புதன், 27 ஜனவரி, 2010

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - லெப்.கேணல். நீலன்

ஆரையம்பதி மண்ணில் அவதரித்த நீலன்
ஆரையும் பகைக்காது அரவணைத்த நீலன்
வேரையே நம்பி நின்று விழுதான நீலன்
வீணரின் விருப்புக்கு விலை போகா நீலன்

ஆறும் அலைகடலும் அணையாகி நிற்கும்
ஆரையம்பதி மண்ணின் அசல்வீரன் நீ
நீறாகிப்; போனாலும் நிறைகாப்பேன் என்று
நீசர்க்கு வணங்காது நின்றுயிரை மாய்த்தான்

ஆளும் சிங்களமும் அயல்நாட்டார் அரசும்
ஆளார் இன்னென்று அலசித் தோற்றிருக்க
நாளும் பொழுதும் நாட்டுக்காய் உழைத்தவனை
நரிகள் சதிசெய்து நாசம் புரிந்ததுவே

தேனும் மீனும் தேட்டமுடை மண்ணாம்
தென்தமிழீழத்தின் தேச ஒளிர் விழக்காய்
தீனும் பொருளும் திருவென் றெண்ணாத
தீபம் தனையந்த தீயர் அணைத்தாரோ

கட்சி மாறென்ற கயமைக்கு மறுத்ததனால்
கையை முறித்தார்கள் காணார் பயனதனால்
பட்டினி கிடத்தி பதைக்க வைத்தார்கள்
பயந்தாய் அல்லன் நீ பலியாய் போனாயோ!

பெருமை சேர் தலைவன் பிரபாகரன் அண்ணன்
பிரபா அருமை அறிந்தாய் நீ அதனாற் சிறந்தாய் நீ
கருமை எல்லாம் கஸ்தூரி ஆகிடுமோ
எருமைகள் அறிந்திடுமா ஏந்தல் இவன் மகிமை

தலைவன் அவன் மட்டே தனி ஆள் வேறில்லை
மலையாம் அவன் முன்னே மண்ணாங்கட்டிக்கு
தலையான் சாய்ப்பேனோ தவறேன் என்கின்ற
நிலையாம் இலக்கோடு நின்றே உயிர் நீத்தாய்

வளர்த்த மாட்டுக்கு வந்தது ஒர் ஆசை
வளர்த்தோன் றனைக்குதறி வளயா உனில் அதனில்
வாலாட்டம் சொல்லாது விலையாய்ப்போகாத
வீரன் நினைக்கொன்றார்

கட்டியவள் பொட்டிழந்தாள் கன்றுகளும் நினையிழந்தார்
நட்டமது நினைச்சூழ்ந்த நால்வருக்கு மட்டுமல்ல
நாட்டுக்கே இழப்பாகும் நம் போர்க்கும் இழப்பாகும்

