வெள்ளி, 29 ஜனவரி, 2010

தீயான திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஆறரைக்கோடிமக்கள் அன்புடன் இருந்தபோதும்

ஆதரவற்றவராய் அழிந்தோம் ஆனாலும்
அரசியல்வேறு மக்கள்அன்பும்வேறு என்பதினை
அறியாதவரல்ல ஈழத்தமிழர்கள்.

நீறாகிப்போன உன்செயலால்-கண்ணில்
நீராகிநிற்கும் நாங்களும் நீங்களும் என்றும்
நீயாரோ நாம்யாரோ என்றல்ல -அடி
வேரால் இணைந்த உறவுகளல்லவா?

தேரான எம்விடுதலைக்கு தோளாகிஆளாகி
சீராகி வடம்பிடிக்கும் சிலகைகள்தானாகி- அயல்
ஊராகி உளம்உழும்ஏராகி உணர்வுப்பேறாகி
தீயாகிப்போனயே திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஓராண்டு நினைவாகும் உன் இன்நாளினிலே
தீராத எம்தாகம்தீர்க்காது தீந்தமிழராய் எமைப்பார்காது
பாரதமாதா தன்அன்புக்கரம்சேர்க்காது பகைவனாய்எமை
வேறாகிப்பார்க்கும்நிலையே நிஜமானதாயுள்ளதையா.

உன்னிலையில் பலபேர்கள் தம்முயிரைத் தந்தபோதும் -தமிழகமோ
தன்னிலையில் தன்பிடியில் தளராது தன்னலமாய் இருந்திடவே
வன்னிமக்கள் பட்டவதைவாழ்வை வகைகூறஇயலாது என்றும்
கன்னித்தமிழன் கண்ணின்று இக்கவலைதீராது தீராது.

சின்னச்சின்ன மழைத்தூறல்களாய் அன்பைசிந்துவோர் சிலரும்
கன்னமிடும் கள்வர்களாய் கைதரவருவோர்களாய் பலபேருமாய்
தன்னலவாதிகளாய் தரணியில் தர்பார்கள்இருப்பதினால்-இன்றுநாம்
என்னென்னவோவானாலும்..... எம்மிருள்கலையும்பொழுதுவிடியும்போது
உன்பெயரும் நன்றியுடன் உயர்வான பதிவுபெறும் மகிமையுறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக