வியாழன், 28 ஜனவரி, 2010

1) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?
1995 மார்ச் 9 இல் திருகோணமலை புல்மோட்டைக்கடலில் வைத்து டோராப் படகினைத்தாக்கி வீரச்சாவடைந்தார்.
user posted image

2)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது
(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)
13.02.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் மாவீரர் ஆனார்கள். "விடிவிற்கு முந்திய மரணங்கள்" என்னும் நூலில் இத்தாக்குதல் சம்பவத்தை விபரித்து பங்குபற்றியவர் எழுதியுள்ளார். (எழுதியவர் பாரீசில் தற்போது வசிக்கின்றார்)

3)
http://ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=4613

புதன், 27 ஜனவரி, 2010

http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1264552048&archive=&start_from=&ucat=1&

ஜனவரி -11


"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."

தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்
யாழ் தீவகம் சாட்டியில் மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழிப்பு

யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் உள்ள சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாயக விடுதலைக்காக போராடி தம் இன்னுயிர்களை ஈகம்செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.


இந்நிலையில் சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கபட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் வழிபாட்டுதலங்கள் என்பன சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் தீவகத்தில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைகளை பசில் ராஜபக்சவே முன்னின்று செய்வதாகவும், இப்படியான இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறீலங்கப்படையினரின் போர் வெற்றி நினைவு தூபிகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது தமிழர்களின் இதயங்களில் என்றும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.