஆயிரம் ராணுவ வீரர்கள், ராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை.
விடுதலைப் புலிகள் தரப்பில் தற்கொலைப் படைப்பிரிவிலும் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்து பணியாற்றும் நிலையில், சிங்கள ராணுவ வீரர்கள், பணியிலிருந்து சொல்லாமல் ஓடுவது ஏன் என்று, சந்திரிகா யோசித்தார்.
ஒரு முடிவாக மாவீரர் தினம் போல, "போர்வீரர்கள் தினம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 7-6-2000 அன்று தேவாலய மணிகள் ஒலிக்கும் நேரத்தில் அவரவர் இருக்குமிடத்தில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார்.
போர்வீரர்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட அதே நாளில் அமைச்சர் சி.வி.குணரத்னே குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.

முகமலை கிளாலி பகுதியில் புலிகள் தங்களது தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதல் மூலம் "ஓயாத அலைகள்-3' ஆரம்பமாகின்றது என்று புலிகள் அறிவித்தனர். புலிகளின் திருகோணமலைத் தாக்குதல் (அக்டோபர் 23) ஆரம்பமானது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பிரதமர் என்ற நிலையிலும், அடுத்தப் பிரதமரும் அவரே என்ற நிலையிலும் காலமானார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மகிந்த ராஜபட்ச மீன்வளத்துறை அமைச்சரானார்.



நில் கவனி
யாரிந்த முத்துக் குமார்?





குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில்
நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ்,
வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் –
திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை - ஈழம் வரையென எரிந்து
கருகி கர்ஜித்தவன்!

தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில்
அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள –
உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு –
நினைவு கொள்வோம்!

வித்யாசாகர்

நான் பால்ராஜ் குறூப் என்று சொல்லிக் கொள்வதில் உலகத்தை வென்றுவிட்ட பெருமை



பால்ராஜ் மறைவு:
இராணுவ ரீதியாக புலிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வெற்றிடம்!


வித்தகன்

விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 25 வருடங்களாக போர்க்களங்களில் சாதனைகள் படைத்திட்ட ஒரு ஈடு இணையற்ற தலைசிறந்த தளபதியை இயற்கைக்கு பறிகொடுத்துள்ளனர் விடுதலைப்புலிகள்.

சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை விமானப்படையின் தாக்குதலில் தமது அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை இழந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜை இழந்துள்ளனர். மிகக் குறுகிய காலத்துக்குள் இரு பிரிகேடியர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு இழந்துள்ளது. தமிழ்ச்செல்வனின் மறைவு அரசியல் ரீதியிலும் பால்ராஜின் இழப்பு இராணுவ ரீதியிலும் புலிகளுக்கு வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 25 வருடங்களாக போர்முனைகளில் வித்தகம் புரிந்த ஓர் போரியல் விஞ்ஞானியாகவே பால்ராஜ் விளங்கினார். அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் போரியல் வரலாற்றில் மட்டுமன்றி சர்வதேச இராணுவ போரியல் வரலாற்றில் கூட தனது மதிநுட்பமான, தாக்குதல் திட்டங்களை பதிய வைத்த ஓர் அபரிமிதமான திறன் படைத்த இராணுவ நிபுணராகவும் பால்ராஜ் காணப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் 1983 ஆம் ஆண்டு பால்ராஜ் தன்னை இணைத்துக்கொண்ட போது அவருக்கு வயது 18. பாலசேகரம் என்ற இயற் பெயரைக் கொண்டவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட பெயரே பால்ராஜ். 21-11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜின் சிறுபராயம் அவரின் தாயாரான இராசமின் ஊரான வடமராட்சி கரவெட்டியிலே கழிந்தது. ஆனால், பின்னர் தந்தை கந்தையாவின் ஊரான முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்க்கு பால்ராஜின் குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.

அங்கு தனது கல்வியை தொடர்ந்த பால்ராஜ் 1983 இல் கொழும்பில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் கொடூர நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்று வேண்டுமென்ற வேட்கையில் ஆயுதப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ் ஆயுதப் போராட்டக்குழுக்கள் இருந்த போதும் பால்ராஜின் தெரிவு பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பாகவே இருந்தது.

1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பால்ராஜை ஆயுதப் பயிற்சிக்காக விடுதலைப்புலிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 9 ஆவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட பால்ராஜ் தனது அதீத திறமைகள் காரணமாக அணித்தலைவராக பயிற்சிக்கு பொறுப்பானவரினால் நியமிக்கப்பட்டதுடன் புதியவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் பணிக்கப்பட்டார்.

பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பால்ராஜ் வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகளுக்கெதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை பால்ராஜ் நடத்தினார். 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப் படைகளுக்கெதிரான போர் மூண்டிருந்த நிலையில் மணலாற்றில் வைத்து மேஜர் பசீலனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பால்ராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதன் பின்னர் அப்போது மணலாறுப் பகுதியில் தங்கியிருந்த பிரபாகரனை பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் அவர் மரணமடைந்த பின்னர் லெப்டினன்ட் கேணல் நவத்துடனும் செயற்பட்டார். வன்னிக் காட்டில் வைத்து இந்தியப் படைகளை சின்னாபின்னமாக்கி, விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்தியாவும் இந்தியப் படையும் வைத்திருந்த தப்பபிப்பிராயத்தை தகர்த்த நடவடிக்கைகளில் பால்ராஜின் பங்கு அளப்பரியது.

மேஜர் பசீலனின் மறைவுக்கு பின்னர் வன்னி மாவட்ட இராணுவத் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட பால்ராஜ் இந்தியப் படைகளுக்கு வன்னி மண்ணையே புதைகுழியாக்கினார். ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள் விடுதலைப்புலிகளை அழிப்போமென சபதமிட்ட இந்தியப் படைத்தளபதிகள் வன்னி மண்ணில் தமது ஜவான்களை தினமும் பலிகொடுத்தமைக்கு பால்ராஜே காரணமாகவிருந்தார்.

விடுதலைப்புலிகளை அழிக்க வந்த இந்தியப்படைகள் தாம் அழிவடைந்த நிலையில் இந்தியா திரும்பிய பின்னர், தொடங்கிய அடுத்தகட்ட ஈழப்போரில் வன்னியிலுள்ள இலங்கை இராணுவத்தின் முகாம்கள் விடுதலைப்புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன. துல்லியமான தகவல்கள், தெரிவு செய்யப்பட்ட இலக்குகளென பால்ராஜ் மேற்கொண்ட தாக்குதல்கள் இம்மியளவு கூட பிசகியதில்லை.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய மையப் பகுதிகளிலிருந்த இராணுவ முகாம்கள் பால்ராஜ் தலைமையேற்று நடத்திய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. முல்லைத்தீவை விரிவாக்கும் இராணுவத்தின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தி வெற்றிகண்டவர் பால்ராஜ்.

வவுனியாவிலிருந்து படையினர் மேற்கொண்ட "வன்னி விக்கிரம" நடவடிக்கையை முறியடித்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றையும் சுட்டுவீழ்த்தி இராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலையும் வழிநடத்தியர் பால்ராஜ்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் உக்கிரமடைந்த சமரை எதிர்கொள்ள விடுதலைப்புலிகள் சிறப்புப் படையை அமைத்த போது விடுதலைப்புலிகளின் முதலாவது சிறப்புப் படைப் பிரிவான சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முதலாவது விஷேட கட்டளைத் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். முல்லைத்தீவில் ஒரு பிரிகேட் இராணுவ படையணியை முற்றாக அழிக்கும் திறன்பெற்ற விடுதலைப்புலிகள் ஆனையிறவில் ஒரு டிவிசன் படையினரை அழிக்கும் வகையில் திறன் பெற்றதற்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவே காரணமாகவிருந்தது.

எந்தக் களமுனையில் விடுதலைப்புலிகளுக்கு தொய்வு ஏற்பட்டாலும் அங்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் பால்ராஜும் களமிறக்கப்படுவார்கள். திடீரென நடத்தப்படும் சிறப்புத் தாக்குதல்களுக்கும் பால்ராஜும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுமே களமிறக்கப்படுவார்கள்.

1993 ஆம் ஆண்டு பூநகரி தளம் மீதான தவளைப் பாய்ச்சலுக்கு புலிகளின் சிறப்புப் படைகள் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் கிளாலியை நோக்கி "யாழ்தேவி" படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இராணுவத்தின் கிளாலி நோக்கிய யாழ்தேவியை தடம்புரளச் செய்வதற்கு உடனடியாக பால்ராஜும் அவரது படைப்பிரிவுமே களமிறக்கப்பட்டனர். களம் விரைந்த சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவினர் பொட்டல் வெளிகளில் மண்ணுடன் மண்ணாக உருமறைப்பு செய்து கிடந்து, இராணுவம் 10 அடி எல்லைக்குள் வந்த நிலையில் எழுந்து நடத்திய தாக்குதலால் யாழ்தேவி தடம்புரண்டதுடன் இராணுவமும் பேரழிவை சந்தித்து இராணுவ நடவடிக்கையை கைவிட்டு திரும்பியது.

