புதன், 27 ஜனவரி, 2010

Belly Problem?

belly.jpg

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

தொந்தி ஒரு தொந்தரவா?

இதய நோயைத் தவிர்க்க:

உணவில் தினமும் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினமும் குடிக்கும் குடிகாரர்கள் உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.

ஒயின் நல்லது!

பீர், பிராந்தி, விஸ்கி இவற்றைவிட ஒயின் நல்லது என்று நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் தன் ஆய்வில் தெரிவிக்கிறது. 35 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் செல்களைக் கெடுத்துச் சீரழிக்கும் ‘தியோபார் பிட்யீரிக் ஆசிட் ரியாக்டிவ், சப்ஸ்டென்சன்ஸ்’ என்ற பொருள், ஒயின் சாப்பிடுகிறவர்களின் இரத்தத்தில் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள் அதிகமாக அதிகமாகப் புற்றுநோய் ஏற்படும்.

தினமும் பாயசம் சாப்பிடுங்கள்!

தினமும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உப்பு போன்றவை இருந்தால் உடல் வளர்ச்சி, மூளையில் தெளிவு, சுறுசுறுப்பு முதலியவை தொடரும். இதற்காக மத்திய அரசின் சமுதாய உணவு மற்றும் ஊட்டச்சத்து விரிவுத்திட்டம், எளிய பாயசம் ஒன்றைச் சிபாரிசு செய்துள்ளது. குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியத்தைத் தரும் இந்த எளிய பாயசத்திற்கு பச்சைப்பருப்பு 150 கிராம், நிலக்கடலை 50 கிராம், வெல்லம் சிறிதளவு இந்த மூன்றுமே போதும். வறுத்த பாசிப்பருப்பு குழையும் வரை வேகவைக்க வேண்டும். சுத்தப்படுத்திய நிலக்கடலையைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து அத்துடன் 5 பங்கு தண்ணீர் சேர்த்து வெந்த பருப்புடன் சேர்க்கவும். பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி இதமான சூட்டில் அருந்தவும். இதற்கு நிலக்கடலை பால் பாயசம் என்று பெயர். உடலுக்கு மிக நல்லது.

உருளைக்கிழங்கில் இருக்கிறது உற்சாகப் புதையல்!

உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸாகச் சாப்பிடுவதைவிட வேக வைத்து தோலுடன் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கின் சதைப்பகுதியில் மரபணுக்கள் உடையாமல் பாதுகாக்கக் கூடிய வைட்டமின் சி இருக்கிறது. தோல், மூளை, இதயத் தசைக்கு தேவையான பொட்டாசியம் உப்பும், எல்லா உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் ‘பி’ வைட்டமின்களும் உள்ளன.

இதயம் வேகமாகத் துடிக்கிறதா?

பதட்டமாக இருக்கிறதா? திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமமா? நெஞ்சு வலியா? இதய சம்பந்தமாக அடிக்கடி டாக்டரை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் மக்னீஷியம், பொட்டாசியமும் மிகவும் குறைவாக இருக்கிறது! போதுமான அளவு இவை உடலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு சாப்பிடுங்கள். இவற்றின் மூலம் பொட்டாசியம் கிடைத்துவிடும். மக்னீஷியம் உப்பு நன்கு கிடைக்க பரங்கி மற்றும் சூரியகாந்தி விதைகள், பசலைக்கீரை முதலியவற்றை நன்கு உணவில் சேருங்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மருந்துச் செலவு குறையும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் இவற்றில் இல்லை.

தொந்தியைத் தொலைக்க…

அதிக உணவால் உடலில் கொழுப்புத் தங்கி அதன் விளைவாகத் தொந்தி விழுகிறது. தொடைகள் பெருக்கின்றன. இதைத் தடுக்கத் தினமும் காலையிலும், மாலையிலும் ஓட வேண்டும். எப்போதும் சாப்பிடும் உணவில் 50% குறைக்க வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சியை விட திடீரென்று தொந்தியும், தொடைகளும் பெரிதாகி விட்டதால் - ஓடித்தான் இவற்றைக் குறைக்க வேண்டும். இப்படி ஓடுவதால் நீரிழிவு, இதயநோய் முதலியன ஏற்படுவதை தொந்தி, தொடை பெரிதாகி வருபவர்கள் தடுக்க முடியும். டோக்கியோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த உண்மை இது.

பசிக்காமல் இருக்க…

அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து உணவு வகைகளைச் சாப்பிட்டால், வேகமாக உடலின் எடை எளிதாகக் குறையும். ஆனால் விரைவில் பசி எடுக்கும். மாவுச்சத்து உணவு வகைகளை ஒப்பிடும்போது, லெண்ட்டில் பீன்ஸ் வகைகள் மெதுவாக உடலில் ஜீரணிக்கப்படுவதால், பசி எடுப்பது குறைகிறது. இதே போல் சர்க்கரை சேர்ந்துள்ள காபி, டீ. ஐஸ்கிரீம் ஆகிய இவற்றுள் எதைச் சாப்பிட்டாலும் அடுத்த இரண்டு மணி நேரம் வரை பசிக்காது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கொண்டை கடலை, பீன்ஸ் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீரிழிவு நோய் இல்லாத பருமமான மனிதர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க, கார்போ ஹைட்ரேட் உள்ள அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு முதலியவற்றை கடலை விதைகளுடன் நிறையச் சேர்த்து வந்தால் போதும். இதனால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். நிறையச் சாப்பிட்டாலும் உடலில் கொழுப்புச் சேராது.

மாட்டிறைச்சி நல்லதா?

மாட்டிறைச்சி இதயத்திற்கு நல்லதல்ல என்பார்கள். இது உண்மையில்லை. ஒரு தடவைக்கு அறுபது மில்லி கிராம் மட்டும் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நல்லது. இதயத்திற்கும் கோளாறு வராது. ஐந்து வகையான பி வைட்டமின்கள் இதில் உள்ளன. குறிப்பாக தாவரங்களில் இருந்து கிடைக்காத B12 வைட்டமின் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. இது தவிர, துத்தநாக உப்பும், இரும்புச் சத்தும் கிடைக்கிறது. எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிக்கிற சைவர்களும், மாட்டிறைச்சியில் உள்ள இந்த வைட்டமின்களையும் தாது உப்புக்களையும் பெற வேண்டுமா? கைக்குத்தல் அரிசி, சோயாபீன்ஸ், பாசிப்பருப்பு, பாதாம்பருப்பு, பட்டாணி, சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ் மாவு, உருளைக்கிழங்கு, தேங்காய் ஆகிய இவற்றின் மூலம் இச்சத்தினைப் பெறலாம். பி12 வைட்டமினை பால், தயிர் மூலமும், ஊசி போட்டுக் கொள்வதன் மூலமும் எளிதில் பெறலாம்.மிளகாயை அளவோடு சேருங்கள்!

இந்தியாவில் 1150 அரிய மூலிகைகள் உள்ளதாக 1999இல் பட்டியலிட்டுள்ளனர். மேலும் பட்டியலை வளப்படுத்த மலைகளில் உள்ள மூலிகைகளை ஆராய்ந்து வருகின்றனர். இவற்றில் உணவுக்கு ருசியாகவும் உடலுக்கு மருந்தாகவும் உள்ள மஞ்சள், மிளகாய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம், வெந்தயம் முதலியவற்றைக் குறிப்பாகச் சொல்லியுள்ளனர். அளவோடு சேரும் மிளகாயால் வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உமிழ் நீர் நன்கு சுரந்து இரைப்பையும், குடலும் நன்கு செயல்படுகின்றன.

இதனால், செரிமானம் தங்கு தடையின்றி நடந்து மலச்சிக்கல் என்ற பேச்சே இல்லாமல் போகிறது.

மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!

மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள். மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.

மூட்டு வலி எதனால்?

உடற்பயிற்சி, வாக்கிங் செல்பவர்களுக்கு மூட்டுக்களில் அடிக்கடி வலி வந்தால், இவர்கள் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். உடல் உபாதை உள்ளவர்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் ஆகியோர் முப்பது நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயிற்சியைக் செய்தாலும் அது உடலுறுப்புகளை வற்புறுத்தி துன்புறுத்தி மூட்டுக்களில் வலியைக் கொண்டு வரும் செயலாகும். இதை தவிர்க்கவும்.

"தீத் தமிழன்...!"

"தற்கொலை-கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு "

எனக்கு கைப்பேசியில் அடிக்கடி மின்னஞ்சல் பார்க்கும் கெட்ட பழக்கம் இருக்கிறது.29-01-09 அன்று வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்த, நான் யாரோ ஒரு முத்துக்குமார் என்பவர் இவ்வளவு அதிகாலையில் ,காலை 7.40 மணிக்கே மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாரே,அவர் நம் இமெயில் குழுவுக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் அது. அது தான் கடைசி மின்னஞ்சலும் கூட என்று எல்லாம் முடிந்த பிறகுதான்
தெரிந்தது.கலங்கிப்போனேன்..!