எமது மண்ணுக்காய் தமை ஈர்ந்த ஆரையம்பதி மாவீரர் பட்டியல்

NAMES REAL NAMES DATE OF BIRTH DATE OF MARTYR
Lt.Col.Neelan ( Senior Member ) Seenithamby Somanathan 28.05.1966 12.04.2004
Black Tiger. Major.Anthaman Vadivel Senthilkumar 17.07.1978 16.08.1999
Lt.Sutharshan Dr.Poopalapillai Sivagurunathan 13.05.1964 28.06.1987
Major.Ahaventhan Ponnampalam Thiyagarajah 28.05.78 20.12.2000
Major.Viduthalai / Sinthujan Sinnathamby Theyvaranjan 07.08.1971 27.02.1996
Major.Nalan or Dinesh Sinnathamby Jeyakaran 15.02.1969 03.03.1996
Major.Maran Sellathamby Suthaharan 10.06.1966 06.10.1996
Captain.Nakkeeran Thiyagarajah Sasikaran 17.09.1970 11.11.1993
Riyas or Aruna Thiyagarajah Satheeswaran 14.07.1968 13.09.1989
Vivae Pernando Uthayaraj Unknown Unknown
Captain. Luxman Thiyagarajah Varatharajan 16.11.1967 03.09.1991
2nd Lt. Mihunan / Sathees Nagalingam Thamilselvan 21.04.1972 21.06.1992
Lt.Sanjeevan / Shamini Kunjithamby Thayaparan 08.03.1969 21.09.1992
Thaarakan / Kennedy Pakiyarajah Nadeswaran 08.08.1971 11.11.1992
Lt. Iranjan / Sulakshan Antony Ganesh 06.06.1967 02.02.1993
2nd Lt. Vetri / Mayavan Sivapalasuntharam Vijajaraj 06.06.1975 06.02.1993
Lathangan Krishnapillai Uthayakumar 25.03.1977 26.04.1993
Lt.Varnan Seenithamby Mahendran 05.10.1951 26.07.1993
Manojan Sivachandran Yoganathan 10.09.1978 29.09.1993
Piremkumar Paramakuddy Karunakaran 11.07.1972 11.11.1993
Supankee Miss.Sinnathamby Priya 08.01.1976 11.11.1993
Lt. Mathan Kathirkarmar Paramanantham 12.06.1972 17.10.1994
Captain.Marahathan / Thileep Muththusami Chandrakumar 27.11.1969 10.12.1994
Murukananthan / Thamilarasan Elayathamby Kamalavaran 12.06.1978 28.12.1994
Alaguraj Somasuntharan Rajanikanth 14.11.1979 29.05.1995
Lt. Mano / Manokaran Kulanthaivel Premanathan 01.01.1975 06.06.1995
Lt.Navalan / Pirapa Sinnathamby Rajanayagam 08.08.1968 02.10.1995
2nd Lt. Theiventhiran / Nivethan Kulanthaivel Sunthararajan 27.08.1977 23.10.1995
2nd Lt. Sathiyasayee Kandaityah Selvarajah 29.12.1975 28.10.1995
Isaiyalan Ramachandran Vasanthakumar Unknown 29.10.1995
Rajamaran Suntharalingam Sureshkaran 10.01.1977 14.11.1995
Captain. Gowshihan Kanchakuddi Sivanathan 25.05.1970 27.11.1995
Pandithurai Mahalingam Suhitharan 24.06.1976 08.06.1997
Captain. Palakrishnan Sivasambu Sekaran 30.10.1974 01.08.1997
2nd Lt.Kenthiran / Anuraj Vinayagamoorthy Chandramohan 01.01.1979 02.09.1997
2nd Lt. Kajamohan Samithamby Vinotharajan 23.02.1980 05.10.1997
2nd Lt. Manokar Perinparajah Rajanikanth 19.12.1981 13.10.1997
Lt.Ulagavan Thambirajah Priyathas 08.01.1978 21.11.1997
2nd Lt.Kunakuntran / Premkumar Thamotharam Ahilan 01.11.1978 04.12.1997
Nesan Somasuntharanm Nesarajah Unknown 24.02.1991
Nisanthan Konamalai Kengatharan 01.07.1965 13.07.1986
Alvin Sivapalan Karunakaran 26.09.1974 21.07.1991
Alip / Kesavan Moorthathamby Uthayakumar 30.11.1965 15.10.1986
Jeyam / Sathees Sellathamby Mohanachandran 24.07.1968 01.12.1986
Lt.Dayan Sinnathurai Theyvalingam 11.06.1965 04.05.1987
2nd Lt.Gopi Nagamani Aanatharajah 09.10.1957 28.06.1987
2nd Lt.Vivey Samithamby Uthayachandran 06.04.1968 22.07.1987
2nd Lt.Kala Ponnampalam Sathanantharathinam 19.06.1961 19.04.1988
Lt.Mano Kathamuththu Sinnarajah 28.01.1958 01.06.1988
2nd Lt.Sankili / Sanjeevi Kasupathi Vadivel Unknown 03.07.1988
Nobert Nallaiyah Sripala 21.01.1969 03.07.1988
Lt.Anitha Miss.Thambirajah Inthirathevi 19.09.1970 28.11.1988
Murali Peethamparam Nanthakumar 07.10.1969 27.12.1988
2nd Lt.Arujun Sinnathamby Thayalan 30.12.1967 27.12.1988
2nd Lt.Ajith Subramaniyam Thevarajah 30.12.1967 Unknown
Thayan Sinnathamby Sakthivadivel 06.04.1971 27.12.1988
Easwaran 01.05.1972 16.07.1989
Subramaniyam Subramaniyam Keethakaran 01.01.1968 14.08.1989
Murali Krishnapillai Krishnamurali 28.03.1971 16.06.1990
Saravanan Unknown 16.06.1990
Asokan Unknown 16.06.1990
Lt.Anura Miss.Thambyiah Gowry 13.02.1972 05.08.1990
Piriyan Ponnaiyah Thayalan 19.08.1970 13.08.1990
Rubathan Arumugam Kamalraj 23.02.1982 26.05.1998
Capt.Maruthavanan / Siraivanan Mohanasuntharam Vasanthamohan 20.10.1977 21.06.1998
2nd Lt.Jeyapiriyan Konalingam Dineshwaran 18.09.1980 01.07.1998
Capt.Regan / Kunaregan Kiruparetnam Surenthiran 09.09.1978 10.09.1998
Lt.Perumathan / Aanathan Kanthasami Jegatheeswaran 02.10.1973 27.09.1998
Maharanthan Visvalingam Ragularajah 03.05.1981 27.09.1998
Ananthaa Miss.Subramaniyam Nirmala 15.11.1983 27.09.1998
2nd Lt.Arulnithi Elayathamby Kumar 06.04.1978 27.09.1998
2nd Lt.Rupalingam Sinnaiyah Amirthalingam 30.03.1973 27.09.1998
Lt.Jeevasuthan Nallathamby Thangavadivel 06.05.1982 18.04.2000
2nd Lt.Pavalapiriyan Thillaipodi Alagaiyah 22.04.1979 21.04.2000
2nd Lt.Regavaran Kanagasavai Kukenthiran 27.12.1984 20.12.2000
2nd Lt.Kanna / Keerhigan Nanthakumar Karunakaran 22.06.1974 22.02.1996
Arunan Selvanayagam Mohanachandiran 24.04.1968 12.11.1996
Capt.Arulkumar Ponnuthurai Varathan 05.10.1970 12.11.1996
Capt.Sathurukkan / Vimalan Thomsan Theyvathasan 29.10.1977 04.08.1999
Gowshigan Kanagasavai Unknown 1986 / 87
Ragu Unknown 1986