இதன் பின்னர் இடம்பெற்ற புலோப் பளைச் சமரில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவினரின் தாக்குதல்களை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஷெல் ஒன்று மிக அருகாக விழுந்து வெடித்ததில் முழங்கால் பகுதியில் படுகாயமடைந்தார். இத்தாக்குதலின் போது பால்ராஜின் உயிரைக் காப்பதற்காக சில போராளிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இதன் பின்னரே பால்ராஜின் ஒரு கால் சற்று ஊனமடைந்தது.

வன்னியில் மட்டுமன்றி யாழ்.குடாநாட்டில் படையினர் மேற்கொண்ட "முன்னேறிப் பாய்ச்சல்" நடவடிக்கைக்கெதிராக `புலிப் பாய்ச்சல்' நடவடிக்கையை நடத்தி ஒரு `புக்காரா' ரக போர் விமானத்தையும் பால்ராஜ் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சுட்டுவீழ்த்தியது. அதேபோன்று ஆனையிறவு போர் முனையிலும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்காக கப்டன் கலைஞன் என்ற போராளி பால்ராஜால் பாராட்டப்பட்டு பின்னர் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். சிறந்த போராளிகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் பால்ராஜ் பின்னிற்காதவர் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணமாகும். கலைஞன் என்ற இப்போராளி முதலில் பால்ராஜின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராகவே இருந்தார்.

யாழ். குடாநாட்டில் படையினர் நடத்திய `முன்னேறிப் பாய்தல்' நடவடிக்கையின் பின்னர் 40 ஆயிரம் படைகளை பயன்படுத்தி படையினர் மேற்கொண்ட `சூரியக் கதிர்' இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் பால்ராஜ் களமிறக்கப்பட்டார். ஆனால், நில அமைப்புகளையும் போரியல் தந்திரங்களையும் கருத்தில்கொண்டு தமது எதிர் நடவடிக்கையை கைவிட்டு புலிகள் யாழ். குடாநாட்டிலிருந்து பின்வாங்கினர்.

அதன் பின்னர் வன்னியை தலைமையகமாகக் கொண்டு விடுதலைப்புலிகள் நடத்திய ஓயாத அலைகள் 1,2,3 ஊடறுப்பு தாக்குதல்கள், குடாரப்பு தரையிறக்கமென அத்தனை பாரிய படை நடவடிக்கைகளுக்கும் பால்ராஜே தலைமையேற்றார். வெற்றியும் பெற்றார். இதனாலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் `தலைசிறந்த போர்த் தளபதி என்ற வகையில் நான் பால்ராஜை ஆழமாக நேசித்தேன்' என்று கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பால்ராஜ் தலைமையில் நடந்த குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம்.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு போல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார்.



தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல் வடிவம் கொடுக்க தயாரானார்.

ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார்.

குடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட விஷேட படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத் தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.

பால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒவ்வொரு போராளிகளையும் தனது குழந்தைகளாக கருதும் அவர் ஒருவேளை இத் தரையிறக்கம் தோல்விகண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார். குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட விஷேட படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.

ஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல் நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத இலங்கை கடற்படை புலிகளின் விஷேட படையணி தரையிறங்கியவுடன் கடல் வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்க முற்படும். அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறு வழியில்லை.

அதனால் தான் `1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கினார். பிரபாகரனின் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்தே பழக்கப்பட்டுப்போன பால்ராஜ் பிரபாகரனின் இந்தக் கவலையையும் தனது மதிநுட்பத்தால் போக்கினார்.

குடாரப்பு தரையிறக்கம்

26-03-2000 ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது. கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `குருவி'கள் மூலம் இந்த விஷேட படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நிலையெடுத்துக் கொண்டது.

இராணுவத்தின் 54 ஆவது, 53 ஆவது படையணிகளின் இரு பிரிகேட்டுகள் உட்பட 15 ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் ஆனையிறவில் குவிந்திருக்க, அவற்றுக்கு நடுவில் 1200 விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு ஒப்பாக பால்ராஜ் தலைமையில் தரையிறங்கியிருந்தனர்.

இந்தப் படையணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உட்பட இன்னும் பல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 இராணுவத்தினருக்கு சமனாகவே களமிறக்கப்பட்டிருந்தனர்.

பால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப்புலிகளும் குடாரப்பில் தரையிறங்கியிருக்க இன்னும் 3 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 450 விடுதலைப்புலிகள் நீரேரியை கடந்து ஏ9 வீதியை பளைக்கும் முகமாலைக்கும் இடையில் ஊடறுத்தனர்.

தமது கோட்டைக்குள் விடுதலைப்புலிகள் தரையிறங்கிவிட்டதால் பேரதிர்ச்சியடைந்த இராணுவ தலைமைப்பீடம் கொழும்பிலிருந்து பலாலிக்கு வந்து தரையிறங்கியது. அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் மேஜர் ஜெனரல் பலேகல்லவுடன் பலாலி வந்திறங்கினர்.

இதையடுத்து, தரையிறங்கிய விடுதலைப்புலிகள் மீது அரசின் முப்படையும் முழு வேகத் தாக்குதல்களை தொடுத்தன. ஆட்லறிகள், விமானங்கள், கடற்படைக்கப்பல்கள் குண்டுமழை பொழிய பால்ராஜ் தலைமையிலான அணிமீது பாய்ந்தது இராணுவம். இந்த தாக்குதலில் இராணுவமும் தனது விஷேட கொமாண்டோக்களையும் பிரிகேட்களையும் களமிறக்கியது. விடுதலைப்புலிகளின் விஷேட படையணிக்கும் இராணுவத்தின் விஷேட படையணிகளுக்குமிடையில் பெரும் போர் மூண்டது.

பால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய விஷேட படையணியுடன் இலங்கை இராணுவம் 34 நாட்களாக போரிட்டது. இராணுவத்தின் யுத்த டாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24 ரக யுத்தக் ஹெலிகளாலும் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை. மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. விஷேட படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.

தரையிறங்கிய விடுதலைப்புலிகளை அழிக்க முடியாததினால் ஆத்திரமடைந்த இராணுவ உயர்பீடம் தாக்குதலில் ஈடுபட்ட விஷேட படையணியான 53 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் காமினி ஹெட்டியாராச்சி, மற்றும் கேணல் ரொசான் சில்வா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவை நியமித்தது. அவராலும் முடியாது போகவே இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை களத்தில் இறக்கியது. ஆனாலும், இராணுவத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆனையிறவு பெருந் தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக் கொண்டிருக்க. அத்தளத்தின் இதயப்பகுதிக்கும் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பால்ராஜின் படைநகர்த்தல் தொடர்பில் சர்வதேச நாடுகளின் இராணுவ வல்லுநர்களே தமது ஆச்சரியங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத் தரையிறக்கத்தை தற்கொலைக்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்தின் மூலம் வன்னிக்கும் யாழ் குடாநாட்டுக்குமிடையில் பல மைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்து கிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. தன்மானப் போராக இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற ஆனையிறவு சமரில் தமிழினம் வெற்றிக்கொடி நாட்டியது.

ஆனையிறவு தளத்தை கைப்பற்றுவதற்காக முன்னர் விடுதலைப்புலிகள் நடத்திய ஆகாய, கடல், வெளிச்சமரை, கட்டைக்காட்டில் இராணுவத்தின் பெரும் படையணியொன்றை தரையிறக்கியதன் மூலமே இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனைப் படிப்பினையாக வைத்தே தமது அடுத்த முற்றுகையின் போது கட்டைக்காட்டு தரையிறக்கத்துக்கு பதிலடியாக குடாரப்பு தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென திட்டம் வகுத்தவர் பால்ராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே முத்தாய்ப் பாய் அமைந்ததுடன் அது ஒரு புதிய போரியல் வரலாற்றினையும் ஏற்படுத்தியது.

இது மட்டுமன்றி 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படைமுகாம்கள் தாக்கியழிப்பு, 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாய, கடல், வெளிச்சமர், 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டிமலை படைமுகாம் தகர்ப்பு, அதே ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூநகரி இராணுவ முகாம் தகர்ப்பு, யாழ்தேவி படை நடவடிக்கை முறியடிப்பு.

1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிப்பாய்ச்சல், 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 1) முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்ப்பு, 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பரந்தன் ஆட்லறி பீரங்கி தளம் மீதான ஊடறுப்பு சமர் அதே ஆண்டின் பெப்ரவரி மற்றும் செப்டெம்பரில் நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 2) கிளிநொச்சி தளம் தகர்ப்பு. 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட (ஓயாத அலைகள் - 3). 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு, கூட்டுப்படைத்தளம் தகர்ப்பு மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு என்பன பால்ராஜ் தலைமையேற்று நடத்திய முக்கிய சமர்களாகும்.

பால்ராஜின் ஒவ்வொரு தாக்குதல்களும் விடுதலைப்புலிகளை இராணுவ வலிமையில் முன்நோக்கி நகர்த்தியது. பால்ராஜ் தலைமையில் இடம்பெற்ற மண்கிண்டிமலைத் தாக்குதல் விடுதலைப்புலிகளுக்கு முதன்முதலில் 81 மி.மீ. ரக பீரங்கியை பெற்றுக்கொடுத்தது. பூநகரிச் சமர் யுத்த டாங்கியையும் கடற்படைப் படகுகளையும் பெற்றுக் கொடுத்தது. முல்லைத்தீவுச் சமர் 122 மி.மீ. ரக பீரங்கிகளை பெற்றுக் கொடுத்ததுடன் இராணுவத்தின் 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிகேட்டை முற்று முழுதாக அழித்தது.

போரியல் நடவடிக்கைகளில் மட்டுமன்றி மனிதநேய நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தனித்துவமானவர். இலங்கை அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத்த காலத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் தங்கியிருந்த பால்ராஜ் அங்கு ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தில் அகப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால், அதன் பின்னர் அங்கு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடனும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் பல மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்தார்.

இதன் பின்னர் வன்னி திரும்பிய பால்ராஜ் போராளிகளுக்கு போரியல் பயிற்சிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பால்ராஜினால் வளர்த்தெடுக்கப்பட்ட பலர் இன்று தளபதிகளாக உயர்ந்து நிற்கின்றனர். களங்களில் பலியாகிய போராளிகள் கூட சாதனைகள் புரிந்தே சரித்திரமாகியுள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு போராளியும் 10 படையினருக்கு சமமாகவே பால்ராஜால் வளர்த்தெடுக்கப்பட்டனர்.

பால்ராஜின் படைப்பிரிவில் இணைவதற்காக தம்மை வருத்திக் கொண்ட போராளிகள் பலருள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் சேர வேண்டுமானால் கடின பயிற்சி முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் தான் பால்ராஜ் படைப்பிரிவில் இணைய முடியும் என்பதால் அப்பயிற்சிகளில் திறமை காட்ட போராளிகள் ஒவ்வொருவரும் படாதபாடுபடுவார்கள். ்நான் பால்ராஜ் குறூப்ீ என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு போராளிக்கும் உலகத்தை வென்றுவிட்ட பெருமையிருக்கும்.

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக பால்ராஜ் முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பெடுத்த பின்னர் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக லெப். கேணல் கில்மனும், அதன் பின்னர் சுசீலனும் இருந்தனர். தற்போது விஷேட தளபதியாக கோபித் உள்ளார்.

போர்நிறுத்த காலத்தில் தலைசிறந்த போராளிகளை உருவாக்கும் பணியிலீடுபட்டிருந்த பால்ராஜ் இருதய நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கடல்புலிகளை சேர்ந்த லெப். கேணல் வரதா அல்லது ஆதி என்றழைக்கப்படும் போராளிக்கும் பால்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணமே செய்துகொள்வதில்லையென்ற முடிவிலிருந்த பால்ராஜ் தலைவரினதும் சக தளபதிகளினதும் வற்புறுத்தலுக்கமையவே திருமணம் செய்து கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலையில் சில நடவடிக்கைகளுக்காக தங்கியிருந்த போது பாம்பு கடித்ததில் பால்ராஜின் மனைவி லெப். கேணல் வரதா உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவுத் துயர் ஒருபுறமும் இருதய நோயின் தாக்கம் மறுபுறமும் அழுத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது படை நடவடிக்கைகளிலும் போராளிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அண்மைக் காலமாக அவரின் நடவடிக்கைகள் மன்னார், மணலாறு களமுனைகளிலேயே அதிகமாகவிருந்தது.

அதீத உழைப்பு கடின முயற்சிகளால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட பால்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பாத பால்ராஜ் கள நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரம் காட்டினார். இவ்வாறான நிலையிலேயே கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் பால்ராஜ் மரணமானார்.

லெப்.கேணல் சுபன்

லெப்.கேணல் சுபன்





வீரமரணம் 25-09-1992

லெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.


நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்'

தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னர்ர் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.

சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

நன்றி எரிமலை

பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

ewசிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1, தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.
அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.

ஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது மிகப்பெரிய வல்லமையுடன் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தக் கம்பீரத்தின் அச்சாணியை நொருக்குவதென புலிகள் முடிவெடுத்தார்கள். ஓயாத அலைகள் -1 இல் தொடங்கி இடையறாமல் கடும் சமர் புரிந்திருந்த நிலையிற்கூட புலிகள் அசந்து போகவில்லை. கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிய சிலநாட்களிலேயே தமது அடுத்த அடிக்கான வேலைத்திட்டத்தில் புலிகள் முழு மூச்சாக இறங்கிவிட்டார்கள்.

கண்டிவீதியை மையமாக வைத்து ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை சிறிலங்காப் படைகள் நிலைகொண்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி அப்படியே இருக்கத்தக்கதாக பரந்தனையும் ஆனையிறவையும் ஊடறுத்துத் தாக்கியழிக்க புலிகள் திட்டம் தீட்டினர். இவை சரிவந்தால் கிளிநொச்சிப் படைத்தளம் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நிலவழித் தொடர்புகளற்ற தனித்த படைத்தளமாகிவிடும்.

ew1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி இந்த ‘ஆனையிறவு – பரந்தன்’ கூட்டுப்படைத்தளம் மீதான ஊடுருவித் தாக்குதலுக்கான ஆயத்தங்களோடே கழிந்தது. சண்டையணிகள் பயிற்சியிலீடுபட்டிருந்தன. திட்டமிட்டதன்படி முதன்முறையே இந்தத் தாக்குதலைச் செய்ய முடியவில்லை. தாக்குதல் திட்டம் சிலதடவைகள் பிற்போடப்பட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம். ஆனையிறவின் மையப்பகுதி மீது தாக்குதல் நடத்த வேண்டிய அணிகள் நீரேரியூடாகவும் சதுப்புநிலமூடாகவும் சிலவிடங்களில் வெட்டைகளூடாகவும் நகரவேண்டியிருந்தன. அணிகள் நகரமுடியாதளவுக்கு நீர்மட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ஒருமுறை இத்திட்டம் பிற்போடப்பட்டது; வேறொரு காரணத்தால் இன்னொரு முறை இத்திட்டம் பிற்போடப்பட்டது. இறுதியில் தாக்குதல் நிகழ்த்தப்படாமலேயே 1996 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

இந்நேரத்தில் எதிரியும் பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். முல்லைத்தீவுத் தளம் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்து அலம்பிலில் தரையிறங்கிய இராணுவத்துடனான சமரும் ஒருபக்கம். அதன்பின்னர் சூட்டோடு சூடாக சத்ஜெய 1, 2, 3 என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையை எதிர்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக புலிகள் மறிப்புச் சமரை நடத்தியிருந்தமை இன்னொரு பக்கம். இவற்றுக்கெல்லாம் முன்பு யாழ்ப்பாணத்தைக் கைவிடும்போது நடந்த தொடர் சமர்கள் என்று ஒருவருட காலப்பகுதி மிக உக்கிரமான சண்டைக்காலமாக இருந்தமையால் புலிகள் இயக்கம் தனது ஆட்பலத்தைப் பொறுத்தவரை பலவீனமடைந்திருக்கும் என்ற கணிப்பு சிறிலங்கா இராணுவத் தரப்புக்கு இருந்தது. முல்லைத்தீவை இழந்தாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றினோம் என்றளவில் இராணுவத்தினரின் மனோதிடம் அதிகரித்திருந்தது. அதே சூட்டோடு அடுத்த நடவடிக்கையையும் செய்து வெற்றியைப் பெற்றுக்கொள்வது இலகுவென இராணுவம் கணித்தது.

wa

அத்தோடு புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தும் கால அவகாசத்தைக் கொடுக்கக் கூடாதென்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இவற்றின் அடிப்படையில் ஆனையிறவை முதன்மைப் பின்தளமாகக் கொண்டு ஒரு பெரும் நடவடிக்கைக்கான அயத்தப்பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டிருந்தது. சிறப்பணிகள் களமுனைகளில் குவிக்கப்பட்டு, ஆயுத தளபாடங்கள் பொருத்தப்பட்டு, கிட்டத்தட்ட நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் நிலையில் இருந்தன. ஆனையிறவை மையமாகக் கொண்ட ஆட்லறித் தளம் மேலதிக பீரங்கிகளைக் கொண்டு மெருகூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் புலிகளும் தமது பாய்ச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் புலிப்படை முந்திக்கொண்டது. ஓரிரு தடவைகள் பிற்போடப்பட்ட அந்நடவடிக்கையைச் செய்ய இறுதியில் எல்லாம் கைகூடி அந்த நாளும் வந்தது. 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள்.

ஆனையிறவின் மையப்பகுதிகளைக் கைப்பற்றியழிப்பதும் ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதும் ஒருபக்கம் இருக்க, பரந்தன் சந்தியை மையமாகக் கொண்டு, இரசாயணத் தொழிற்சாலை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டிருந்த பரந்தன் படைத்தளத்தைக் கைப்பற்றுவதும் – அதன்வழியே கிளிநொச்சி இராணுவத்தினருக்கான நேரடித் தரைத்தொடர்பைத் துண்டிப்பதும் அடிப்படைத் திட்டங்களாக இருந்தன. எல்லாம் திட்டமிட்டபடி சரிவந்தால் களநிலைமைகளைக் கருத்திற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்தன. எங்காவது பிசகினாலோ இழப்புக்கள் அதிகம் வர நேர்ந்தாலோ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்பதும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இழப்புக்கள் அதிகமான நீண்ட தொடர் சமர்களைச் செய்ய இயக்கம் விரும்பவில்லை.

ஜனவரி எட்டாம் நாள் இருட்டத் தொடங்கியதும் தாக்குதலணிகள் நகரத் தொடங்கின. ஆனையிறவின் மையப்பகுதிக்குச் செல்லும் அணிகள் நீண்டதூரம் நீருக்குள்ளாலும் வெட்டைக்குள்ளாலும் நகர வேண்டும். மிகவும் சிக்கலான அதேநேரம் ஆபத்து அதிகமான நகர்வு அது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியே ஆனையிறவின் மையத்துக்குச் சென்று ஆட்லறிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. எதுவித சிக்கலுமின்றி அணிகள் நகர்ந்து தமக்கான நிலைகளைச் சென்றடைந்தன. ஒன்பதாம் நாள் அதிகாலையில் திட்டமிட்டபடி சண்டை தொடங்கியது.

எதிரி திகைத்துத்தான் போனான். தனது ஆட்லறிகளைத் தகர்த்துவிட்டுப் பின்வாங்குவதற்கான அவகாசம் எதிரிக்குக் கொடுக்கக்கூடாதென்பதில் புலிகள் மிகக் கவனமாக இருந்தனர். முல்லைத்தீவில் புலிகள் ஆட்லறிகளைக் கைப்பற்றியபின்னர், கைவிடப்படும் நிலைவந்தால் தமது ஆட்லறிகளைத் தகர்த்துவிடும் ஏற்பாடுகளை இராணுவம் அறிவுறுத்தியிருந்தது. மிகவும் உச்சக்கட்டத் திகைப்புத் தாக்குதலோடு வேகமான நகர்வுகளை மேற்கொண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றியது. எந்தச் சேதமுமின்றி ஒன்பது ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டன. திட்டமிட்டதன்படி கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளைக் கொண்டு எதிரிநிலைகள் மீது புலிகள் அங்கிருந்தே எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்நிலையில் ஏனைய களமுனைகள் சிலவற்றில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் முழு வெற்றியளிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வரவேண்டுமானால் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வழியால் முரசுமோட்டைப் பகுதிக்கு அவற்றைக் கொண்டுவர முடியும்.

பரந்தன் படைத்தளம் மிகமிகப் பலமாகவிருந்தது. தனது நடவடிக்கைக்கென மேலதிக சிறப்புப் படைகளைக் குவித்திருந்தான் எதிரி. அதைவிட அதிகரித்த ஆயுதப் பலத்தோடும் எதிரியிருந்தான். ஆட்லறிகள் பறிபோன பின்னர் பரந்தனை விடுவதில்லையென்பதில் மிகமிக மூர்க்கமாக இருந்தான். ஏனென்றால் பரந்தன் கைவிடப்பட்டால் அவ்வளவு ஆட்லறிகளும் புலிகளின் கைகளுக்கு நிரந்தரமாகப் போய்விடுமென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் பரந்தன் படைத்தளத்தைக் கைவிடுவதில்லையென்பதில் எதிரி பிடிவாதமாக இருந்தான்.

விடியும்வரை சமாளித்தாற் போதும் என்ற நிலையில் இராணுவமும், விடிவதற்குள் தளத்தைக் கைப்பற்றி ஆட்லறிகளைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்று புலிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு சமரிட்டனர். விடிந்துவிட்டால் எதிரியின் விமானப்படை புலிகளுக்குப் பெரிய சவாலாகிவிடும். பின்னர் இருந்ததைப் போன்று அந்நேரத்தில் விமான எதிர்ப்புப் படையணி கனரக ஆயுதங்களைக் கொண்டு பலமாக இருக்கவில்லை. பகல்நேரச் சண்டைகளில் – குறிப்பாக வெட்டைச் சண்டைகளில் MI-24 தாக்குதல் வானூர்தி மிகப்பெரிய சவாலாக இருந்தது. எதிரியின் பகுதிக்குள் நீண்டதூரம் உள்நுழைந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியபடியிருக்கும் அணிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படாதவரை ஆனையிறவிற்குள் நிற்கும் புலிகள் பொறிக்குள் அகப்பட்ட நிலைதான் இருக்கும்.

புலிகள் எவ்வளவு முயன்றும் பரந்தன் படைத்தளம் வீழ்த்தப்படவில்லை. பொதுவான சண்டைகளில் இப்படிச் சிக்கல் வந்தால் அடுத்தநாள் இரவோ, மூன்றாம்நாளோ கூட மீள ஒரு திட்டத்தோடு போய் முகாம் கைப்பற்றப்படும். கொக்காவில், மாங்குளம் உட்பட அப்படியான பல வரலாறுகள் ஏற்கனவே உண்டு. ஆனால் ஓர் இரவிலேயே வெற்றியா பின்வாங்குவதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் பரந்தன் படைத்தளத்தின் மீதான தாக்குதல் அமைந்திருந்தது.

விடிவதற்குள் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட முடியாதென்பது விளங்கிவிட்டது. இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகளைக் கொண்டு எதிரிமீது எறிகணைத்தாக்குதல் நடத்தியபடியிருந்த அணிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி அனைத்து ஆட்லறிகளையும் ஆயுதக் களஞ்சியத்தையும் தகர்த்து அழித்துவிட்டு அவ்வணிகள் பின்வாங்கின.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கணக்காக கையிற் கிடைத்த அந்த ஒன்பது ஆட்லறிகளும் அவற்றுக்கான எறிகணைகளும் அழிக்கப்பட்டன. பெரும் திகைப்புத் தாக்குதலொன்றை நடத்தி எதிரிக்குப் பலத்த ஆள், ஆயுத இழப்புக்களை ஏற்படுத்திவிட்டுப் புலிகள் பின்வாங்கிக் கொண்டார்கள்.

பெரும் வெற்றியொன்று கைநழுவிப் போனது தானென்றாலும் இயக்கமும் ஈழவிடுதலைப் போராட்டமும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது அத்தாக்குதல்தான். பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்த எதிரிக்குக் கொடுக்கப்பட்ட அந்த அதிர்ச்சி வைத்தியம் சிலமாதங்களுக்குத் தமது நடவடிக்கைகளைப் பிற்போடவேண்டி சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

இயக்கம் ஆட்லறியைக் குறிவைத்து அடித்த அடுத்த அடி சரியாகவே விழுந்ததோடு ஓர் ஆட்லறியையும் பெற்றுத் தந்தது. அது தென்தமிழீழத்தில் புளுகுணாவ இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல். அதன்பின் தாண்டிக்குளச் சமரிலும் ஆட்லறிகள் குறிவைக்கப்பட்டன; ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் அதேயாண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ஓமந்தைப்படைத்தளம் மீதான தாக்குதலிலும் ஆட்லறிகள் மீது கண்வைக்கப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை (ஈழத்து எழுச்சிப் பாடகன் மேஜர் சிட்டு இச்சண்டையில்தான் வீரச்சாவடைந்தார்).

இனிமேல் எதிரியிடமிருந்து ஆட்லறிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று இயக்கம் தானே அவற்றைத் தேடிக்கொண்டது. ஏற்கனவே பல ஆயுதங்களை எதிரிக்கு அறிமுகப்படுத்தியது போல் பல்குழல் பீரங்கியை சிறிலங்கா இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியதும் புலிகள் இயக்கம்தான். பின்வந்த காலத்தில் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு கைப்பற்றப்பட்டபோதுதான் இயக்கம் எதிரியிடருந்து ஐந்து ஆட்லறிகளைக் கைப்பற்றியது. ஆனால் அதற்கு முன்பே இயக்கம் இரட்டை இலக்கத்தில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.