அவசரத்தில் அதன் அர்த்தங்களை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் அழித்த மின்னஞ்சலை மீண்டும்,மாலை தோண்டி எடுத்து மீட்டு திரும்பத் திரும்ப படித்த பிறகு தான் எனக்கே புரிந்தது.உயிர்வலியோடு தன் தற்கொலை செய்தியையும் முன்னமே பதிவு செய்து அதையே சிறு சிறு துண்டறிக்கையாக,அதே மின்னஞ்சல் செய்தியை அச்சிட்டு,நுங்கம்பாக்கத்தில் இருக்கிற மத்திய அரசு இயங்குகிற
கட்டிடங்களுக்கு முன்னால், எல்லோரிடமும் அந்த துண்டறிக்கைகளை கொடுத்து விட்டு, தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டான்,என்று.


அவர் மின்னஞ்சலில் வந்த அந்த தற்கொலைச் செய்தீ:


என் உடலை காவல்துறை அடக்கம் செய்து விட முயலும்,விடாதீர்கள்.என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ போஸ்ட்மார்டமோ செய்யப் போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மானவர்களே உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்


அவன் எரிந்து கரிக்கட்டையாக மண்ணில் சாய்ந்த போது நேரம் காலை 10 மணிக்கு மேல் ஆயிருந்தது.


100 விழுக்காடு காயம் என்பதால்,காப்பற்ற முடியவில்லை என்கிறது மருத்துவ அறிக்கை.


"இன்னும் ஒரு மணி நேரந்தான் உயிரோடு இருப்பேன் அதற்குள் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர்களிடம் தெளிவாக,வார்த்தை தடுமாறாமல் பேசியிருக்கிறான்.


"இவ்வளவு புத்திசாலியான நீ சாகத் துணியலாமா? "என்று கேட்டிருக்கிறது காவல்துறை.


என்னைப் போல நிறைய புத்திசாலிகள் இலங்கையில் சாகிறார்களே,அந்த சாவைத் தடுக்கத்தான் இந்த முடிவு என்று மரணம் வாக்கு மூலம் வழங்கிய பிறகு...


உயிர்பிரிந்த நேரம் மதியம் 12.30


முத்துக்குமார் தங்கியிருந்த தன் தங்கை தமிழரசியிடம், முத்துக்குமாரனின் போட்டோ கேட்டு வந்த பிறகுதான் தெரிந்ததாம் தீக்குளித்த செய்தி!


காலை அய்ந்து மணிக்கே எழுந்து வீட்டை விட்டே போய்விட்டதாக முத்துக்குமாரனின் தங்கை கதறுகிறாள்.


அவன் கைப்பேசி எண்ணும் அவன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.


எதையாவது பேசி அவன் சாவைத் தடுத்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது.


எப்படியாவது,எதை செய்தாவது வாழ்ந்து விட வேண்டும் என்று அர்த்தம் இல்லாமல் வாழ்கிற மனிதர்களில்,மற்றவர்களுக்காக வாழ்வது தான் அர்த்தம் உள்ள வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துக்குமாரனின் இழப்பு என்னை கொஞ்சம் அதிகமாவே பாதித்தது.


உயிரோடு இருந்தால், இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் என்னை வாட்டுகிறது.


ராஜீவ்காந்தி கொலையைக் காட்டி விடுதலைப்புலிகளை எதிர்க்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் யாரும் ராஜீவ்காந்தியோடு செத்துப் போகவில்லை ஏன்? என்ற ராஜீவ்காந்தி கொலையை பற்றி விசாரித்த விசாரணை கமிஷன் கேட்ட கேள்விக்கு அந்த காங்கிரஸ் கட்சி, இன்று வரை பதில் சொல்ல வில்லை.


இதையும் முத்துக்குமாரன் தன் இறுதி அறிக்கையில் பதிவு செய்திருக்கிறான்.


தனக்குள்ள எக்கச்சக்கமான சொத்துகள் அரசுடமையாகி விடும் என்ற கேவலமான அச்சத்தில் சுதந்திரபோராட்ட வீரரானவர் பண்டித ஜவஹர்லால் நேரு என்கிறது,சரித்திர உண்மை.


இதே காரணத்திற்காகத்தான்,தமிழ்நாட்டைச் சேர்ந்த மூப்பனரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்கிறது ,சரித்திரம்.


இப்படிப்பட்ட அயோக்கிய ஏமாற்றுப் பரம்பரையில் பிறந்த ராஜீவ் காந்தி மட்டும் எப்படி யோக்கியமானவராக இருக்க முடியும்?.அந்த உத்தம காந்தி மீது நிரூபிக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு, அவர் இறந்த பிறகும் கூட,இன்னும் உயிரோடு இருக்கிறது.