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் மூத்த போராளியான ரம்போ பிரசாத் என்று போராளிகளாலும் தமிழ் மக்களாலும் விரும்பப்பட்ட கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார் அவர்களின் வரலாறு தமிழீழ மண்ணில் எழிதில் அழிந்து விடாது. இவர் லெப்.கேணல். நீலனுடன் இந்திய மண்ணில் 5வது பயிற்சிப் பாசறையில் தனது பயிற்சியை நிறைவு செய்தார். இவரது போர்த் திறன் பற்றி கேணல். கிட்டு லெப்.கேணல். குமரப்பா அருணா அண்ணன் அவர்களால் பலமுறை பாராட்டப் பட்டிருக்கிறார். இருந்தும் ஒரு சிலரின் நயவஞ்சகத்தால் அமைப்பை விட்டு வெளியேறிய இவ் உயரிய போராளி எதிரியின் கையில் சிக்குண்டு சிதைக்கப்பட்டான். எம் மண்ணுக்காகவும் எம் மண்ணின் விடிவுக்காகவும் புறப்பட்ட இவ் வேங்கை வெங்களம் ஆடி அடங்கியது. இவரது குடும்பமே தமிழீழ விடுதலைக்காக கொடுத்த விலை அதிகம். இவரது இளைய சகோதரர் முரளி 16.06.1990 அன்று களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலில் மாவீரரானார்.

இவ் வீரனுக்கு எமது மக்களின் வீரவணக்கம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக