புதன், 27 ஜனவரி, 2010

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் சிவகுமார் அவர்கள்
.
2)தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
பசுபதி. ராதாகிருஸ்னன் ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)

3)தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
முத்தையன் கட்டு வலது கரை..

4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([u]கல்முனையில்[/u] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல்நடந்ததது)
லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர் (12-03- 1986 இல் வீரச்சாவு)

5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
மன்னார் கொண்டைச்சி(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,1990-06- 21 இல்

6)இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல்
விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?
லெப். மாலதி முதன் முதல் வீரச்சாவடைந்த பெண் போராளி
(இந்திய இராணுவத்துக்கு எதிரா கோப்பாயில் நடந்த சமரில் 1987)

ஆனால் இந்திய - புலிகள் போரில் முதல் வீரச்சாவடைந்த
போராளி அன்ரன்(1987)

7)விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானு}ர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?
1978-09-07 அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,
சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்கஇரத்மலானை வானூர்தி தளத்தில்
தரித்து நின்ற
"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக
....
லெப்பினன் கேணல் ராதா
அண்ணாவால் தான் அந்தக் குண்டு வைக்கப்பட்டாதாக
8)யார் இந்த ராதா?
தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். ....

9)வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் "வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?
அன்னபூரணா

10)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது கப்டன்" யார்?
{இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல "முன்னோடித் தாக்குதல்கள்"இல் பங்காற்றியிருந்தார்.தொண்டைமனாறில் சிறிலங்காப் படையினரின் சுற்றிவளைப்பின் போது தன்னை அழித்து வீரச்சாவு அடைந்தார் (1984இல்)}
கப்டன் லாலா ரஞ்சன் (19-07- 1984 இல் வீரச்சாவு)

11)தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?
கடற்கருப்புலி... லெப்பிரினன் கேணல் நளாயினி.. (சாகரவர்த்தனா கடற்கலத் தகர்பினில் வீரச்சாவடைந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக