புதன், 7 ஏப்ரல், 2010

தமிழர் படையணியின் உயர் நிலைத் தளபதிகள் உட்பட 384 போராளிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (04-04-2010) இன்றாகும்.


தமிழர் படையணியின் உயர் நிலைத் தளபதிகள் உட்பட 384 போராளிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (04-04-2010) இன்றாகும்.

கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற இன அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசின் முப்படைகளுக்கு எதிராக கடும்சமர் புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உயர்நிலைத் தளபதிகள் உட்பட்ட 384 போராளிகள் எதிரியின் கோளைத்தனமான கொடும் செயலால் இரசாயணக் குண்டு, மற்றும் நச்சுவாயுத் தாக்குதலுக்குள் சிக்குண்டு வீரமரணம் அடைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்ட நெருப்பாற்று தாக்குதல்கள் இடம்பெற்றன.

தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள். இதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள்.

இந்த சமரில் மட்டும் விடுதலைப்புலிகளின் உயர்நிலை கட்டளை தளபதிகள் பலர் உட்பட 384 போராளிகள் வீரகளமாடி மண்ணில் வித்தாகி வீழ்ந்தார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.
அன்றைய காலப்பகுதியில் சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு, தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை இராஜதந்திர நகர்வினூடு மேற்கொள்வோம்.

"பாதைகள் வளையாது... எங்கள் பயணங்கள் முடியாது... போகுமிடத்தை சேரும் வரைக்கும் பாதைகள் வளையாது... எங்கள் பயணங்கள் முடியாது"

Last Updated ( Sunday, 04 April 2010 01:27 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக