யாழ் தீவகம் சாட்டியில் மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழிப்பு
தாயக விடுதலைக்காக போராடி தம் இன்னுயிர்களை ஈகம்செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கபட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் வழிபாட்டுதலங்கள் என்பன சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் தீவகத்தில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை பசில் ராஜபக்சவே முன்னின்று செய்வதாகவும், இப்படியான இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறீலங்கப்படையினரின் போர் வெற்றி நினைவு தூபிகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது தமிழர்களின் இதயங்களில் என்றும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் உள்ள சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயக விடுதலைக்காக போராடி தம் இன்னுயிர்களை ஈகம்செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கபட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் வழிபாட்டுதலங்கள் என்பன சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் தீவகத்தில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை பசில் ராஜபக்சவே முன்னின்று செய்வதாகவும், இப்படியான இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறீலங்கப்படையினரின் போர் வெற்றி நினைவு தூபிகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது தமிழர்களின் இதயங்களில் என்றும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக