திங்கள், 31 ஜனவரி, 2011

















தம்பியின்படை வெல்லட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
தம்பி வா ! தலைமை ஏற்க வா!
தமிழீழம் மீட்க தடை உடைத்து வா !
வவுனியாவுக்கு வா! வலிமை சேர்க்க வா!

முள்ளி வாய்க்கால் போர் முற்றுப் பெறவில்லை.
மூண்டேலும் நாள் வெகு தூரமில்லை
தமிழனை எதிர்க்கும் பீரங்கி குண்டு
சமையல் அறையின் முள்ளங்கி தண்டு.

வானத்தை கிழிக்கும் வான் படை எங்கே?
ஐம்புலன்களை அடக்கும் ஐந்தாம் படை எங்கே?
கடல் அலைகளை அடக்கும் கடல் புலி படை எங்கே?
பேரழிவுகளை ஏற்படுத்தும் பெண்புலிப் படை எங்கே?
தமிழீழம் மீட்க்கும் தற்கொடைப் படை எங்கே?

அயல் நாட்டு நீதிமன்றம் அரசியல் இயக்கம் என்று
அங்கீகாரம் வழங்கியது
தமிழ் நாட்டு நீதி மன்றமோ தகர்க்க நினைக்கிறது
தம்பி உன்னை அயல் நாடு அள்ளி அணைக்கிறது
தம்பி தமிழ் நாடோ தள்ளி வைக்கிறது.

அங்கு கோத்தபாய ராஜபக்சேவுக்கு
கொலை செய்ய ஆசை -அந்த
கொலைகார பயலுக்கு இங்கு
கோவில்களிலே பூஜை.

கோபாலபுரத்து கொத்தடிமைக்கு
கொள்ளை அடிக்க ஆசை
இனம் மானம் உள்ளவனுக்கு கேட்கும்
இனத்தை அழிக்கும் ஓசை.

கலிங்கத்து போர் வீரர் களம் அமைத்தால்
கல்லறையை உடைத்து களத்திற்கு வருவார்கள் .
மானத்து காக்க, மரணத்தை சந்திப்போம்
துரோகத்து தூள் தூளாக்க துணை நிற்போம்
துன்பம் வரினும் துட்சமென எதிர் கொள்வோம்.
தம்பியின் தலைமையை ஏற்போம்,தடைகளை உடைப்போம்
தம்பியின் படை வெல்லட்டும் தமிழீழம் மலரட்டும்.
அன்புடன் ரங்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக