வியாழன், 1 ஜூலை, 2010

தலைவர் பிரபாகரன்ஒரு போராளி என்ற தளத்திலிருந்து எழுச்சிபெற்ற இராஜதந்திரி


தேசிய அரசியல் இப்பொழுது தெளிவற்ற பாதையிற் சென்றுகொண்டிருக்கிறது. இவ்விதமான அமைதியற்ற தருணத்திலே கடந்தகால நினைவுகளையும் உணர்வுகளையும் மட்டுமல்லாது சாதனைகளையும் வேதனைகளையும் இரைமீட்டிப் பார்ப்பது அவசியமானது. தமிழினத்தின் எதிர்காலம் இனிமேல் எந்தப்பாதையிலே செல்லப்போகிறது?

தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் யாவரும் இப்பொழுது தொய்ந்து போயுள்ள நிலையில் நைந்துபோயுள்ள எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்வேண்டியது அவசியமானது. கட்சியரசியல் தலைமைகள் "சுயநல அரசியற் பூச்சாண்டித் தனங்களுடன்" பேச்சுவார்த்தைகள் என்ற பேச்சோடு காலத்தைக் கடத்துகின்றன. இப்பொழுது சமாதானப் பேச்சுவார்த்தையே போராட்டமாகிவிட்டது. ஆயுதப்போராட்டமானது இப்பொழுது சமாதான ரீதியான அரசியற் போராட்டமாக மாறியுள்ள தருணத்திலே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐம்பதாவது அகவையை எட்டியுள்ளார்.

தமிழர் மீது இனவெறியோடு தொடரப்பட்ட கொடூரமான தாக்குதல், இன அழிப்பு நடவடிக்கைகள் இனிமேல், எந்தப் பாதையிலே செல்லப்போகின்றன? தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பின் வெண் சூட்டிலே பிறந்த விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறியமையும் இயக்கங்களிடையே மோதல்கள் தொடர்ந்தமையும் வரலாறாகி விட்டது. தமிழினத்தின் விமோசனத்திற்கான உயிர்ப்பும் உயிர்மூச்சும் தம்பி பிரபாகரனின் தீர்க்கதரிசனமான உறுதி என்ற மயிரிழையிலேதான் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நடைபெறுவது போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையா பேச்சுவார்த்தைக்கான போராட்டமா என்ற கேள்விக்கு விடைகாண முடியாது இலங்கையின் தேசிய அரசியலே தளம்பிப் போயுள்ளது.

நிரம்பிய பட்டறிவுகளின் மத்தியிலே ஐம்பது வயதை எட்டியுள்ள பிரபாகரன், தன்னை ஒரு போராளி என்ற தளத்திலிருந்து எழுச்சிபெறவைத்து, சாணாக்கியம் மிக்க இராஜதந்திரியாகப் புடமிட்ட வரலாறுதான் இப்பொழுது தமிழினத்தின் எதிர்காலத்தை வழிப்படுத்தும் ஒரேயரு பற்றுக்கோடாகியுள்ளது. இப்பொழுது நல்லதும் கெட்டதுமாகப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் எதிர்காலமே சூனியத்தை நோக்கிச் செல்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காகத் தீர்க்கதரிசனமான உணர்வுகளோடு சிந்தித்த தலைவர்கள் இனவாதக் கும்பல்களின் நடுவில் வெறுமனே கையைப் பிசைக்கின்றார்கள். ஆயுதப்போராட்டம் தணிந்த நிலைமையிலே விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்திலே கால்பதித்துள்ளது. இனவாத அரசியற் சக்திகளின் பயங்கரவாதப் போக்குகளின் மத்தியிலே அரசியலைத் தனியாகவும் போராட்டத்தைத் தனியாகவும் பிரித்துப்பார்க்க முடியாதென்ற விடயத்தை ஆழமாக உணர்ந்துள்ள பிரபாகரன், இப்பொழுது தமிழினத்தின் தலைமைக் குரலாக மாறியுள்ளமை வரலாறாகிவிட்டது.