தற்கொலை செய்து கொள்ளாமல்,வேறு ஏதாவது வழியில் அவன் தன் எதிர்ப்பை காட்டியிருக்கலாம் என்று ஒரு கருத்து ஊர்வலமாக வருகிறது...

எதை செய்திருந்தால்,இலங்கையில் அமைதி திரும்பும் என்ற கேள்விக்கு ,இங்கே யாரிடமும் நேர்மையான பதில் இல்லை.


மாலைப் பத்திரிக்கைகளில் எந்த பத்திரிக்கைகளிலும் முத்துக்குமரனின் போட்டோவோடு செய்தி வெளியிடவில்லை.


ஆனால் நம் வலைப் பதிவர்கள்,நிறைய பேர் நிருபர்களாக இருப்பதாலே என்னவோ புகைப்படத்தை தங்களின் வலைத் தளங்களில்,பத்திரிக்கைச் செய்திகளை விட முந்தி, அந்த படங்களை தங்களின் தளங்களில்,உடனே வலையேற்றி இருந்தார்கள்,அந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி, வேகம்...


இது இப்படி இருக்க...


இலங்கைப் போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக,அடுத்த தலைமுறையிலும் தொடரும் வெட்கக் கேடும் இதே பூமி பந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
நமக்கு பக்கத்திலேயே...


பத்திரிக்கைகளில் ,சென்னை பதிப்பு மாலைமுரசு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு முத்துக்குமாரின் செய்திகளை வெளியிட்டு இருந்தது.


விடுதலைப் புலிகளை காட்டி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வாய் திறப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


மனிதர்கள் தான் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்...


பேசத் தெரிந்த மிருகங்களே!...
நீங்கள் கொஞ்சம்
மவுனமாக இருங்கள்.


தமிழ்நாடே இந்த நெருப்புச் செய்தி கேட்டு சுடுகாட்டு அமைதியோடு இருந்த சமயத்தில்...


ஒரு கொடூரமான காமெடி விழாவும் சிறப்பாக நடந்தது.


தன் சொந்த சகோதரன் வளர்ச்சியைக் கூட பார்க்க சகிக்காமல்,தயாநிதி மாறனின் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை சேர்ந்த இரண்டு பேரை ஆட்களை ஏவி கொன்ற,"ஐந்தமிழ் அறிஞர்" (சென்னையில் கலைஞர் கட்சியினரின் சுவரோட்டி வாசகம் ) கலைஞரின் மகன்,இப்படி எதற்கும் அஞ்சாத "அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி" அவர்களுக்கு(கிட்டத்தட்ட அரசு பணியாளராக இருந்தால் ஓய்வு பெறும் வயது)தன் 58 ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தார்.


நானும்,என் அண்ணன் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கலைஞரின் இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் மைக் பிடித்து புளந்து காட்டியிருக்கிறார்.


யாரைக் கொல்ல..?


வாழ வேண்டிய வயதில் ஒரு இளைஞன்,இங்கே ஒரு பொது பிரச்னைக்காக கருகிக் கரிக்கட்டையாக கிடக்கிறான்.


நாட்டுக்காக உழைப்பேன் என்று நா கூசாமல் ஆட்சியைப் பிடித்த கூட்டம் நாடே இழவு வீடாகக் கிடக்கும்போது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கிறது,.


இந்த வக்கிரப்புத்திசாலிகளின் கைப் பிடிக்குள் தான் தமிழ்நாடே இருக்கிறது...


என்னக் கொடுமைங்க ,இது... ?



கண்ணீர் துளிகள்...


மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.
(நன்றி : ஜூனியர் விகடன்)


கவிஞர்,பாடலாசிரியருமான தாமரை,நடிகர் சத்யராஜ்,நடிகர் வடிவேல் போன்றவர்கள் உடலைக் கண்டு கதறியழுதார்கள்.

முத்துக்குமாரின் மரணம் போரில் மாண்ட விடுதலைப்புலிகளுக்குச் சமம்.
-தொல்.திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து விட்டு இறந்திருக்கிறார்.
-இயக்குநர் பாரதிராஜா

விடுதலைப் புலிகள் தான்,இலங்கைத் தமிழர்கள்.இலங்கைத் தமிழர்கள் தான்,விடுதலைப் புலிகள்.இன உணர்வு தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என்று தடை போட யாருக்கும்,எவனுக்கும்,இங்கே உரிமையில்லை.
-இயக்குநர் ஆர்.சுந்தராஜன்.

அவன்
உடலில்
ஏற்றிக் கொண்ட
தீயை
நாம் உள்ளத்தில்
ஏற்றிக் கொள்வோம்..!
-மாலை முரசு,சென்னை பதிப்பு.

நீ இறந்தும் வாழ்கின்றாய்...
நாங்கள்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்...
பிணங்கள்..!


-ச.ராமானுசம்
www.nellairamanujam.blogspot.com

ஜனவரி 31-2009 அன்று ,சென்னை கொளத்தூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம்,ஏழே கால் மணிநேர ஊர்வலத்திற்குப் பிறகு இரவு 10.45 மணிக்கு மூலக் கொத்தளம் வந்தடைந்தது.


இறுதி ஊர்வலத்திற்கு எந்த அரசியல் கட்சியும் கொடிபிடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.




எம்மை மண்ணுக்குள் புதைத்தாய்...

எம் மண்ணை
எங்கே புதைப்பாய்...?

__உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

www.beyouths.co.cc







எவன் ஒருவன்



எவன் ஒருவன்,

தன் கண்ணுக்கு முன்னாள்

நடக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறானோ....

அவனே என்னை சேர்ந்தவன்.....!


_சே குவேரா




புலி பதுங்கும், ஒதுங்காது...!




விடுதலைப் புலிகளிடம் ஆயிரக்கணக்கான கொரில்லாப் போர் முறை தெரிந்த போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தலைமறைவாக இருந்து, தாக்கி வீழ்த்துவதில் வல்லவர்கள் .

இதனால், எந்த சமயத்திலும் சிங்கள ராணுவம், அந்த முகம் தெரியாத எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.

தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றால், சிங்களர்களும்,பத்திரமாக, சுதந்திரமாக வாழ்ந்து விட முடியாது...

என்ற உண்மையை சிங்களர்களே ஒத்துக் கொள்கிறார்கள்....





போராளிகள்

செத்துக் கொண்டிருக்கும்

மண் என்கிறார்கள்...



எம் மண்ணை ....



திருத்தினேன்

போராளிகள்

பிறந்து கொண்டிருக்கும் மண்



_காசி ஆனந்தன்




புலிகளுக்கு மகிந்த விடுத்த சவாலுக்கு தமிழகத்தில் உணர்வுள்ள தமிழன் ஒருவரிடம் இருந்து சவால்!

This item was filled under [ Sri Lanka ]


சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.

“தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டும்!”. மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார்.

புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்?

இவருடைய இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் மனிதாபிமான நடவடிக்கையாம்? மருத்துவமனை, பள்ளிக்கூட வாகனத்தின் மீது தாக்குதல், பத்திரிக்கையாளர்கள் கொலை, தமிழ் எம்.பிக்கள் கொலை, வெள்ளை வேன் ஆட்கடத்தல்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொது மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கும் மகிந்த இன்று உத்தமர் போல் யுத்த தர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்.

மகாபாரதப் போரில் வீர அபிமன்யுவை 7 மகா ரதிகர்கள் சூழ்ந்து நின்று தாக்கியதைப் போல இன்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல், வியட்நாம் நாடுகளிடம் பிச்சையெடுத்துப் பெற்ற ஆயுதங்களுடன் போரை நடத்தும் ம்கிந்தவுக்கு போர் தர்மம் குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது?

தர்மத்திற்கு கட்டுப்பட்டதால்தான் கொழும்பில் வான் தாக்குதலை நடத்திய வான் கரும்புலிகள் மக்களை குறி வைக்காமல் இராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு பிரபாகரனுக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. அப்படி நடத்தியிருந்தால் சிங்களவருடைய நிலைமை என்னவாகியிருக்கும்?

கட்டுநாயகா, அனுராதாபுரம் விமானப்படைத்தளத்தை தகர்த்த கரும்புலிகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினால் இலங்கை ஒரே நாளில் அழிந்து விடும். அப்படி செய்ய தூண்ட வேண்டாம். என்றைக்காவது புலிகள் சிங்கள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா?

Youtube, Wikimapia, Metacafe போன்ற இணையதளங்களில் தமிழர்களையும், தேசியத்தலைவர் பிரபாகரனையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி எழுதுவது யார்? வெளிநாடுகளில் போராட்டம் செய்யும் தமிழ் மக்களின் மீது வன்முறையை ஏவி தேசியக் கொடியை பறித்தது யார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் மகிந்தவிற்கு அறை கூவல் விடுக்கிறோம்.

1. இந்திய, இஸ்ரேல், பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி இல்லாமல் எங்களோடு நேரடியாக மோதி ஜெயிக்க முடியுமா?

2. கீழே செல்லும் மனிதர்களை கூட அடையாளம் காணும் இந்திய செயற்கைக்கோள்களின் உதவியின்றி உன்னால் போர் நடத்த முடியுமா?

3. உளவு சொல்லி போட்டுக் கொடுக்கும் இந்திய உளவுத்துறையின் உதவியின்றி உன்னால் போரிட முடியுமா?

4. ஜப்பான், சீனாவிடம் பணம் பெறாமல் இலங்கையின் பொருளாதாரத்தைக் கொண்டு உன்னால் போரிட முடியுமா?

5. டென்சில் கொப்பேகடுவவை கொன்ற புலிகளின் போர்த்தந்திரத்தை காப்பியடித்து ஆழ ஊடுருவும் படையணியை உருவாக்கினாயே? ஏன் உனக்கு சொந்த மூளை கிடையாதா?

6. புலிகளின் ஓயாத அலைகள் தாககுதலை அப்படியே காப்பியடித்து இப்போது புதுக்குடியிருப்பில் இராணுவத்தை அலை அலையாக மோத விடுகிறாயே? ஏன் உன் சொந்த அறிவை வைத்து சண்டையிட முடியுமா?

7. தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்களை மிரட்டுவதற்காக அவர்களுடைய உறவினர்களை கடத்துகிறாயே? அது நீதியா?

8. பத்திரிக்கை அலுவலகங்களின் மீது குண்டுதாக்குதல் நடத்துகிறாயே? அது நியாயமா?

9. சென்னை தாம்பரத்தில் சென்று விமானிகளுக்கு பயிற்சி பெறுகிறாயே? இஸ்ரேலிடம் கெஞ்சி போர் விமானங்களை பெற்று வந்தாயே?

10. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த சீனாவையும், ரஷ்யாவையும் காலைப் பிடித்து கெஞ்சுகிறாயே?

11. உலக வல்லரசுகளுடன் நீ கூட்டு சேர்ந்ததால் புலிகள் மக்களுடன் கூட்டு சேர்ந்திருகிறார்கள். வல்லரசுகளுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நீ சொந்த பலத்தில் மோதிப்பார்க்க தயாரா?

இத்தனை பேருடன் கூட்டு சேர்ந்து போரிட்டும் ஏன் இதுவரை ஜெயிக்க முடியவில்லை?

இந்திய இராணுவத்தையே தோற்கடித்தவர்கள் புலிகள். அவர்களை உங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது.

பல தடவைகள் நிபந்தனையற்ற் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தாகிவிட்டது. அதை நீங்கள் உதறித் தள்ளிவிட்டீர்கள். இதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இனிமேலும் தர்மம், நியாயம் பார்த்து போரை நடத்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இனிமேல் பொது மக்கள், இராணுவம் என்று பிரித்துப் பார்க்கப் போவதும் இல்லை. போரை வெல்ல இனிமேல் அனைத்து வழிகளும் கையாளப்படும்.

வன்னிப் பகுதியை விட்டு இராணுவம் மீளவும் திரும்பப் போவதும் இல்லை. 2001ல் ஆனையிறவில் மாட்டிக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற இந்தியா ஓடி வந்தது.அதை புலிகளும் நம்பினார்கள். தொலையட்டும் என்று பிழைத்துப் போக விட்டார்கள். இனிமேல் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

3700 பேர் சாவதை கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேசத்திற்கு புலிகளை தடுக்க எந்த உரிமையும் இல்லை. போர்தான் வேண்டும் என்று மகிந்தவை ஆதரித்து ஓட்டு போட்ட சிங்களவர்களும், அரசும், இராணுவமும் அதற்குரிய விலையை கொடுத்தே ஆக வேண்டும். கொடுப்பார்கள்!.


http://upload.wikimedia.org/wikipedia/ta/8/89/Sky_tigers.JPGவான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.



இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினரும், புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணியும். PDF Print E-mail
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல்இ இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது.
வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.


புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின் அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.


கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்தியது. அன்று வான் புலிகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் அடுத்த தடவையாவது புலிகளின் வானூர்திகளை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசும் படைத்தரப்பும் குறியாகவுள்ளன.