இலங்கையின் அரசியலில் தமிழ் மக்களின் போராட்டமே உரிமைப் போராட்டம் என்பதும் இனவாதிகளின் அரசியல் முரண்பாடுகள்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பதும் வெளிப்படுவதற்குரிய ஆதார சுருதியாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் தம்பி பிரபாகரனின் பன்முக ஆளுமை நிரம்பிய உள்ளாற்றல்களும் அமைந்து அனைத்துலக சமூகத்தின் கண்களை மெல்லமெல்லத் திறந்துள்ளன. தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலே, ஆயுதப்போராட்டம் என்ற மூச்சோடு வெளிப்பட்ட இளைஞர்களுக்குத் தம்பி பிரபாகரன் அளித்த தலைமைத்துவம் இப்பொழுது உலகளாவிய கவனவீர்ப்பைப் பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் உரிமைப் போராட்டம் அரசியற் போராட்டமாக வியாபித்துள்ளமை அமைதிக்காக ஏங்கும் தமிழ் மக்களுக்கான விமோசனப் பெருந்தெருவைச் செப்பனிடத்தொடங்கியுள்ளது.

அழிவுப் போரென முத்திரை குத்தப்பட்ட ஆயுதப்போரை ஆரம்பித்த சிங்கள இனவாதச் சக்திகள் இப்பொழுது தம்முள்தாமே போரிடும் கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழினத்தின் விடுதலைப்போராட்டம் வெறுமனே பூவா தலையா போட்டுப்பார்க்கும் விடயமன்று. இனவாதக் கட்சிகளும் தலைமைகளும் தமிழினத்தின் விடுதலையைக் கசாப்புக்கடை விவகாரமாக்கி விட்டுள்ளமை, சமாதானம் பேசமுற்பட்ட அனைத்துச் சக்திகளையும் தலைகுனிய வைத்துள்ளது. சமாதானத்தைப் பற்றிப் பேசுபவர்கள் உணர்ச்சியற்ற வறட்டுத் தனங்களின் மத்தியிற் சிக்கியுள்ளனர். இனவாதம் பேசுபவர்கள் கையாலாகாத கசப்புணர்வுகளோடு நாட்டின் எதிர்காலத்தையே விழுங்கும் செயல்களையெல்லாம் தூண்டிவிட்டுள்ளனர். தேசத்தின் முதுகெலும்பையே தகர்க்கும் முயற்சிகள் சகல கோணங்களிலும் வெளிப்படுகின்றன.

இவ்வாறான அரசியற் கலாச்சாரத்தின் மத்தியிலே தலைவர் பிரபாகரனின் உறுதியொன்றுதான் தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியையும் சுதந்திரத்தையும் தரும் விடயமாகியுள்ளது. இடைக்கால நிர்வாக அமைப்புக் கோரிக்கையும் சுதந்திரமான சுயநிர்ணய உரிமை என்ற வரிசையில் வெளிப்பட்ட உணர்வுகளையும் புறங்கையாலே தட்ட முனைபவர்கள், வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் ஓசைப்படாமல் அங்கீகரிக்கப்படாத ஒரு தனிநாடே உருவாகியுள்ளதையிட்டு ஏக்கமடைகின்றனர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பிளவுகளைத் தூண்டிவிட்டபடி, இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற விடயத்தை அங்கீகரிக்க முற்படாது, தொடரும் ‘இனவாத நாயோட்ட அரசியலில்' அமைதி, சமாதானம் என்றபடி வெளிப்படும் உச்சாடனங்களின் உள்ளுடனையெல்லாம், சர்வதேச சமூகம் விழுங்கிக் கக்கியபடி பார்த்துக் கொண்டிருக்கின்றது.