புலிகளின் முதல் தாக்குதல் நடைபெற்று சுமார் ஒரு மாதங்களாகிவிட்ட நிலையில் அவர்கள் அடுத்த தாக்குதலை எங்கேஇ எப்போது நடத்துவார்களென்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தாக்குதலின் போது படையினர் அதனை எவ்வாறு எதிர்கொள்வரென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பும் பேசினாலும் அது சாத்தியப்படாததொன்றாகவேயுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுகள் நடைபெற வேண்டுமென புலிகள் வலியுறுத்துகையில் அந்த உடன்பாட்டின் அடிப்படையில் பேச்சுகள் நடத்தத் தாங்கள் தயாரில்லையென அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டதுடன் அந்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசுவதென்றால் கிழக்கில் இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து அவர்கள் விலக வேண்டும். போர்நிறுத்த உடன்பாடானது வடக்கு - கிழக்கில் இரு தரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் எல்லை நிர்ணயம் செய்கிறது. இதனால்இ இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதாயின்இ இந்த உடன்பாடு கைச்சாத்திட்ட காலப்பகுதியில் இருதரப்பும் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்தந்த இடங்களுக்கு அவர்கள் செல்ல வேண்டும்.

ஆனால்இ கிழக்கில் புலிகள் வசமிருந்து பல பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டதாகக் கருதும் அரசுஇ அந்தப் பிரதேசங்களை புலிகளிடம் மீண்டும் ஒப்படைக்கத் தயாரில்லை. இதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசத் தயாராயில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அதேநேரம்இ போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்தும் விலக அரசு தீர்மானித்துள்ளது. தற்போது கிழக்கில் பெற்ற வெற்றியைப் போல் வடக்கிலும் பெற முடியுமெனக்கருதும் அரசுஇ வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளைத் தொடங்க இந்த உடன்பாடு பெரும் தடையாகவேயிருக்குமெனக் கருதுகிறது. இதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய அரசு விரும்புகிறது.


சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால்இ புலிகள் இன்று பலமிழந்துவிட்டதாகக் கருதும் அரசுஇ இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும் தடையாகவிருக்குமெனக் கருதுகிறது.

ஆனாலும்இ இந்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாகத் தான் விலகிவிடுவதை அரசு விரும்பவில்லை. உடன்பாட்டின்படி 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்துவிட்டு விலகிவிடலாம். ஆனால்இ அது சர்வதேச ரீதியில் தங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமெனக் கருதும் அரசுஇ அதனை மக்களைக் கொண்டு ரத்துச் செய்ய விரும்புகிறது.


போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அதன் மூலம் உடன்பாட்டை நிராகரித்துவிடத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்இ மக்கள் ஏற்காத உடன்பாடொன்றை தாங்களும் ஏற்கப் போவதில்லையெனக் கூறி அதிலிருந்து விலகி முழு அளவில் புலிகளுக்கெதிரான போரில் இறங்கிவிடலாமெனக் கருதுகிறது.


அண்மையில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில்இ இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமென பெருமளவு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கிழக்கில் அண்மைக் காலமாக படையினர் பெற்ற வெற்றியும் தற்போதைய யுத்தமுனைப்புகளுமே தென்னிலங்கை மக்களை இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது.

இந்த மக்கள் கருத்துக் கணிப்பும் போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அரசைத் தூண்டியுள்ளது. இதன்மூலம் சமாதான முயற்சிகளை விடுத்து புலிகளுக்கெதிராக முழு அளவில் போரொன்றை தொடுக்க அரசு தீர்மானித்துவிட்டது தெளிவாகிறது.


பல்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை புலிகளுக்கெதிரான போரில் பயன்படுத்திவிட வேண்டுமென்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. மக்களே சமாதான முயற்சியை விரும்பாது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்குமாறு அனுமதி வழங்குகையில் பேச்சுக்கான தேவையில்லையெனக் காண்பிக்கவும் அரசு விரும்புகிறது.

போர்நிறுத்த உடன்பாடானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டால்இ அது சமாதான முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கும் செயலென்பதுடன் வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசுக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகவே கருதப்படும். சர்வதேச ரீதியிலும் இதனை நியாயப்படுத்த அரசும் முயலும்.


போர்நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து போருக்கு அங்கீகாரம் வழங்கும் தென்னிலங்கை மக்களின் செயலானது யுத்தம் வடக்கு - கிழக்கில் மட்டுமே நடைபெற வேண்டுமென அங்கீகரிப்பதாயிராது. அது முழு நாட்டுக்குமுரியதாயிருக்குமென்பதை அவர்கள் உணர வேண்டும்.

அதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிராகரிப்பதென்பது முழு நாட்டையும் போருக்குள் தள்ளிவிடுவதற்கு தென்னிலங்கை மக்கள் வழங்கும் அங்கீகாரமாகவேயிருக்கும்.


வடக்கு - கிழக்கில் அண்மைக்காலமாக அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகையில் புலிகளும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். வான் புலிகளின் வருகையானது இதனையே காட்டுகிறது.

இதைவிட யாழ். குடாநாட்டிற்குள் புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணி' ஊடுருவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது. கரும்புலி அணி போன்றல்லாது இந்த ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யின் செயற்பாடிருக்குமென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.


இடுப்புப் பட்டியில் வெடி குண்டைப் பொருத்திக் கொண்டு இந்த அணி தனது தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும். படையினரிடம் இவர்கள் பிடிபடும் பட்சத்தில் சயனைட் உட்கொள்ள மாட்டார்கள். மாறாகஇ தங்கள் இடுப்புப் பட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் குண்டை வெடிக்க வைத்து தாங்களும் இறப்பதுடன் தங்களைப் பிடிக்க முயலும் படையினரையும் கொல்வதே இந்தத் ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யின் நடவடிக்கையாக இருக்கும்.

போராளி ஒருவர் சயனைட் அருந்தி இறப்பதை விட படையினருக்கும் இழப்பை ஏற்படுத்தும் புதிய உத்தியில் புலிகள் இறங்கியுள்ளனர். இதனைப் படையினரும் அறிவர். ஏற்கனவேஇ இரு சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன.


ஆனைக்கோட்டையிலும் யாழ் நகரில் நாவலர் வீதியிலும் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை கரும்புலித் தாக்குதலென படையினர் கூறியிருந்தனர். ஆனால்இ இரு இடங்களிலும் படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்திவிட்டு தங்களையும் அழித்துக் கொண்டவர்கள் புலிகளின் ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யைச் சேர்ந்தவர்களே.


இதுபோன்று புலிகளின் பல்வேறு செயற்பாடுகளும் களமுனையில் படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்வதில் படையினர் தற்போது புதிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.


வான் புலிகளின் வருகை படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வான் புலிகளை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு - கிழக்கு எல்லைப்புறங்களிலுள்ள படைமுகாம்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அத்துடன்இ முக்கிய படைத்தளங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்படவுள்ளன.


மிகவும் தாழ்வாகப் பறக்கும் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்காக மிக நவீன ராடார்களை கொள்வனவு செய்வதிலும் அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. வான் புலிகள் மீண்டுமொருமுறை வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திவிடக் கூடாதென்பதில் படைத்தரப்பு தீவிர கவனம் செலுத்துகிறது. அதேநேரம்இ வான் புலிகளின் வருகையைத் தூண்டும் விதத்தில் வன்னியில் தினமும் இரவு பகலாக கடும் விமானத் தாக்குதலும் நடைபெற்று வருகிறது.

இந்தத் தாக்குதலால் புலிகள் சீற்றமடைந்து வடக்கு - கிழக்கில் அல்லது தெற்கில் எங்காவது பாரிய தாக்குதலொன்றுக்காக தங்கள் விமானங்களை அனுப்பும் போது அவற்றை தாக்கிவிட வேண்டுமென படைத்தரப்பு முனைப்புக் காட்டுகிறது. இதனைப் புலிகளும் நன்கறிவர். இதனால்இ படையினர் எதிர்பார்த்து காத்திருக்கையில் அவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பரென்றே கருதப்படுகிறது.


மட்டக்களப்பில் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியை கைப்பற்றிஇ கிழக்கில் புலிகளின் பாரிய தாக்குதல் பலத்தை முறியடித்து விட்டால் பின்னர் வடக்கில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியுமென அரசு கருதுகிறது. கிழக்கில் புலிகளின்இ மரபு வழிப் போர் முறையை முறியடிப்பதற்கான கடைசித் தாக்குதலை ஆரம்பிக்க படையினர் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால்இ வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு இரு தரப்பும் தயாராகிவிட்டன. மீண்டும் சமாதானப் பேச்சுகள் குறித்து பேச்சடிபட்டாலும் அது ஒரு கண் துடைப்பாகவேயிருக்கப் போகிறது. போர்தான் முடிந்த முடிவாகிவிட்டது.


இந்த யுத்தத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகையில் போர் மேலும் தீவிரமடையுமானால் அவர்களது நிலைபற்றி எடுத்துக் கூற முடியாதளவுக்கு அவலம் நிறைந்ததாயிருக்கும். இதனை உணர்ந்தாவது இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் தலையிடமாட்டாதா என அவர்கள் ஏங்குகின்றனர்.