யுத்தத்தின் காரணமாக வடகிழக்குப் பிரதேசங்களை நொருங்க வைத்த இராணுவத்தினர் செய்த சர்வநாசங்கள் இன்னும் முடிவில்லாது தொடர்கின்றன. ஈழத் தமிழர்களின் அபாரத் திறமையும் மனவுறுதியும் சாம்பல் மேட்டிலிருந்து புதிய சக்தியாக எழுவதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையும் தீர்க்க தரிசனமும்தான் மூச்சாக இருந்திருக்கின்றனவென்பதை இப்பொழுது தமிழ் கூறும் நல்லுலகம் உணர்ந்து விட்டது. ஆயுதப் போராட்டத் தலைமை என்ற அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தபடி அரசியற் போராட்டத்தை ஆற்றுப்படுத்தும் விடுதலைப் புலிகளும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தமிழினத்தின் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் சுக்கானாக மாறியுள்ளமை, பேச்சுவார்த்தை சமாதானம் என்றபடி வெளிப்படும் தென்னிலங்கை அரசியற் சக்திகளை இப்பொழுது விழிப்படைய வைத்துள்ளது.

யுத்தத்தையே நடாத்த முடியாது தறிகெட்டுப் போன இலங்கையின் அரசியற் சக்திகள், பேச்சுவார்த்தை, சமாதானம் என்றபடி செயற்பட முற்படும் அர்த்தமற்ற அரசியல் இப்பொழுது இனவாதச் சொயல்களுடன்தான் வெளிப்படுகின்றது. இலங்கையில் வெளிப்பட்டுள்ள தீவிரவாதப் போக்குடனான விடுதலைப் போராட்டம், சுதந்திரப் போராட்டமே என்ற உண்மையை உலகிற்கு உணர வைக்கும் போராட்டத் தலைவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எழுச்சி பெற்றுள்ளார்.

இலங்கையில் வெளிப்பட்ட உள்நாட்டு முரண்பாடுகளையும் யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் தார்மீகக் கடமையிலிருந்து சர்வதேச சமூகமும் இலங்கை அரசியற் சக்திகளும் பிசகினால் அமைதியையும் சமாதானத்தையும் தேடும் பயணம் தொடர்கதையாகத்தான் போய்முடியும். போராடும் அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரும் முழுமையாக ஒன்றுபடாது முட்டாள்தனமான பாதையிற் கால்பதிக்க முற்படுவதைத் தடுக்கும் ஒரேயரு சக்தியான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது அகவை நிறைவு, புதிய சமாதான எழுச்சிக்கான பாதையை நிமிர வைக்க வேண்டுமென வாழ்த்துவோமாக!

அரசியல் ஆய்வாளர்,

முன்னாள் தினக்குரல்ஆசிரியர்,

ஊடகத்துறை விரிவுரையாளர்,

இலங்கை.

சிவநேசச்செல்வன்


தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்


விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள்,நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள்அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்தஉண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறைவாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான்,பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா


ம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக்கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டியமனிதர்!

ரிகரன் இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டுஅக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும்கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார்அப்பா!

ல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை,சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில்தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர்என்பதால், ‘தம்பி என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ்நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும் என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க அதன் பிறகுதான் காட்டுவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் அலெக்ஸ் ஹேவியின் ஏழு தலைமுறைகள்’. அதில் இடியும்மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தரமாட்டார்கள் என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மி மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப்பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம்பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோதுபிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும்இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும்இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும்பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான்இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபாமுன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

க்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்குமுதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

ந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப்புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன்முழுமையான போராளியாக முடியாது என்பது அவரது அறிவுரை!

வ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம்இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றிஅனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றவார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரியபழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம்பிரபாகரன்!

று கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன்கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன்எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்என்பார்!

மிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்டமக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாகஅறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்தியராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே,ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்துபிரபாகரனுடன் மோதியவர்கள்!

நாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம்வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன்அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாகஅமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

யிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர் என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகிஇருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி,பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி.இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

ன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படிஇருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்றமுடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்கவேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்கமாகச் சொல்வார்!

மி நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர்பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிடஉத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாகஇருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக்கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

விகடன்